…………………………………..

………………………………………

……………………………………
1910-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புகைப்படம் இது…
ஜெருசலேமின் – அல்-குத்ஸ் நகரத்தின் புகழ்பெற்ற ‘தாவூத் வீதி’ (David Street). அங்கே கம்பீரமாக வீற்றிருக்கிறது ஜெர்மன் பொருளாதாரத்தின் அடையாளமான ‘டாய்ச் பாலஸ்தீன வங்கி’ (Deutsche Palaestina Bank). தெருவெங்கும் பாரம்பரிய உடைகளை அணிந்த வணிகர்கள், எந்தவிதமான பதற்றமுமின்றிச் சாதாரணமாக நடந்து செல்லும் பொதுமக்கள்…..
உஸ்மானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் பலஸ்தீனம் எப்படிப்பட்ட ஒரு அமைதியான பொற்காலத்தை வாழ்ந்து கழித்தது என்பதை இந்த ஒற்றை படம் கூறும்.
இன்று பலஸ்தீனம் என்றாலே குண்டுச் சத்தங்களும், கண்ணீரும், அகதி முகாம்களும்தான் உலகின் நினைவுக்கு வருகின்றன. ஆனால், 1910-களில் அந்த மண் இப்படி இருக்கவில்லை. அது ஒரு உண்மையான அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அந்த காலகட்டத்தில் பலஸ்தீனம் ஒரு தனிச் சுதந்திர நாடாக இல்லாவிட்டாலும் (உஸ்மானிய ஆட்சியின் கீழ் இருந்தது), அங்கு ‘யூத குடியேற்றம்’ என்ற ஆக்கிரமிப்பு அரக்கன் முளைக்கவில்லை.
பலஸ்தீனம் எப்போதும் ஒரு பல்லினப் பண்பாட்டு மையமாகவே திகழ்ந்தது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ட்ரூஸ்கள் என அனைவரும் எந்தவொரு இனப் பாகுபாடும் இன்றி,
ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். அவரவர் மத வழிபாடுகளையும், கலாச்சார விழாக்களையும் எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாக நடத்தினர்.
பலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த மண்ணில், தங்களின் வேர்களைப் பற்றிக்கொண்டு சுபிட்சமாக வாழ்ந்த காலம் அது.
அல்-குத்ஸ் (ஜெருசலேம்), ஹேப்ரோன், நாப்ளஸ், யஃபா போன்ற நகரங்கள் வெறுமனே மக்கள் வசிக்கும் இடங்களாக மட்டும் இருக்கவில்லை. அவை உலகத் தரம் வாய்ந்த வர்த்தக மையங்களாகச் செயல்பட்டன.
கிராமப்புறங்களில் விவசாயம் செழித்தோங்கியது. நகரங்களில் வணிகமும், பாரம்பரியக் கைவினைப் பொருட்களின் உற்பத்தியும் பெருகின. உள்ளூர் சந்தைகளில் வெளிநாட்டு வணிகர்கள் வந்து பண்டமாற்று வியாபாரம் செய்யும் அளவுக்குப் பொருளாதாரம் துடிப்பாக இருந்தது.
மொழியும், பாரம்பரிய இசையும், உணவுப் பழக்கவழக்கங்களும் பலஸ்தீனத்தின் தனித்துவமான அடையாளமாக உலக அரங்கில் மின்னின.
இந்தக் காலகட்டத்தில், பலஸ்தீனியர்கள் தங்கள் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளைத் தாங்களே மிகச் சிறப்பாக நிர்வகித்து வந்தனர்.
பாரம்பரிய குடும்பக் கட்டமைப்புகள், மதத் தலைவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் ஆகியவை அந்தச் சமூகத்தின் ஒழுங்கை நேர்த்தியாக நிலைநிறுத்தின. இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கை முறை, இயற்கை வளங்களைச் சார்ந்து வாழ்வது, அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவது ஆகியவை அவர்களின் அன்றாட வாழ்வின் ஆன்மாவாக இருந்தன.
இப்படியாகச் சென்றுகொண்டிருந்த இந்த நிம்மதியான மற்றும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான பொற்காலம்,
முதல் உலகப் போரின் முடிவோடு தடம் மாறியது. உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரிட்டன் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ‘சியோனிச இயக்கத்தின்’ எழுச்சி, மாபெரும் அளவிலான யூத குடியேற்றங்களைப் பலஸ்தீனத்திற்குள் திணித்தது.
பல நூற்றாண்டுகளாக அங்கு நிலவி வந்த சமூக, அரசியல் மற்றும் புவிசார் அரசியல் சமநிலை மொத்தமாகக் குலைக்கப்பட்டு, இன்றுவரை தொடரும் ரத்தக்களறிக்கு வித்திடப்பட்டது.
இன்று, நாம் அந்த 1910-ஆம் ஆண்டின் பழைய புகைப்படத்தைப் பார்க்கும்போது, அது ஒரு தொலைந்துபோன யுகத்தின் மாபெரும் சாட்சி தெரிகிறது!
சியோனிஸ ஆக்கிரமிப்புகள் இல்லாத, பலஸ்தீனிய மக்களின் சுதந்திரமும், பாரம்பரிய வாழ்வும் செழித்து வளர்ந்த ஒரு காலத்தின் கண்ணாடி அது.
ஒரு மாபெரும் சமூகத்தின் அடையாளம், ஒரு சுதந்திர தேசத்தின் உண்மையான இதயத் துடிப்பு எப்படி இருந்தது என்பதை வருங்காலத் தலைமுறைக்கு உரக்கச் சொல்லும் வரலாற்று ஆவணம் இந்த படம்… ! ( நன்றி – அப்துல்லா இப்னு நசீர் ….. )
…………………………………………………………………………………………………………………………………………………..



எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…