………………………………………………………………………………………………………………………

( இவர்கள், கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாமல் – தமிழகத்தை – தமிழக மக்களைஎப்படி எல்லாம்
ஏமாற்றி சுரண்டி இருக்கிறார்கள்…???
தமிழக மக்களோ, இதை யெல்லாம் ஒன்றுமே
அறியாமல், சிலர் எடுத்துச் சொன்னதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் –
இவர்கள் தமிழகத்தை இத்தனை வருடங்களாக மொட்டையடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு மண்ணாந்தையாக இருந்திருக்கிறார்கள் …)
……………………………………………………………………………………………………………………….
ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை:
முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் …!!!
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக FIR பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம்.
திமுக மாநாட்டிற்காக அரசு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு:
2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள “கலைஞர் திடல்” நிலத்தில் திமுக வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் திமுக வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எ.வ .குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏரி கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதச் சாலை:
மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக, மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை.
இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25, 2005 இல் புகார் அளித்தது, ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.
“கலைஞர் திடல்” நிலம் 124.56 ஏக்கர் நிலம்,
12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு ‘அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலத்தை விற்பனை செய்த ‘ரிஷி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும்.
அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு – நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:
1. அமைச்சர் எ.வ. வேலு, எ.வ. குமரன், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா(BNS), கனிம வளங்கள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற சட்டங்களின் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.
நியாயமான விசாரணை நடத்தி மண் திருடிய அனைவருக்கும் ஊழல் செய்ததற்காக லஞ்ச ஒழிப்பு துறை தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
2. முறைகேடாக எடுக்கப்பட்ட கனிம வளங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும்.
…………………
……………………………………………………………………………………………………………………………………………….



கா.மை. சார்… “தலை” 3000 ஏக்கர் நிலங்களை காஞ்சீபுரம் சுற்றியுள்ள பகுதியில் வாங்கியிருக்கிறது பினாமி பெயரில். அதற்கு ஒருவர் விளக்கம் சொன்னார், 5 கோடி கிடைத்தால், மகன், மகள் பெயரில் நிலம் வாங்கலாம். 50-100 கோடி கிடைத்தால் எப்படி வாங்கிக் கணக்கு காண்பிக்க முடியும் என்று. பத்திரம் ‘தலை’ வீட்டில் அல்லது அவர்களுடைய இன்னொரு பினாமி வீட்டில் இருக்கும். கையெழுத்து போடுவது மாத்திரம் பினாமி. அந்தப் பினாமிக்கு எலும்புத் துண்டு மாதிரி கவுன்சிலர், எம்.எல்.ஏ என்று பதவிப் பிச்சை போட்டுவிடுவார்கள். (கருணாநிதி, தினகரனை மாறன் குழுமத்திற்கு விற்றதற்காக தினகரன் முதலாளிக்கு எம்.பி பதவி பிச்சை போட்டதுபோல)
அதனால் சிக்குவதை நினைத்து, சும்மா 2 கோடிக்கெல்லாம் ஒரு வழக்கா என்று மக்கள் நினைப்பதை மாற்றிக்கணும். 2000 கோடில, 2 கோடில மாட்டியிருக்காங்க, நல்லா கடுங்காவல் தண்டனை கொடுக்கணும் என்று நினைக்கணும்.