அப்புறம் கையில் இருக்கின்ற கருப்பு பணத்தையெல்லாம் அனுபவிப்பது தான் எப்படி சார் …???

……………………………………

……………………………………………………………………………………………………………………….

கலாநிதி மாறன் குடும்ப கூத்தாடிகள் கூட்டம் கிரீஸ் நாட்டில் கல்யாணம்

இந்திய மக்களிடம் சம்பாதித்த பணம் வெளிநாட்டில் திருமணம்

இந்தியாவில் சம்பாதித்த காசு, வெளிநாட்டுக்கு லாபமா…? ஒரு பொருளாதார பார்வை …!!! ( பொருளாதார பார்வை மட்டும் தானா …!!! )

சுமார் 300 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட திருமணம், இந்தியாவிற்கு பதிலாக கிரீஸ் நாட்டில் நடக்கும் போது, அங்கு ஒரு பெரிய பொருளாதார பரிமாற்றமே நிகழ்கிறது.

நம் நாட்டு மக்களிடமிருந்தும், இந்திய சந்தையிலிருந்தும் ஈட்டப்பட்ட (அப்படியா …??? எந்த விதத்தில் …??? ) இந்த பல நூறு கோடி ரூபாய், நம் நாட்டிலேயே செலவிடப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் …?

அரசுக்கு நேரடி வருவாய்: 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையிலான ஜிஎஸ்டி வரி மூலம் மட்டும் சுமார் 55 முதல் 65 கோடி வரை மத்திய, மாநில அரசுகளின் கஜானாவிற்கு சென்றிருக்கும்.

உள்ளூர் வணிக வளர்ச்சி: நமது பாரம்பரிய அரண்மனைகள், நட்சத்திர விடுதிகள், மலர் அலங்கார கலைஞர்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு சுமார் 170 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும்.

உழைப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு: சமையல் கலைஞர்கள் முதல் மேடை அமைப்பாளர்கள் வரை பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கு நேரடி வேலை கிடைத்திருக்கும். அவர்கள் குடும்பங்கள் பிழைத்திருக்கும்.

இதையும் யோசித்து பாருங்கள் சார். வெளிநாட்டவர்களே இந்தியாவில் திருமணம் செய்ய வேண்டும் என்று தேர்ந்து எடுக்கிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகளில் இருந்து வரும் பெரிய பணக்காரர்கள் கூட ஜெய்ப்பூர் அரண்மனையில், உதய்ப்பூர் ஏரி ஓரத்தில், கேரளா கடற்கரையில், தமிழ்நாடு கோவில் நகரங்களில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். இந்திய கலாச்சாரம், இந்திய உடை, இந்திய உணவு, இந்திய இசை தான் உலகத்துக்கே பிடித்திருக்கிறது.

அப்படி இருக்கும் போது நம் ஆட்களே வெளிநாடு போவது எவ்வளவு வேதனை சார்.

இந்த 300 கோடி திருமணம் இந்தியாவில் நடந்திருந்தால் இன்னும் பல நன்மைகள் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும்:

1. சுற்றுலா வளர்ச்சி: வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் 500 முதல் 1000 விருந்தினர்கள் இந்தியாவை சுற்றி பார்த்திருப்பார்கள். ஹோட்டல், விமானம், டாக்சி, கைவினை பொருட்கள் என்று இன்னும் பல கோடி இந்தியாவில் தங்கியிருக்கும்.

2. நமது கலைஞர்களுக்கு வாழ்வு: நமது மேளம், நாதஸ்வரம், பரதநாட்டியம், கரகாட்டம், நமது கைத்தறி பட்டு, நமது நகை கலைஞர்கள், நமது பூக்காரர்கள், நமது புகைப்பட கலைஞர்கள் எல்லோருக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

3. இந்திய பெருமை உலகம் முழுவதும்: இந்த திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும் போது, இந்தியா தான் திருமணத்திற்கு சிறந்த நாடு என்று உலகமே பேசியிருக்கும். அடுத்து இன்னும் பல வெளிநாட்டு திருமணங்கள் இந்தியாவிற்கு வந்திருக்கும்.

4. அந்நிய செலாவணி மிச்சம்: 300 கோடி ரூபாய் டாலராக மாறி கிரீஸ் நாட்டுக்கு போகாமல், இந்தியாவிலேயே இருந்திருக்கும். நம் ரூபாய் மதிப்பு கூட கொஞ்சம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

5. ஏழை மக்களுக்கு உதவி: ஒரு பெரிய திருமணம் நடக்கும் ஊரில், சுற்றி உள்ள சிறு கடைகள், ஆட்டோ, பூ விற்கும் அம்மா, டீ கடை அண்ணா வரை எல்லோருக்கும் வருமானம் கிடைக்கும். அது தான் உண்மையான பொருளாதாரம் சார்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும் சார்…..

அம்பானி, அதானி ஆகியோரை இவர்கள் தங்கள் ஊடகம் மூலம் மக்களிடம் வெறுப்பு உண்டாக்கினார்கள். தினம் தினம் அவர்களை பற்றி தவறாகவே காட்டினார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா சார்… ??? அவர்கள் தேச பற்று மிக்கவர்கள். அவர்கள் குடும்ப திருமணங்களை இந்தியாவிலேயே நடத்தி, இந்தியாவுக்கு வருமானம் உண்டு பண்ணினார்கள். லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தார்கள். இந்திய கலாச்சாரத்தை உலகத்துக்கு காட்டினார்கள்.

ஆனால் இவர்கள் செய்யும் தொழில் என்ன சார். மக்கள் வெறுக்கும் படியான சினிமா மற்றும் கேவலமான ஊடகம் தான். குடும்பத்தோடு பார்க்க முடியாத காட்சிகள், நம் கலாச்சாரத்தை கெடுக்கும் செய்திகள், இளைஞர்களை கெடுக்கும் விஷயங்கள் தான் இவர்கள் ஊடகத்தில் வருகிறது.

இந்தியாவுக்கு வேலை கொடுத்து, இந்தியாவில் திருமணம் செய்தவர்களை வெறுக்க வைத்து விட்டு, இவர்கள் மட்டும் இந்திய மக்கள் பணத்தை எடுத்து கொண்டு கிரீஸ் நாட்டில் திருமணம் செய்வது என்ன நியாயம் சார்….???

இது யாரையும் குறை சொல்வதற்காக இல்லை சார். தனிப்பட்ட விருப்பம் அவரவர் உரிமை….!!!

ஆனால் யோசித்து பாருங்கள். இந்தியாவில் சம்பாதித்து, இந்தியாவில் செலவு செய்தால், அது இந்தியாவின் வளர்ச்சி தானே …???

நமது பணம், நமது மண்ணில், நமது மக்களுக்கு.

இதை ஏற்று கொள்பவர்கள் பகிருங்கள் சார்.

( இந்த அளவுக்கு என்னால் எழுத முடியாது….!!! ஆகையால், வலைத்தளத்தில் இதனை எழுதியுள்ள பாஜக நண்பர் எஸ்.ஜே. ஜீவா யாதவ், அவர்களின் வேண்டுகோளின்படி இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்….!!! )

………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அப்புறம் கையில் இருக்கின்ற கருப்பு பணத்தையெல்லாம் அனுபவிப்பது தான் எப்படி சார் …???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்) திமுக பிரமுகர் தன் வீட்டுத் திருமணத்துக்கு 200 கோடிக்கு மேல் செலவு செய்தார் (தமிழகத்தில்தான் அந்தத் திருமணம் நடந்தது).

    ரெய்டு வந்தால், திருமண மண்டபம் இலவசம், கேடரர் அவர் காசு செலவழித்து நடத்தினார், மேள தாளம் இலவசம், திருமணத்துக்கான தாலியை அந்த ஜுவல்லரி இலவசமாகக் கொடுத்தது, என்னிடம் 250 ரூபாய் பாக்கெட்டில் இருக்கிறது, வங்கியில் 2300 ரூ இருக்கு என்று கணக்குக் காண்பிக்கத் தெரியாத கும்பலா திமுக குடும்பம்?

    அது சரி… பெர்ஃப்யூம் பேக்டரி முதலாளி, பெர்ஃப்யூமை இலவசமா இருக்குன்னு எங்க பூசினால் நமக்கென்ன? அதில் ஏன் ஆராய்ச்சி செய்யணும்?

    கோஹ்லி இந்தியாவில்தானே பணம் சம்பாதித்தார். அவருடைய மனைவியும்,. ஆனால் திருமணம் வெளிநாட்டில்தானே செய்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்