This is an example of a WordPress page, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many pages like this one or sub-pages as you like and manage all of your content inside of WordPress.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி ...!! (கடல்களைக் கடந்து ..பகுதி - 5 )
- BBC ஆவணப்படமும்,Hindenburg Research ரிப்போர்ட்டும் -எது சரி, எது தவறு …..???
- EPS, OPS, பாஜக - என்ன நடக்கும் …?ரவீந்திரன் துரைசாமி & மாதேஷ் -ஒரு சூடு பறக்கும்,சுவாரஸ்யமான விவாதம் …..
- தலைகீழாக மாறியதா ராகுல் காந்தியின் இமேஜ் …???
- " உருவமற்ற இறைவன் " - பின் ஏன் இத்தனை வடிவங்கள் … ?
- EVENING POST - கோபுரத்தில் கலசங்கள் ஏன்….?
- சூரியன் வருவது யாராலே -
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
EVENING POST – கோபுரத்தி… இல் புதியவன் ” உருவமற்ற இறைவன்… இல் புதியவன் தலைகீழாக மாறியதா ராகுல் காந்தி… இல் vimarisanam - kaviri… தலைகீழாக மாறியதா ராகுல் காந்தி… இல் புதியவன் தலைகீழாக மாறியதா ராகுல் காந்தி… இல் Logan BBC ஆவணப்படமும்,Hindenburg Res… இல் புதியவன் தலைகீழாக மாறியதா ராகுல் காந்தி… இல் vimarisanam - kaviri… தலைகீழாக மாறியதா ராகுல் காந்தி… இல் Logan EPS, OPS, பாஜக – என்ன நட… இல் புதியவன் EPS, OPS, பாஜக – என்ன நட… இல் புதியவன் தலைகீழாக மாறியதா ராகுல் காந்தி… இல் vimarisanam - kaviri… EPS, OPS, பாஜக – என்ன நட… இல் TAMILMANI EPS, OPS, பாஜக – என்ன நட… இல் Logan EPS, OPS, பாஜக – என்ன நட… இல் புதியவன் அடுத்த பிரதமராக நிதின் கட்கரி… இல் ஆதிரையன் மேல்
நூறு இடுகைகள் நிறைவடைந்தன -இனி
என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com
என்கிற இந்த வலைத்தளத்தை ஒன்பது மாதங்களுக்கு
முன் துவங்கியபோது (ஜூலை 2009)
குறைந்தது 100 இடுகைகளாவது இடும் அளவிற்கு
உழைத்த பிறகு தான் நான் என்னைப்பற்றி எதுவும்
சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆவேன்
என்று நினைத்தேன்.
எனவே இது நாள் வரை
அறிமுகம் பகுதியை வெற்றிடமாகவே
வைத்திருந்தேன்.
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த
விருந்தினர்களின் எண்ணிக்கை என்னை –
விறுவிறுப்பாகவும் ஓரளவு விரைவாகவும்
செயல்படத் தூண்டியது. இன்று 100 இடுகைகளைத்
தொட முடிந்தது.
தொடர்ந்து இந்த வலைக்கு
வருகை தந்து எனக்கு ஊக்கம் கொடுத்துக்
கொண்டிருக்கும் என்
அன்பு நண்பர்களாகிய உங்களுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனி என்னைப்பற்றி சில வார்த்தைகள் –
காவிரிமைந்தன் – புனைப்பெயரிலிருந்தே
யூகித்துக்கொண்டிருபீர்கள் –
பிறப்பு -காவிரிக்கரை – சோழத் தலைநகர் !
தற்போதைய இருப்பு – சென்னை மாநகரம் !
வயது – ஐம்பதுக்கு மேல் (மேலே எவ்வளவு
வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் !)
படிப்பு – பிழைப்புக்காகப் படித்தது
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் –
(பொருளாதாரத்திலும், உலக சரித்திரத்திலும்)
அறிந்துக்கொள்ள் வேண்டும் என்கிற ஆர்வத்தில்
படித்தது -மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் !
