…
…

…
‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்’ என்கிற அமெரிக்க டிவி ஷோ,
உலக அளவில் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில்
எதிர்பாராத வகையில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி
பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவார்கள்.
லேட்டஸ்டாக, அந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து
‘வி.அன்பீட்டபிள்’ (V.Unbeatable) என்கிற நடனக் குழு
கலந்து கொண்டு அவர்களது அசாத்திய திறமையை காட்டியுள்ளது.
நிகழ்ச்சியை நேரில் கண்ட ரசிகர்கள், நடுவர்கள், நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் பலத்த கரகோஷம்
எழுப்பினர்.
நிகழ்ச்சியில் – இந்த நடனம்
ஹிந்தியில் வெளியான “பாஜிராவ் மஸ்தானி” திரைப்படத்தில்
வரும் ஒரு பாடலுக்கானது என்று சொல்லப்பட்டது….
இதைப்பற்றிய சில விவரங்கள் வீடியோவிற்கு பின்….
முதலில் அந்த ஷோ இடம்பெற்ற வீடியோ –
…
V.Unbeatable Dance Crew From India
– America’s Got Talent 2019 –
…
…
மிகச்சிறப்பாக உலக அளவிற்கு தங்கள் திறமையை
எடுத்துச் சென்ற –
மும்பையைச் சேர்ந்த, இந்தக் குழுவின்
அத்தனை இளைஞர்களுக்கும், அவர்களுக்கு இவ்வளவு
அருமையாக பயிற்சி கொடுத்து வழிகாட்டியவருக்கும், நமது
உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்
தெரிவித்துக் கொள்வோம்.
————————————————————-
இனி கொஞ்சம் செய்தி –
“பாஜிராவ் மஸ்தானி” ஹிந்தி திரைப்படத்தில் இந்த பாடலுக்கு
ரன்வீர் சிங் குழுவினர் ஆடும் நடனம் வேறு மாதிரியானது –
இதுவும் சிறப்பாகத் தான் இருந்தது….
…
(பாடல் காட்சி கிடைக்காவிட்டால், அந்த திரையிலேயே
watch in you tube -ல் க்ளிக்கவும்…)
…
ஆனால், விஷயம் நடனத்தைப் பற்றியது அல்ல…
இசையைப் பற்றியது…
இந்தப் பாடலின் ட்யூன், இளையராஜா அவர்களின்
இசையமைப்பில், சுமார் 30 வருடங்களுக்கு
முன்பு – 1989 -ல் வெளிவந்த
“அபூர்வ சகோதரர்கள்” படத்தின் –
“அண்ணாத்தை ஆடுறார் ஒத்திக்கோ… ஒத்திக்கோ….”
பாடலின் அப்பட்டமான காப்பி….
…
…
பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய
சஞ்சய் லீலா பன்சாலி தான்
படத்தின் இசையமைப்பாளரும் கூட.
சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சிறந்த படைப்பாளி…
கலை ரசனை மிகுந்தவர். எப்போதுமே,
தன் படங்களின் இசை மற்றும் நடனக் காட்சிகளில்
பெரும் அக்கறை எடுத்துக் கொள்பவர்.
ஆனால், இது எப்படி நடைபெற்றது….?
30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப்படம் தானே…
யாருக்கு தெரியப்போகிறது என்று நினைத்து விட்டாரா…?
அல்லது அவரது உதவியாளர்கள் யாராவது
செய்த தவறா – தெரியவில்லை.
இளையராஜா அவர்களுக்கே இந்த விஷயம்
இன்னமும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்…!!!
60-களிலும், 70-களிலும், பல ஹிந்தி பாடல்கள் –
வகைதொகை இல்லாமல் தமிழில் காப்பி அடிக்கப்பட்டன.
இப்போது probably – just reverse of that …!!!
.
——————————————————————————————————–



இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும்,
அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் –
என் உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
K.M.Sir,
What you will say about Ilaiyaraja’s behaviour in Yesterday’s Music Programme.
ராம்நாத்,
பிடிக்கவில்லை…. சுத்தமாகப் பிடிக்கவில்லை.
நான் இளையராஜாவின் பாடல்களுக்கு என்றுமே ரசிகன் தான்.
ஆனால், அண்மைக்காலங்களில்
அவர் பேச்சும், நடந்துகொள்ளும் விதமும்
சுத்தமாகப் பிடிக்கவில்லை.
எவ்வளவு உயர்ந்த கலைஞராக இருந்தாலும் கூட –
இந்த அளவிற்கு ஆணவமும், அகங்காரமும் –
ஏற்கத்தக்கவை அல்ல.
என் மதிப்பில் ராஜா சார் மிகவும் கீழே இறங்கி விட்டார்…
இதைச்சொல்ல நான் மிகவும் வருந்துகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Ilayaraja is behaving like Hemanatha Bhagavathar.