…………………………….

……………………………….

……………………………….

………………………………
அண்மையில், நமது பிரதமர் இந்தோனேஷியா சென்றபோது, அந்நாட்டின் பிரதமர் ” இந்திய டிஎன்ஏ ” என்னில் கலந்திருக்கிறது” என்று சொன்னார்… கூடவே ” என்னில் மட்டுமல்ல…. இந்தோனேஷிய மக்கள் பலரினுள்ளும் கலந்திருக்கிறது ” என்று பெருமையுடன் சொன்னார் …
அவர் சொன்னதில் தவறில்லை…. ஆனால், ” பண்டைத் தமிழர்களின் – சோழர்களின் டிஎன்ஏ ” – என்று சொல்லி இருந்தால் மிகச்சரியாக இருக்கும்…
ஏன் … ??? ….வரலாற்றை புரட்டிப் பார்த்தால் புரியும்…. !!!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.பி. 11-ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு (குறிப்பாக ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்தில்) உலகிலேயே மிக வலிமையான கடல் படையையும், வணிகக் கட்டமைப்பையும் கொண்டிருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் சோழர்களின் கட்டுப்பாட்டிலும், மிக நெருங்கிய வணிகத் தொடர்பிலும் இருந்தன.
( மேலேயுள்ள வரைபடத்தைப் பார்த்தால் தெரியும்….)
அக்காலத்தில் இன்று நாம் அழைக்கும் நாடுகள் முற்றிலும் வேறுபட்ட பெயர்களுடனும், தனித்துவமான பேரரசுகளின் கீழும் இயங்கி வந்தன:
இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர்: இந்த நாடுகள் உள்ளடக்கிய பகுதி அப்போது “ஸ்ரீவிஜயப் பேரரசு” (Srivijaya Empire) என்று அழைக்கப்பட்டது.
சோழர் காலக் கல்வெட்டுகளில் இப்பகுதி “கடாரம்” மற்றும் “ஸ்ரீவிஜயம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமத்ரா தீவு ‘ஸ்ரீவிஜயம்’ என்றும், மலேசியாவின் கெடா பகுதி ‘கடாரம்’ என்றும் அழைக்கப்பட்டன.
மியான்மர் (பர்மா): இது “இராமண்யதேசம்” என்று அழைக்கப்பட்டது. அங்கு ‘மோன்’ (Mon) இன மக்களின் ராஜ்ஜியங்கள் இருந்தன.
வியட்நாம் மற்றும் கம்போடியா: கம்போடியா பகுதி “காம்போஜம்” (Kambuja) என்றும், வியட்நாமின் தெற்குப் பகுதி “சம்பா” (Champa) ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டன.
இலங்கை: சோழர் ஆட்சியில் இலங்கை முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, அதற்கு “மும்முடிச்சோழ மண்டலம்” என்று பெயரிடப்பட்டது.
பிலிப்பைன்ஸ்: சோழர்களின் நேரடிப் படையெடுப்பு அங்கு இல்லை என்றாலும், சோழர்களின் கடல் வணிகர்களின் (திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்) வர்த்தகத் தொடர்பு பிலிப்பைன்ஸ் தீவுகள் வரை நீடித்திருந்தது.
வரலாற்றாசிரியர்களின்படி, சோழ மன்னர்கள் இந்த நாடுகளை இரண்டு விதமாகக் கையாண்டனர்:
நேரடி ஆட்சி (Direct Rule):
இலங்கை மற்றும் மாலத்தீவுகள் சோழப் பேரரசின் நேரடிப் பகுதிகளாக மாற்றப்பட்டு, சோழ அதிகாரிகளால் ஆளப்பட்டன.
செல்வாக்கு மற்றும் கப்பம் (Suzerainty):
கி.பி. 1025-இல் ராஜேந்திர சோழன் கடற்படையை அனுப்பி ஸ்ரீவிஜய பேரரசை (இந்தோனேஷியா, மலேசியா) தோற்கடித்தார். ஆனால், அவர் அந்த நாடுகளைத் தன் நேரடி ஆட்சியில் வைக்கவில்லை.
சோழர்களின் கடல் வணிகத்திற்குத் தடையாக இருந்த ஸ்ரீவிஜய மன்னர்களை அடக்கி, தங்களுக்குச் சாதகமான அரசர்களை ஆட்சியில் அமர வைத்து, கப்பம் (Tax) பெற்றுக்கொண்டு, வணிகப் பாதையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தியதற்கு மிக முக்கியமான காரணம், அவர்களின் வலுவான வணிகக் குழுக்கள் (Trade Guilds) ஆகும்.
முக்கிய வணிகக் குழுக்கள்:
அஞ்சுவண்ணம்: அரேபியர்கள், யூதர்கள் மற்றும் பாரசீகர்களை உள்ளடக்கிய மேற்கத்திய வணிகக் குழு.
மணிக்கிராமம் மற்றும் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்: உலகெங்கும் பயணித்து வணிகம் செய்த புகழ்பெற்ற தமிழ் வணிகக் குழுக்கள். இவர்களுக்குத் தனிப் படைகளும், கோட்டைகளும் இருந்தன.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியானவை: உயர்தரப் பருத்தி ஆடைகள் (மஸ்லின்), மிளகு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள், இரும்பு, மற்றும் கலைப் பொருட்கள்.
தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவை: கற்பூரம், சந்தனம், பட்டு, மற்றும் தங்கம். (இந்தோனேஷியாப் பகுதியைச் சோழர்கள் ‘சொர்ணபூமி’ அல்லது ‘பொன்விளை பூமி’ என்று அழைத்தனர்).
இந்தியப் பெருங்கடலிலும், தென் சீனக் கடலிலும் சோழர்களின் அனுமதியின்றி எந்த ஒரு வெளிநாட்டு வணிகக் கப்பலும் நகர முடியாது என்ற நிலை அந்தக் காலங்களில் இருந்தது.
சீனத் தொடர்பு: சீனாவை ஆண்ட ‘சாங்’ (Song Dynasty) வம்ச அரசர்களுடன் சோழ மன்னர்கள் நேரடித் தூதரக மற்றும் வணிக உறவுகளை வைத்திருந்தனர். இதற்காகவே இந்தோனேசிய கடல் வழி (Malacca Strait) சோழர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியமாக இருந்தது.
கலாச்சாரப் பரிமாற்றம்:
இந்த வணிகத்தின் மூலமாகவே தமிழ்நாட்டின் கட்டிடக்கலை, சமயம் (சைவம், வைணவம், பௌத்தம்) மற்றும் பண்பாடு இந்தோனேஷியா (பாலித்தீவு), கம்போடியா (அங்கோர் வாட்) போன்ற நாடுகளுக்குப் பரவியது.
படையெடுத்துச் சென்றவர்களில் பல வீரர்கள், தளபதிகள் இந்த நாடுகளிலேயே தங்கி அந்த நாட்டைசேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்கள் எஞ்சிய வாழ்க்கையை அங்கேயே தொடர்ந்தனர்.
சுருக்கமாகக் கூறின், 1000 வருடங்களுக்கு முன்னால் சோழர்கள் வெறும் நிலப்பரப்பை மட்டும் ஆளாமல், “கடல் ஆதிக்கம்” (Thalassocracy) மூலமாக ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத்தையும், வணிகப் பாதையையும் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.
இந்தோனேசியர் பிரதமர் சொன்னதை சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரது, மற்றும் அவரது நாட்டினர் பலரின் முன்னோர்கள் – தமிழர்களாக இருந்திருக்க வேண்டும். ( உதவி – தமிழ் இணைய கல்விக்கழகம் மற்றும் தமிழ் விக்கி பீடியா ஐந்நூற்றுவர் குறிப்பு….. )
………………………………………………………………………………………
LATER /LATEST IN TERESTING ADDITION …
Mr.Thangam tamizharausu (former DMK Minister…!!!) is the Organizor standing there and all the Players /team in DMK Black and Red Uniform … 😊
……………………
……………………………………………………………………………………………………………………………………………..



பண்டைய தமிழர்களின் என்று சொன்னால் அதிலும் தவறு இருந்திருக்கும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொல்லியிருக்கவேண்டும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொன்னாலும் அதிலும் தவறு இருக்கும். தஞ்சாவூர்காரர்களின் ஜீன் இருந்திருக்கிறது என்று சொல்லியிருக்கவேண்டும்.
பண்டைத் தமிழர்கள்தாமே சைவம், வைணவம் மதம் சார்ந்தவர்கள்.
படிக்கறவங்களுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமானால் நமக்கென்ன என்பது இப்போதெல்லாம் காவிரி மைந்தன் சாரின் அரசியல் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது.
திமுகவுடன் பாஜக சேர்ந்தால், எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்துவார்கள். அப்படிச் சேர்வது நல்லது என்பதே என் எண்ணம். பாஜக தமிழகத்தில் கரையும். திமுக, எல்லா ஊழல்கள், அநியாயங்களிலிருந்து தப்பித்துவிடும் (இப்போதே மத்திய அரசு சில வழக்குகளில் உச்ச நீதி மன்றத்தில் திமுக ஆதரவு நிலை எடுக்கத் தொடங்கியிருக்கிறது), புதிதாக பழம் பெருச்சாளிகள் அமைச்சரவையில் சேர்ந்து, திரும்பவும் சேது அணை, வங்காள விரிகுடா கடலை ஆழப்படுத்தணும் என்று விஞ்ஞான ரீதியாக கொள்ளை அடிப்பார்கள். அதுவும் நல்லதுதான்.
சில பாஜக பெருச்சாளிகள், செல்வப்பெருந்தகை வேலை செய்து எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளைப் பிடிக்க (அதிலும் ராஜ்ஜியசபா எம்பி) முனைவார்கள்.
எதிர்காலம் விஜய், அண்ணாமலை என்று திரும்பட்டும்.