முன்னாள் மந்திரிகள், மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு, பெண்டாட்டிக்கு, வைப்பாட்டிக்கு என்று …..

………………………………………………

…………………………………………….

………………………………………………………………………………………

துரைமுருகனுக்கு மட்டும் ‘முதலைக் கண்ணீர்’ வடிக்கும் சுப.வீரபாண்டியன், ஜீவ சகாப்தன் போன்ற ‘பெரியாரிய நாடக நடிகர்கள்’ ஏன் கலைஞர்.கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்…???

நீ பெரியாரிஸ்ட் என்றால் உண்மையான பெரியாரிஸ்ட்டாக இரு…

நீ பார்ப்பனிய ஆதரவாளன் என்றால் அதிலாவது உண்மையாக இரு !

அது என்ன அங்கொரு கால் இங்கொரு கால் …???

…………………..

தமிழர் விரோதப் போக்கில் இரண்டுபேருமே வேறு வேறு அல்ல என்பதே தமிழர்களின் நிலைப்பாடு. அது ஒருபுறம் இருக்கட்டும்.

…………………..

திமுகவின் பொதுசெயலாளர், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பெயர்த்தி திருமணத்தில் சமஸ்கிருத மொழியில் மந்திரம் ஓதிவிட்டார்களாம்.

உடனே எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்கிறார் சுப.வீரபாண்டியன் ….!!!

நாங்க எல்லாம் என்ன பைத்தியக்காரர்களா என்கிறார் ஜீவ சகாப்தன் .. !!!!

திடீரென்று பெரியார் இராமசாமியின் நெஞ்சை நனைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் இவர்கள்.

கருணாநிதி வீட்டில் அவரை சுற்றி நின்றுகொண்டு சம்ஸ்கிருத மந்திரங்கள் முழங்க தெலுங்கு வைணவப் பார்ப்பனர்கள் வாழ்த்தியபோது வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா ?!

கோயில் கோயிலாகச் சென்று பக்திப்பழமாக திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் சுழன்றுகொண்டிருக்கிறாரே….

சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க வேள்விகள் செய்கிறார்களே…அப்போது வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா …???

திமுக அரசு சார்பில் 4000 கோயில்கள் குடமுழுக்கு நடத்தினார்களே அப்போது…வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா …???

அந்த 4000 கோயில்களில் சமஸ்கிருத மந்திரங்கள் இன்றும் ஒலிக்கிறதே…வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா…???

ஆண்ட 5 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்திய அந்த 4000 கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும் என்று திமுக அரசு உறுதியான முடிவு எடுக்காமல் –

தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்று கூறியபோது…வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா ?!

வெள்ளைக்கலர் சட்டைப்பைகளில் அண்ணா, கருணாநிதி படத்தை வைத்துக்கொண்டு சுற்றிய திமுகவினர் – கடவுள் படங்களை வைத்துக்கொண்டு சுற்றத் தொடங்கியபோது வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா …..????

கே.என்.நேரு திருப்பதி உண்டியலில் 44 லட்சம் போட்டபோது….

வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா…???

கே.என்.நேருவும், அன்பில் மகேஷும் சட்டநாதர் கோயிலுக்குச் சென்று கும்பிட்டபோது வலிக்கவில்லையா…??? பைத்தியக்காரனாக உணரவில்லையா ….???

இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். அத்தனை இருக்கு.

அவ்வளவு ஏன்…’திராவிட’ என்பதே ‘த்ரவைத்’ எனும் சம்ஸ்கிருதச் சொல்தான்.

அதையே இயக்கங்களுக்கு பெயராக வைத்துக்கொண்டு அதனை எதித்து நாடகமாடிக்கொண்டிருக்கும்போது வலிக்கவில்லையா… பைத்தியக்காரனாக உணரவில்லையா …???

இன்னும இந்த உலகம் உங்களை நம்புதுன்னு நீங்க நம்பிட்டு இருக்கீங்க …!!!

துரைமுருகன் மீது என்ன ஆத்திரம் தெரியுமா இந்த கீ.வீரமணியின் பக்தர்களுக்கு …???

“பெரியார் வந்தார்,

மணியம்மையை கூட்டிச்சென்றார்

திமுக உருவானது”

என்று ஒரே வரியில் திமுக வரலாற்றையே சொன்னார் துரைமுருகன்.

அப்போது உடனே கொந்தளித்தவர் வேறு யாருமல்ல – ஆசிரியர் கீ.வீரமணி…!!!

அதற்குப் பதில் இப்படிக் கொடுத்தார் துரைமுருகன், “நான் சொன்னது வீரமணிக்கு வருத்தம் போல அதனால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று.

வே.ஆனைமுத்து எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும் துரைமுருகன் பேசியது என்னெவென்று.

அந்த ஆத்திரத்தை இப்போது தீர்த்துக்கொள்கிறார்கள் போல.

தமிழில் வழிபாடு, தமிழில் புதுமனை புகுவிழா, தமிழில் திருமணம் எனத் தமிழர்கள் நாங்கள் கோரி வருகிறோம். அப்படிக் கோரி இருந்தால் கூட பரவாயில்லை. மாறாக துரைமுருகன் மீது மட்டும் பொங்குவது இதனாலோ…???

அப்புறம் இதே வலியை, பைத்தியக்காரனாகிய வருத்தத்தை – மு.க.ஸ்டாலின் மீதும் காண்பிக்க வேண்டியதுதானே…என்னங்கயா துர்கா அம்மா இப்படி பண்றங்களே நாங்க என்ன பைத்தியகாரர்களா என்று …!!!???

கேட்டால்…அது ஸ்டாலின் அல்லவே …

அது அவரது மனைவிதானே என்பார்கள்.

அதுபோலவே இதுவும் துரைமுருகன் அல்லவே …

துரைமுருகனின் பெயர்த்திதானே..! ( நன்றி –தமிழன் கரிகாலன் – tntv தமிழ் ஊடகம் )

…………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்