ஒரு 109 வருட அதிசய நிஜக்கதை – சம்பவம்….!!!

………………………………………….

…………………….

( போபால், ( மத்திய பிரதேசம் ) ஜும்மாலால் ருதியா (Jummalal Ruthia): முதலாம் உலகப் போர் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நிதி உதவி அளித்த செல்வந்தர் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ….!!! )

………………………………………………..

……………………………

( கடன் ஆவணம்: 1917 ஜூன் 4 அன்று போபால் முகமையின் அரசியல் முகவர் டபிள்யூ.எஸ். டேவிஸ் (W.S. Davis) கையெழுத்திட்ட சான்றிதழ்…. )

…………………………………

…………………………………………..

சென்ற வாரம் மீடியாக்களில் வெளிவந்த ஒரு வித்தியாசமான, வியப்பூட்டும் செய்தி….

கேட்பதற்கு படு சுவாரஸ்யமாக இருக்கிறது…..

சம்பவத்துக்கு உள்ளே போகும் முன்னர், ஒரு சின்ன கணக்குக்கு தயாராகிக் கொள்ளுங்கள்….

109 வருடங்களுக்கு முன் இருந்த ரூபாய் 35,000/- க்கு இன்று எவ்வளவு லட்சம் /கோடி மதிப்பு கூடி இருக்கும் ….??? ஒவ்வொரு ஆண்டிற்கும் அந்த கூடுதல் தொகைக்கான வட்டியையும் சேர்த்து கணக்கிட வேண்டும்….!!!

தலை சுற்றுகிறதா ….??? பிரிட்டிஷ் அரசின் தற்போதைய தலைவலி அது தான்…. !!!!

வாருங்கள் …. விஷயத்துக்குள் போவோம் …..

……………………………………………….

109 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாருக்கு ரூ.35,000 கடன் கொடுத்தோம்’: திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்.

மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.

தற்போது, 109 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜும்மாலால் ருதியாவின் குடும்பத்தினர், 1917ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தேதியிடப்பட்ட சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில், பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் செலுத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகை போபால் ஏஜென்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அரசியல் முகவர் மூலம் வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தற்போது, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் கடன் மேலாண்மை அலுவலகம் (டிஎம்ஓ) அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளது.

குடும்பத்தினர் கண்டறிந்தது எப்படி?

ஜும்மாலால் ருதியாவின் கொள்ளுப்பேரனான கௌதம் ருதியா கூறுகையில், பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த விவகாரத்தை மேலதிக விசாரணைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், ஆவணங்களைச் சரிபார்க்க சில தகவல்களையும் கேட்டுள்ளனர்.

கௌதம் ருதியா பிபிசியிடம் தொலைபேசியில் பேசுகையில், “இந்த விவகாரத்தை உறுதிப்படுத்த சில தகவல்களை அளிக்குமாறு பிரிட்டிஷ் அரசு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சரிபார்ப்புக்காக அவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் அனுப்பி வருகிறோம்” என்றார்.

எனினும், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பிரிட்டிஷ் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆவணங்களைக் கோரியிருப்பது, தற்போது இந்தக் கோரிக்கையைச் சரிபார்க்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக உள்ளது.

ஜும்மாலாலின் பேரனும், கௌதமின் தந்தையுமான வினய் ருதியா, பிரிட்டிஷ் அரசின் ஆரம்பகட்ட பதிலால் குடும்பத்தினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பல மாதங்களுக்குப் பிறகு, பிரிட்டன் அரசிடமிருந்து எங்களுக்கு பதில் கிடைப்பது இதுவே முதல் முறை. எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பணத்தைத் தாண்டிய ஒன்றாகிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை, இது எங்கள் மூதாதையர்களின் பாரம்பரியம் தொடர்பான விஷயம்” என்றார்.

இந்த ஆவணம் குறித்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததாக வினய் ருதியா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேறு ஒரு வழக்கு தொடர்பான பழைய ஆவணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கப்பட்ட கடன் ஆவணத்தைக் கண்டுபிடித்தோம். இதையடுத்து, ஒரு வழக்கறிஞர் மூலம் பிரிட்டிஷ் அரசைத் தொடர்புகொண்டோம்” என்றார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கடன் கொடுத்தது ஏன்?

சேர்ப்போம். பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இவை அனைத்தையும் கணக்கிட்டு, இன்றைய பண மதிப்புடன் ஒப்பிடுவோம்” என்றார்.

இந்தக் குடும்பம், 109 ஆண்டுகளுக்குப் பிறகு கூறப்படும் இந்தக் கடனுக்குப் பதிலாக எவ்வளவு பணம் கேட்க வேண்டும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

2015-ஆம் ஆண்டில், பிரிட்டன் முதலாம் உலகப் போர்க் கடனான 2.2 பில்லியன் பவுண்டுகளைத் திருப்பிச் செலுத்தியது

தீர்க்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

‘ஆவணங்களும் தகவல்களும் இன்னும் சரிபார்க்கப்படவில்லை’

தற்போது, பிரிட்டிஷ் அதிகாரிகள் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

குடும்பத்தினரிடம் கோரப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

அதன் பின்னர் தான், 1917ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 35,000 ரூபாய் தொடர்பான ஆவணங்கள் பிரிட்டிஷ் அரசின் பதிவுகளுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பது தெரியவரும்.

மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமரச தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் குடும்பத்தினர் பரிசீலித்து வருகின்றனர்.

அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று வினய் ருதியா கூறுகிறார்.

109 ஆண்டுகள் பழமையான இந்த விவகாரத்தில், தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகள் கேட்டுள்ள ஆவணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். ( உதவி – பிபிசி தளம் ….)

…………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக