…………………………………….

the above photo was a later addition based on latest news 😒
………………………………………………………………………………………………………………………………….

………………………………..
கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது…!!!
மேன்மேலும் இந்த மாதிரி பாசிடிவ்வான அம்சங்களை பார்க்கும் போது…!!!
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்களை நியமித்து அடிமாட்டுச் சம்பளம் தந்து வந்தனர்.
இந்தச் சூழலில் தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையில், ”மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான பேராசிரியர் காலிப் பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிரப்புவதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்” எனச் சொல்லப்பட்டதும்,
இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களும்,
”ஊழல் முறைகேடுகள், லஞ்சம் தவிர்த்து நேர்மையாக பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும்,
ஆசிரியர் பணி மாறுதல்களுக்கு கலந்தாய்வுகள் நடந்து செலவில்லாமல் மாறுதல்கள் உறுதிபடுத்தப்படும்” என்று சொல்லி உள்ளதும் உள்ளபடியே அனைவரையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள லஞ்சதில் தோய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே இந்த நோக்கம் நிறைவேறும்.
அத்துடன் ஏற்கனவே பல்லாண்டுகள் இந்தக் கல்லூரிகள் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றிவர்களுக்கு போட்டி தேர்வில் நீதிமன்றம் குறிப்பிட்டது போல 15 மதிப்பெண்கள் வரை அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் ’வெயிட்டேஜ் மார்க்காக’ தரவேண்டும்.
இதை நேர்மையாக செய்துமுடித்தாலும் கூட, இந்த நல்ல நோக்கத்தை அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர் நியமனங்களில் அமல்படுத்துவது பெரும் சவாலாகும்.
காரணம், அந்த காலத்தில் கல்வியை வளர்க்க எண்ணிய வசதிபடைத்த சான்றோர்கள் தங்கள் உன்னத நோக்கம் நிறைவேற தங்களின் நிலத்தை தந்து கட்டிடம் எழுப்பி உயர்கல்வி தந்தனர்.
ஆனால், இன்றோ, அவர்களின் வாரிசுகளில் பெரும்பாலோர் இந்தக் கல்லூரிகளை வணிகமாக கருதுகின்றனர். இதனால், அரசு சம்பளத்தை சுளையாக பெறப்போகும் பேராசிரியர்களிடம் பணி நியமனத்திற்கு 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை லஞ்சம் பார்த்து, அதில் அதிகாரிகள், அமைச்சருக்கும் பங்கு தருகின்றனர்.
’’அமைச்சர் லஞ்சம் வேண்டாம் என்று சொல்கிறாரா? ரொம்ப சந்தோஷம்’’ என்று சொல்லி, அந்த லஞ்சப் பணத்தை தங்கள் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள்…!
இவர்கள் எல்லாம் ஈவு இரக்கமற்று மற்றவர்களின் உழைப்பெனும் ரத்தத்தை உறிஞ்சி குடித்துப் பழகிய அட்டைப் பூச்சிகள்…!!!
ஆகவே, ஆசிரியர் நியமனங்களில் இருந்து இந்த தனியார் நிர்வாகத்தை முழுமையாக விலக்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் நேர்மையான பேராசிரியர்கள் நியமனம் என்பது சாத்தியப்படும்.
நேர்மையான ஆசிரியர்களால் தான் நேர்மையான மாணவ சமுதாயம் உருவாகி, நாளை இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படும்.
புதிய தவெக அரசாங்கம் ஊழல் முறைகேட்டை தவிர்க்கும் இது போன்ற
சில முன்னெடுப்புகளை செய்யும் போது அதற்கு ஆதரவான எதிர்வினைகள் சமூக தளத்தில் வலுவாக எழுந்து, மக்களும் கைகோர்த்தால் மட்டுமே நேர்மையான நிர்வாகம் சாத்தியமாகும். ( நன்றி – சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு ….. )
……………………………………………………………………………………………………………………………………….



எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார் (இது கருணாநிதியின் 2006ம் ஆண்டு ஆட்சியின்போது).
எதை எடுத்தாலும் திமுகவினர் லஞ்சம் வாங்கியிருக்கின்றனர். ஷிவ் நாடார் அவர்கள் 150 கோடி செலவில் திருச்செந்தூர் கோயில் பகுதியை சரி செய்ய விழைந்தபோது, எனக்கு 50 கோடி லஞ்சம் கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று சொன்னது பத்திரிகைகளில் வந்தது. எந்த பிஸினெஸுக்கும் சபரீசன் 51 சதம் தங்களுக்கு என்று பேசியது, அதனால் பிஸினெஸ் தமிழ்நாட்டை விட்டுச் சென்றது என்ற செய்தி வந்தது. அவர்கள் மாட்டிக்கொண்டபோது, பீகார் எலெக்ஷன் செலவுகளுக்கு பாஜகவிற்கு 400 கோடி கொடுத்துத் தப்பித்தார்கள் என்பதும் ஊடகத்தில் வந்தது.
இந்த எ.வ.வேலு 1996-2001ல் திமுக ஆட்சியின்போது தங்கள் கல்லூரிகளின் கேண்டீனுக்கு ரேஷன் அரிசியைக் கொண்டு சென்றது ஜூவியில் வந்தது என்று நினைவு.
இவர்களை எப்படி சட்டத்தின் முன்பு நிறுத்த இயலும்? கண்ணுக்குத் தெரிந்த செந்தில் பாலாஜியின் ஊழல், சிறைத்தண்டனை, ஜாமீன் என்று ஐந்து வருடங்கள் ஓட்டிவிட்டார். சிகாமணியும் அவர் மனைவியும் தப்பிவிட்டனர். பத்தாயிரம் ரூபாய் மாத்திரமே தன்னிடம் இருக்கிறது என்று சொன்ன ஸ்டாலின் வீட்டில் வெள்ளியினால் செய்யப்பட்ட பீரோ, இரண்டாம் தளத்தின் நீச்சல் குளம் எந்தப் பணத்தில் வந்தது? எப்படி அவர் விலை உயர்ந்த கார்களில் உலா வருகிறார், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுகிறார்? இன்பநிதி எப்படி திரைப்படங்கள் எடுக்க பணம் சம்பாதித்திருப்பார்? இந்தியச் சட்டத்தை மிக மிகச் சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதற்கு திமுக தலைமை குடும்பத்தைவிட வேறு உதாரணங்கள் தேவையே இல்லை.
இருந்தாலும், த வெ க செல்லும் பாதை மிகவும் கடினமான பாதை. அதற்கு மக்கள், அதிகாரிகள் அரசியல்வாதிகள் தயாராக இல்லை. பொழுதுபோகாமலா ஒன்றுக்கும் உதவாத பதர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்? அங்குதானே மக்கள் பணத்தை சுலபமாகக் கொள்ளையடிக்க முடியும். அதிகாரத்தில் இருந்தால் மிகச் சுலபமாகத் தப்பிக்க முடியும்? ஊடகங்களுக்கு அதன் உரிமையாளர்களுக்கு ஊழல் பணத்தில் பங்கு தந்தால் கப் சிப் என்று அரசைப் பாராட்டுவதே கதியாகக் கிடப்பார்கள்.
விஜய் அவர்கள், தன்னுடைய பாதை மிக மிகக் கடினமானது என்பதை விரைவில் புரிந்துகொள்வார். அவருக்கு மக்களின் ஆதரவு இருக்கவேண்டும். இருக்குமா?