( ஆனால் வழக்குரைஞராகத் தொழில்
புரிவதில் ஆர்வமில்லை )
தெரிந்த மொழிகள் – பேச, படிக்க, எழுத
தெரிந்த மொழிகள் – தமிழ்,ஆங்கிலம்,இந்தி
தாய் மொழி – அமுதத் தமிழ்
பேசினால் புரிந்துக்கொள்ளக்கூடிய மொழிகள் –
மலையாளம், தெலுங்கு, மராத்தி.
பணி நிமித்தமாக இந்தியாவில் பல மாநிலங்களில்
இருந்ததால் – பலதரப்பட்ட மக்களுடன்,
அவர்கள் கலாச்சாரத்துடன் பழக்கம் உண்டு.
இந்தியாவின் முக்கிய நகரங்கள்
அனைத்துடனும் ஓரளவு பரிச்சயம் உண்டு.
வெளிநாட்டு அனுபவம் – 3 முறை சிங்கப்பூர்
சென்று வந்த அனுபவம் உண்டு.
எனக்குப் பிடித்தவர்கள் – பாரதியும், பெரியாரும் !
இருப்பவர்களில் – நிறைய பேர் !
(அவ்வப்போது அவர்களைப் பற்றி
எழுதுகிறேனே !)
எனக்குப் பிடித்தவை – எழுத்தும்,சமுதாய நலனும்.
நிறைய படிப்பேன்.
இன்னும் படிக்க வேண்டும்.
அதற்கு இன்னும் நேரம் வேண்டும் !
இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும்.
எழுத வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாகவே
உண்டு. ஆனால் எழுத ஆரம்பித்தது
என்னவோ கடந்த 10 மாதங்களாகத்தான்.
தொழில்முறையில் கணினியைப் பற்றி ஒன்றுமே
தெரியாது எனக்கு. பழகிக்கொள்ள வேண்டும் என்கிற
ஆர்வத்தில், ஒரு கணினியை வாங்கி என் அறையில்
பொருத்திக்கொண்டு – கம்ப்யூட்டர் படித்த
ஒரு சிறு பெண்ணிடம் ஒரு 10 நாட்கள் கணினியைப்
பற்றிய அடிப்படை விஷயங்களை மட்டும்
தெரிந்து கொண்டு –
இந்த வலைத்தளத்தை துணிச்சலுடன் துவங்கி
விட்டேன்.(ஆங்கிலத் தட்டச்சு ஏற்கெனவே தெரியும்
என்பது ஒரு பெரிய வசதி ) சின்னச் சின்ன
சந்தேகங்களை அவ்வப்போது கிடைக்கும்
இளைஞர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து
கொள்கிறேன்.இப்போது நான் செய்துகொண்டிருப்பது
அனைத்தும் அநேகமாக என் சுய முயற்சியில்
முயன்று தெரிந்து கொண்டது தான்.
இந்த தளத்தை இன்னும் வலுவூட்டவும்,
மெருகூட்டவும் விரும்புகிறேன். அதற்கான
ஆலோசனைகளை யார் கூறினாலும் – நன்றியுடன்
வரவேற்கிறேன்.
நிறையவே சொல்லி விட்டேன் என்று
நினைக்கிறேன் !
மீண்டும் சந்திப்போம் – தேவை வரும்போது !
வாழ்க – வளர்க !
vanakkam,
I came to know about you. when am searching about kavirimaithan naval.. nice to meet u here. good work.. interesting.
Ambulimama PDF Kidaikuma?
pl update me
//நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும்.//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
மின்னஞசலில் நான் பார்த்த காவிரிமைந்தனா நீங்கள்?
vetha.Elangathilakam.
வருக இலங்கை நண்பரே,
மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிடும்
மின்னஞ்சல் எது என்று எனக்குத்
தெரியவில்லை.
விவரம் கூறினால் சரியாக
அறிந்துக் கொள்வேன்.
உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
உங்கள் இல்லத்தில் உள்ளோர்
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
– காவிரிமைந்தன்
நண்பரே அண்மைய இடுகைகள், மறுமொழிகள் என தளத்தில் பலவற்றை இணையுங்கள். அப்போதுதான் படிப்பவர்களுக்கு முழுமையாக எல்லம் சென்றடைய முடியும்.
