…
…

HAL அதிகாரிகளின் மத்தியில், ரபேல் ஒப்பந்தம் குறித்து ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் ஃப்ரென்ச் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார் பேசும் ஒரு வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது…
இந்த உரையில், HAL நிறுவனத்துடன் தாங்கள் ரஃபேல் நிறுவனம் இணைந்து விமான தயாரிப்பில் ஈடுபடுவதை ஆவலோடு எதிர்பார்ப்பதாக அவர் கூறுகிறார்….. இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களுக்குள் நிலைமை அடியோடு மாறி விடுகிறது. ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசு நிறுவனமான HAL நீக்கப்பட்டு விடுகிறது. அனில் அம்பானியின் தனியார் நிறுவனம் அந்த இடத்தை பிடிக்கிறது…..
( வீடியோவும் ட்விட்டர் செய்தியும் கீழே )
ரஃபேல் அதிபர் இந்த வீடியோவில் பேசும்போது, ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்துடன் ஒப்பந்த பணிகள் நடந்து வருகிறது என்று கூறுகிறார்.
இதன் மூலம், பாஜக ஆட்சியிலும் கூட, 2015 வரை ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்துள்ளது தெளிவாகிறது. அப்படியென்றால், ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் காங்கிரஸ் ஆட்சியிலேயே நீக்கப்பட்டுவிட்டதாக பாஜக அரசு
கூறியது தவறு என்றாகிறது.
அதோடு, அவர் தனது பேச்சில், ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மகிழ்வுடன் இருப்பதாகவும், கடைசி கட்ட முடிவுகளை செய்ய எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் கூறி இருக்கிறார். அந்த நிறுவனமே HAL-உடன் ஒப்பந்தம்
செய்ய ஆவலாக இருப்பதாக கூறுவதும் தெளிவாகத் தெரிகிறது.
இதனால் டஸால்ட் நிறுவனம் தான் ஹிந்துஸ்தான் நிறுவனத்தை வேண்டாம் என்று கூறியது என்கிற வாதம் பாஜக தரப்பில் இட்டுக்கட்டிய பொய் என்று தெரிகிறது.
இதுவரை பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்த காரணங்கள்
அனைத்தையும் பொய் என்று இந்த வீடியோ ஆதாரம்
நிரூபிப்பதாகவே தெரிகிறது…
இதுவரை மாற்றி சமாளித்து வந்த ஜெட்லிஜி இப்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு என்ன விளக்கம் கூறுவார்…?
ஊழல் பளீரென வெளிப்பட்டு பல்லைக் காட்டுகிறதே….?
.
———————————————————————————————————————————————————–



இது பாஜகவின் போபர்ஸாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஜீரணிக்கக் கஷ்டமாக இருக்கு. (ஆனா டிமானிடைசேஷன் போது எந்தக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை என்பதும், மற்ற சிபிஐ வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை ஆகும்படி அரசின் மெத்தனம், லலித், மால்யா இவர்கள் விஷயத்தில் அரசு நடந்துகொண்டவிதம், இவையெல்லாம் மனதில் வருகிறது. கண்ணதாசன் பாடல் பொருத்தமா இருக்கும், ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே ஆயிரம் வஞ்சம்’)
கருணாநிதி பொதுவா என்ன செய்வார்னா, எல்லா ஊழலையும் வகை தொகை இல்லாமல் செய்வார், ஆனா பொதுவா அதன் பெனெஃபிஷரி, அவரா இருக்கமாட்டார், ஸ்டாலின், கனிமொழி, மனைவி, இணைவி, கேடி போன்றவர்களுக்குச் சென்றுவிடும். இல்லைனா பணம் டிரஸ்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் (ஏதாவது மொக்கைக் காரணத்தோட. அடுத்த 5 வருட விளம்பரத்துக்கு, கதை வசனம் எழுதினதுக்கு என்று)
இது அப்படியா? இல்லை வேறு வகையா என்று சரியா இனம் காண முடியலை. ஆனாலும் ஜெட்லி மேல, சுஷ்மா மேல எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இவர்கள்தான் வில்லா இல்லை அம்பான்னு தெரியலை.
பாரதியார் சும்மா இல்லாமல் ‘……. ஐயோ என்று போவான்’ என்று சொன்னாரே தவிர, அப்படி ‘ஐயோ’ என்று போனவர்கள் யாரையும் என்னால் பார்க்கமுடியலை. இது பாரதியார் குற்றமா இல்லை இவங்களோட சாமர்த்தியமா என்று தெரியலையே கா.மை சார்…
கா.மை சார்…. இந்திய மக்கள் 21 வயது நிரம்பிய வேலை இல்லாத எல்லோருக்கும் மாதம் குறைந்தது 10,000 ரூபாய் அரசு வழங்கணும். அரசு இலவச மருந்தும், இலவசக் கல்வியும் எல்லோருக்கும் கொடுக்கணும், னு நான் சொல்றேன்.
இப்படிச் சொன்னதுக்காக, நீங்கள் எல்லாரும் எனக்கு ‘நோபல் பரிசுக்கு’ சிபாரிசு செய்வீர்களா? இந்த நல்ல விஷயத்தைச் சொன்னதுக்காக எனக்கு நோபல் பரிசுக்கான தகுதி உண்டா இல்லையா?
பின்குறிப்பு: இன்று தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் தமிழகத்தில் எல்லாப் பேராசிரியர்களும் மோடி அவர்களுக்கு நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யச் சொல்லியிருக்கிறார். (மோடி அவர்களின் அறிவிப்புக்காகத்தான் இருக்கும்). டாக்டர் தமிழிசையின் கணவர் ஏற்கனவே சிபாரிசு செய்துவிட்டாராம்.
இப்படி ஒரு யோசனையை சொன்னதற்காக, அக்காவுக்கே எதாவது பரிசு கொடுக்கலாம்.மோடிஜி கொடுப்பார் என்கிற நம்பிக்கை, எதிர்பார்ப்பில் தான்
அக்கா இந்த யோசனையையே சொல்லி இருப்பார்.
ஊழல் நடந்தது என்று .யார் சொன்னார்கள் ?
காங்கிரஸ்தான் இதை பெரிது பண்ணுகிறது .
மற்ற எதிர் கட்சிகள் அதிகமாக பேசவில்லை .
ராகுல் காந்தி வயித்தெரிச்சலில் பேசுகிறார் .
ஒரே போடு – அப்புறம் யார் இதை பற்றி பேசப் போகிறார்கள் ?