……………………………………………….

……………………………………………….
சிலர் நாடகம், திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார்கள்…. சில அரசியலாதிகள் மேடையிலும் நடிப்பார்கள்….
ஆனால், இயல்பாக பேசுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பழகும் சாமர்த்தியம் ஒரு சிலருக்கு உண்டு….. சிலர் அதில் ஸ்பெஷலிஸ்டுகள்….
கடந்த 40 ஆண்டுக்காலத்தில் தமிழ்நாட்டில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களில், தமிழக மக்களுக்காக இவர்கள் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள்….???
வெளியே தெரியும்படி, சொல்லிக்கொள்ளும்படி – சில நற்காரியங்கள், ஏழை மக்களுக்கான மருத்துவமனைகள், பள்ளிகள், நூலகங்கள், சில திருமணங்கள், சில மாணவர்களுக்கு படிப்புக்கான உதவிகள், ஊக்குவிப்புகள், சில எளியவர்களுக்கான -டயலிசிஸ், இதய ஆபரேஷன் உதவி – என்று எதுவுமே இல்லையா … ???
என்ன செய்தீர்கள், என்றால், நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு எக்கச்சக்கம்…. இனியாவது செய்வதை பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புதிய இயக்கம் – முயற்சிகள் என்று பதில் வருகிறது ….!!!
எந்தெந்த இடங்களில் உதவிகள் செய்தீர்கள் என்றால் – 234 தொகுதிகளிலும் என்று பதில் வருகிறது ….!!!
70 ஆண்டுக்கால வாழ்க்கை முடிந்த பிறகு, இப்போது புதிதாக ஒரு அத்தியாயம் ….. எதற்காக … ? அதுவும், அவர்களுக்கு மட்டுமே தெரியும் ….!!!
அநியாய சாமர்த்தியம் … !!!
……………………………………………………………………………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…