Hello sir,
Just few days back I came to know about your site. started reading it. its quite interesting. by the way u writes i thought u would be around 25-35 of age but you are 50+. its amazing to know about you. As you wrote that you had been several parts of india u can better write about the people and their culture and ur experiences. this could be interesting to read. i am a new reader and i wish to read more. i dnt know which book to read for beginner so could u suggest me some of the books u enjoyed.
உங்கள் வருகைக்கு நன்றி இளம் நண்பரே.
ஏற்கெனவே சொல்லி இருப்பது போல், நான் கணினி மற்றும்
இணைய தளத்தை உபயோகிக்கவே அண்மைக் காலத்தில்
தான் கற்றுக்கொண்டேன்.
எனவே என்னால் இயன்ற வரையில் எழுத முயற்சிக்கிறேன்.
நீங்கள் கூறுவது போல் என் அனுபவங்களையும்
எதிர்காலத்தில் எழுத முயற்சிக்கிறேன்.
உங்கள் வயது, படிப்பு, இருக்கும் இடம், தொழில் பின்னணி
ஆகியவற்றைப் பற்றித் தெரியாமல் நான் உங்களுக்கு புத்தகங்களைக் கூறுவது சரியாக இருக்காது.
பொதுவாக, சரித்திரத்திற்கு தொடர்புடைய
புத்தகங்களும், சமூக, அரசியல் விழிப்புணர்வைத்
தூண்டும் புத்தகங்களும் நம்
சிந்தனையைக் கிளற உதவும்.
தொடர்ந்து தொடர்பில் இருப்போம் .
வாழ்த்துக்களுடன்,
– காவிரிமைந்தன்
Hello sir,
Thanks for ur reply. I am 27 years old homemaker in dubai. I am a M.Sc degree holder in Physics. I am fond of histories. I have already read ponniyin selvan, sivagamiyin selvan, vanthargal ventrargal etc. still i love to read a lot about histories. can you suggest me some of the historical blogs or historical books to read.
கீழ்க்கண்ட வலைத்தளங்களுக்குச் சென்று
விரிவாகப் பாருங்கள்.
உங்களுக்கு படிப்பதற்கு சுவையான, பயனுள்ள
விஷயங்கள் நிறைய கிடைக்கும்.
http://www.varalaaru.com
இதில் சரித்திர சம்பந்தமுடைய பல விரிவான
அனுபவங்களைத் தமிழில் பெறலாம்.
http://www.chennailibrary.com
இந்த தளத்தில் –
கல்கி, நா.பா. போன்ற அருமையான
ஆசிரியர்களுடைய நாவல்கள், தமிழ் நூல்கள்
இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன.
http://www.gkpage.wordpress.com
எந்த வயதினராக இருந்தாலும், தெரிந்து கொள்ள
வேண்டிய அனுபவபூர்வமான பல
விஷயங்கள் இங்கு உள்ளன.
– இந்த வலைத்தளங்களை முதலில் ஒரு முறை
மேலோட்டமாகப் பாருங்கள். உங்கள் ரசனைக்கேற்ப
உங்கள் தேவையை தீர்மானித்துக் கொண்டு, பிறகு
நேரம் கிடைக்குமபோதெல்லாம் சென்று படியுங்கள்.
என்னால் உங்களுக்கு சிறிதளவாவது உதவ முடியும்
என்றால் அதில் எனக்கு மகிழ்ச்சியே.
இந்த சிறிய வயதில் படிப்பதில் உங்களுக்கு இருக்கும்
ஆர்வம் மிகச் சிறப்பானது.
புத்தகங்கள் நல்ல நண்பர்களைப் போன்றவை.
இந்த ஆர்வத்தை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வ்லைத்தளங்களைப் பார்த்த பிறகு
உங்கள் அனுபவத்தைப் பற்றி எழுதுங்கள்.
வாழ்த்துக்களுடன் –
– காவிரிமைந்தன்
Thankyou so much for helping me. i vl definitely go through and write to u. once again thank you.
உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி நண்பர். காவிரி மைந்தன். நண்பர் ஒருவர் கூறியது போல நானும் உங்களுக்கு 25லிருந்து 30 வயதுக்குள் இருக்கலாம் என தான் எண்ணியிருந்தேன். தொடர்க உங்களது எழுத்துப் பணி.
