………………………………………

…………………………
என்னே ஒரு தைரியம்!
அப்பட்டமான பொய்களை அடித்துப் பேசுவது,
அம்பலப்பட்டாலும், அவமானப்படாமல் மீண்டும் ஊளையிடுவது..என்பதில் இவர்களை மிஞ்ச உலகத்திலேயே ஆளில்லை!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக 90 சதவிகித நிலங்களை வாங்கிவிட்டார்களாம்! இந்த நிலையில் திட்டத்தை ரத்து செய்தால் எப்படி? என எப்படித்தான் துணிந்து பொய் பேச மனம் வருகிறதோ..?
இன்றைக்கு சட்ட சபையில் அமைச்சர் நிர்மல்குமார் துல்லியமான விவரங்களை தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா? என்றால், முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார் என அமைச்சர் தெளிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா சம்பந்தப்பட்ட பகுதியில் 381 ஏரி, குளங்கள்..என நீர் நிலைகள் இருக்கின்றன” என்றார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தேவைப்படுவதாக கூறப்படும் 5,846 ஏக்கர் நிலத்தில் ( நியாயப்படி இவ்வளவு அதிக நிலங்கள் மிக அதிகம்) 1,802 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது!
அதுவும் ஏகனாபுரம், காரை, தண்டலம், சிறுகூடல் போன்ற பகுதிகளில் ஒரு செண்ட் நிலத்தை தரக் கூட மக்கள் முன்வரவில்லை.
மேலும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததாக பொய்யை கூறி உள்ளனர். சுற்றுச் சூழல் தொடர்பான மதிப்பீடே செய்யவில்லை. காரணம் செய்தால் அம்பலப்பட்டுவிடுவார்கள்!
சர்வதேச சுற்றுச் சூழல் விதிகளின்படி வனம், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மொத்த நிலப்பரப்பில்,
# 1,425 ஏக்கர் (26.5 சதவிகிதம்) நீர்நிலைகளை அழித்து,
# இந்தப் பகுதியில் தழைத்தோங்கி வளர்ந்துள்ள 36,635 எண்ணிக்கையிலான மரங்களை வெட்டிச் சாய்த்து,
# 63.86 சதவிகிதம் விவசாய நிலங்கள்! அதில்
3 போகம் விளையக் கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் உள்ளது.
இங்கே விமான நிலையத்தை உருவாக்க எப்படி சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்கும்…?
ஆனால், ’மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மாநிலத்தில் உள்ள தங்கள் அடிவருடியாயிருந்த ஆட்சியாளர்களை பயன்படுத்தி, அவர்களின் ரியல் எஸ்டேட் பேராசைகளுக்கு தீனி போட்டு, சூழலியல், இயற்கை பேரழிவு போன்ற அத்துமீறல்களுக்கு கூட சட்ட அங்கீகாரம் தந்து திட்டத்தை நிறைவேற்றத் துடித்தார்கள்’ என்பது உண்மை!
இதற்காக இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே, குறைந்தபட்சம் 150 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் மீறத் துடித்தனர்.
’’ஒருவேளை இது நிகழ்ந்திருந்தால் நீர் நிலைகள் அழிப்பின் விளைவாய் பெருமழை காலத்தில் அந்த விமான நிலையமும், சென்னை பெரு நகரமும் வெள்ளத்தில் மூழ்குவது திண்ணம்’’ என்கிறார்கள், சுற்றுச் சூழலியல் நிபுணர்கள்!
அந்த வகையில் தற்போதைய விமான சென்னை விமான நிலையத்தையே தற்போது 30 மில்லியன் மக்களை கையாளும் திறனைக் கடந்து 55 மில்லியன் மக்களை கையாளும் வகையில் தெர்மல் பிளாண்ட் 3ம், 5ம் ரெடியானதும் தகுதிபடுத்திவிடுவார்களாம். தேவைப்பட்டால் திருப்போரூர் பகுதியை பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
பொய்களே மூலதனமாக்கி, புரட்டுகளே தொழிலாக்கி, பைகளை நிரப்புவதே ஆட்சியென்றாக்கி, பாவம் செய்தலையே தர்மமென்றோர் இன்று தலை கவிழ்ந்தார்.
”பறிக்கப்பட்ட நிலங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் வேளாண்மை” என்பதே வேளாண்குடிகளின் வேண்டுகோளாகும்.
அங்கு தமிழக அரசே ஒரு விவசாய கூட்டுப் பண்ணையை உருவாக்கி, பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவிக்கலாமே!
இங்கே பெரும் அளவில் ஆடு, மாடுகளை வளர்த்து .36000 மரங்களில் கிடைக்கும் இழை,தழைகளை பயன்படுத்தி இயற்கை உரத் தயாரிப்பிலும் ஈடுபடலாமே! ( நன்றி – அறம் …சாவித்திரி கண்ணன் … )
……………………………………………………………………………………………………………………………………………………



உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க.
விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும் மற்ற அரசியல்வாதிகள் நிலங்களை வாங்கிப் போட்டிருக்காங்க.
ஜி ஸ்கொயர்னு நான் சொல்லலை. ஆனால் ஸ்டாலின் குடும்பத்தில்தான் ஏகப்பட்டது வளைச்சிருக்காங்க. அதனால விமான நிலையம் வரலை என்பது அவங்களுக்கு பிஸினெஸ் நஷ்டம்தானே.
அவங்க நிலம் வாங்கலை என்பதால்தானே ஏழுவழிச் சாலையை எதிர்த்தாங்க. நிலம் வாங்கியதால்தானே கோயம்பேடு பேருந்து நிலையத்தை இடம் மாற்றினாங்க, தங்கள் பிஸினெஸான லுலுவுக்கு கொடுக்க முயற்சித்தாங்க. திமுக தலைமை எதைச் செய்தாலும் அவங்களுக்கு அந்த ப்ராஜக்ட்ல ஐம்பது சதத்திற்கு மேல் உரிமை இருந்தால்தான் செய்வாங்க என்று எல்லோரும் சொல்றாங்க.
திமுகவின் ஆட்டு மந்தைகள், தமிழகம் பரந்தூர் விமான நிலையம் அமையாததால பத்து ஆண்டுகள் பின்னோக்கிப் போகும் என்று சொல்லுவாங்க. காசு வாங்கிய ஊடகங்கள் அதையே சொல்லும்.
இது சம்பந்தமாக ஒரு காணொளி இன்று பார்த்தேன். அதில் அவர், 2004லிலிருந்து திமுக எப்படி தமிழகத்திற்கு எதிராக நடந்தாங்க, திடுமென்று 2022ல் நிலம் வாங்கியதும் பரந்தூர் விமான நிலையத்தில் அக்கறை காட்டினார்கள் என்று விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். திருச்சி போன்ற நகரங்களின் புது பேருந்து நிலையக் கதைகளையும் கூறியிருக்கிறார். எப்படி அரசியல்வாதிகள் (திமுக, அதிமுக) சட்டத்தை மீறி மீனம்பாக்கம் ஓடுதள பாதையில் (அதாவது அந்த லைனில்) பல கட்டிடங்களை அனுமதித்திருக்காங்க, அவற்றை இடித்துத் தள்ளி மீனம்பாக்கத்தையே விரிவு படுத்தலாம்னு சொல்லியிருக்கார்.5-6 மணி நேரங்களில் சென்று சேரக்கூடிய பெங்களூருக்கு, பரந்தூர் விமான நிலையத்துக்குப் போக, அதற்குப் பிறகு விமானநிலையத்தில் நிற்க, என்பதற்கே 5-6 மணி நேரங்களாகிவிடும் என்றும் சொல்லியிருக்கார்.
முதல்வர் விஜய் செய்தது மிகவும் சரி. அவரைப் பாராட்டணும்.
இதில் இன்னொரு பாயிண்டையும் குறிப்பிட விரும்புகிறேன். சட்டமன்றத்தை லைவ் ரிலே செய்வது சூப்பர். இதில் சபாநாயகரால் நீக்கப்பட்ட அவைக் குறிப்புகளை, காணொளியாகவோ இல்லை ரீல்ஸிலோ வெளியிடுவது ஆறு மாதங்கள் சிறைக்கான தண்டனைக்குரிய குற்றம் என்பதை மாத்திரம் சட்டமாகக் கொண்டு வந்தாலே போதுமானது. எதிர்கட்சிகளையும், ஆளும்கட்சி பேசுவதையும் முழுமையாகக் காண்பித்தால்தான் உதயநிதி கம்பெனியின் போலித்தனம் மக்களுக்குத் தெரியும்.