நட்புடன்.
நற்றமிழன்.
நண்பரே,வணக்கம். தங்களைப் போன்றே நானும் . படாத பாடு பட்டு தமிழ், ஆங்கில தட்டச்சு அரை குறையாக கற்று வலைப்பதிவினை தொடங்கி திணறிக்கொண்டிருக்கிறேன். (ஏனென்றால் நான் டிரைவர்) .தங்களது முயற்சி எனக்கு ஊக்க மருந்தாக அமைந்துள்ளது.நன்றி!
அன்னா வணக்கம் உங்களது இடுகைகள் சிறப்பாக உள்ளது .சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கண்டிப்பாக வெற்றி பெரும்.நன்றி
வணக்கம் காவிரி மைந்தன். உங்களது வலைத்தளத்தை இன்றுதான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. இன்றைய சூழலில் பலரும் ஒன்று தீவிர சிந்தனை செயல்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது எதிலும் ஈடுபாடில்லாமல் ஏனோதானோவென்று இருக்கிறார்கள். இது இரண்டுமே சமுதாயத்திற்கு ஆபத்தானவை. நடுநிலை சிந்தனை, திறந்த மனதுடன் எந்தக் கருத்தையும் அணுகுவது போன்ற குண நலன்கள் குறைந்துவிட்டன. இந்த பின்னணியில் தங்களது எழுத்தும் கருத்தும் நம்பிக்கை தருவதாக உள்ளது. நல்ல பணி. சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுங்கள்.
வாழ்த்துக்கள்
ராஜாராமன்
அன்பின் காவிரிமைந்தன் அவர்களுக்கு,
வணக்கமும்,வாழ்த்துக்களும்!
சிறிது காலங்கடந்தே [ 10 மாதங்கள்] தங்கள் பதிவுகளைப் பார்க்கும், படிக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. எனினும் அனைத்தும் அருமையான படைப்புகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
எனது பதிவுகளில் சிலவற்றைப் பார்க்கும் ஆவல் இருப்பின் http://www.sarvachitthan.wordpress.com ல் அவற்றைக் காணலாம்.
நட்புடன்,
சர்வசித்தன்
உங்களது ஈமெய்ல் ஐடி எங்கும் இல்லையே?
விரிவாக தொடர்புகொள்ள முடியுமல்லவா?
வருக நண்பர் சுல்தான்,
தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.
என் ஈமெயில் ஐடி –
kavirimainthan@gmail.com
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
Don’t you have a Facebook page ? It would be great for readers to keep track of your recent updates. Let me know, if you have one. Else make it soon.
Your posts are great. All my wishes.
dear mr.surendar,
thank u very much for your visit and comments.
I have a very limited computer knowledge.
I have not studied computer anywhere !
I bought a pc and
have just managed to learn by trial and error method
as to how to open and
maintain a blog and that’s all !
if u can help me by guiding me how to open and maintain
facebook i shall happily try.
sorry if i am troubling u.
my mail id is kavirimainthan@gmail.com
-with all best wishes
kavirimainthan
Nice to know about you sir,
I can see your posts are not Biased.
I wish for your Good Health.
thank you for your good words
and good wishes Kalidas
-with all best wishes
kavirimainthan
I have read your blog for the post 4 months. It is really very informative about our political situation. every one of us should know where we are? Thank you very much for your writing. Please keep writing
Dear Friend Murugesan,
thank you very much for your good words
and good wishes.
– kavirimainthan
kindly write about பணம் கொழிக்கும் IPL
thanks & blessings of u
rajasekhar.p
sangai uthunghal ketpavargal vilikkattum.Ka.Ramalingam,.
kalalangarai vimarsanam seithu eluthuvathu elithu. ammavai patri vimarsanam thunichalaga seiveergala ?
நண்பரே,
ஏற்கெனவே பல முறை கூறி விட்டேன் –
நான் எந்தக்கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
எந்த விஷயத்தையும் பற்றி
எழுதுவதில் எனக்கு எந்த வித சங்கடமும் இல்லை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
உங்கள் இடுகைகள் மிகவும் அறிவுப்பூர்வமாக உள்ளது . என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Your latest about PC came in mumbai wallah .com
Thank you Mr.Bala.
with all best wishes,
Kavirimainthan
வணக்கம்
திரு, காவிரிமைந்தன் அவர்களுக்கு,
உங்களைவிட வயதிலும் அனுபவத்தில் இளையவனான எனது மரியாதை வணக்கங்கள். தமிழ்வெளி மூலௌம் தங்களின் தளத்தை கண்டேன். உங்களின் நோக்கம் உயர்ந்தது. அதைவிட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிருபித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஐயா , மாதவாரியாக பதிவுகளைப் பிரித்தால் படிப்பது சுலபம் என எண்ணுகிறேன்.
பழைய அன்றாட அரசியல் விமர்சனங்களை -தேர்தல்கால போன்ற- தவிர்த்து தொடக்கத்தில் இருந்து படிக்க விரும்புகிறேன். அதனால் வருடம் மாதம் எனப் பதிவுகள் பிரிக்கப்பட்டால் தேடுவதில் சிரமம் இருக்காது. எடுத்துக்காட்டாக, 2010 தை,மாசி,…………….2010 தை பதிவுகள்-தலைப்பு மட்டும்,2010 மாசி பதிவுகள் -தலைப்பு மட்டும் ,எனப் பிரித்து தந்தால் சுலபமாக படிக்க முடியும்.
2010-தை
– மாசி
எனது விளக்கம் புரிந்து கொண்டீர்களா தெரியவில்லை. பல இணையப் பக்கங்களில் அப்படிப் பிரித்துப் போடுகிறார்கள்.
முன்னணி இடுகைகள் எனப் போட்டது போல்,அனைத்து பதிவுகளையும் ஆண்டு மாத வாரியாக போடுவதைத்தான் குறிப்பிடுகிறேன்.
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய காவிரிமைந்தன் ஐயா அவர்களே! பதிவுலகில் புதுக்குருதி பாய்ச்சி வரும் ‘பன்முகப் பதிவர்’ விருதைச் சிறியேன் பணிவன்போடு தங்களுடன் பகிர்ந்துள்ளேன்!
தங்களுக்கு விருதளிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியைப் பாராமல், என் அன்பையும், தங்கள் எழுத்துக்கள் மீதான என் விருப்பம், மதிப்பு ஆகியவற்றையும் மட்டும் பார்த்து, சிறியவன் பகிரும் இந்த விருதினைப் பேருள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்!
விருதினை ஏற்கவும் மேலும் விவரங்களுக்கும் http://agasivapputhamizh.blogspot.com/2014/09/drop-of-award-fell-on-me.html எனும் முகவரியிலுள்ள என் பதிவைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!
நன்றி! வணக்கம்!
Dear sir, send me ur email to me (sivavet at gmail dot com) i like to discuss some socioeconomic issues
Siva
Dear Siva,
My email ID is – kavirimainthan@gmail.com
with all best wishes,
Kavirimainthan
Dear Siva,
My email ID is – kavirimainthan@gmail.com
with all best wishes,
Kavirimainthan
2014-11-23 1:14 GMT+05:30 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் :
>
காவிரி மைந்தன்! அழகான பெயர். தமிழ் மணத்தில் இருந்து இங்கு வந்தேன். தமிழில் கேள்வி பதில் தளமொன்றை மிகுந்த பேராசையுடன் தொடங்கி இருக்கிறேன். அது உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் தமிழில் கேள்வி கேட்டு பதில் பெறும் ஒரு தளமாக, ஒரு அறிவுக் கருவூலமாக இருக்க வேண்டுமென்ற பேராசை. அதில் பதிவு செய்து தங்கள் துறை சார்ந்த அறிவையும் அனுபவங்களையும் கேள்விகளுக்குப் பதில் தந்து தயை கூர்ந்து உதவ முடியுமா?
பிங்குபாக்: சோதனைக்களம்: MLV
காவிரி மைந்தன் அழகான பெயர், தங்களைப் பற்றி விவரித்திருப்பது சுவாரசியமாக உள்ளது.