திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு …??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்….!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் …!!!

………………………………

…………………………………………

நிறைய பேர் கேட்பது உண்டு…. அதெப்படி – 5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எந்த நடவைக்கையும் எடுக்கப்பட வில்லை ….

அதே மாதிரி, அதிமுக ஆட்சியிலும், திமுக ஊழல் மந்திரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லையே என்று ……..

திமுக-வின் கொள்கைபரப்பு செய்லாளர் ஆர்.எஸ்.பாரதி இப்போது வெளிப்படையாகவே தங்கள் கொள்கையை விளக்கிக் கூறி விட்டார் ….. நாங்கள் பங்காளிகள் ( அதாவது, பங்குதாரர்கள்….??) என்று ….!!!

………………………………………..

நேற்று வெளியான பத்திரிகைச் செய்தி கீழே –

………….

அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சி ஒருவேளை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதில் என்ன பெரிய உலக மகா தவறு இருக்கிறது….?

சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் 1964-ஆம் ஆண்டு பிரிந்தன. ஆனால் இன்று இரு கட்சிகளும் பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இதே மாதிரி தான், எங்களை விட்டு அவர்கள் (அதிமுக) பிரிந்து சென்று 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்காக நாங்கள் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்று கூறவில்லை.

ஆனால் அப்படி அமைத்தாலும் அதில் தவறு எதுவும் இல்லை.

என்ன நடந்தது நானே பலமுறை கூறியிருக்கிறேன். அதிமுக என்பது எங்களுக்கு பங்காளி போன்ற கட்சி.

எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தானே அவர்கள்.

தற்போது நாங்கள் எந்த கூட்டணி குறித்தும் பேசவில்லை. அதே நேரத்தில், இரு கட்சியினரையும் ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர். சட்டப்பேரவையிலும் ஒரே வரிசையில் தான் அமர்ந்து இருக்கிறோம்.

இதைப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் தொண்டர்களும் மனதளவில் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டார்கள் போல தெரிகிறது…. !!! 👩‍🦳👩‍🦳👩‍🦳

அந்த சூழலை உருவாக்கியதற்கு காரணம் இவங்க தான்.. என்று பதில் அளித்தார்.

( https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-dmk-alliance-would-not-be-wrong-says-rs-bharathi-810217.html )

……………………………………..

Latest addition –

………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு …??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்….!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர்.

    இரண்டு கழகங்களும் ஒரே கொள்கை என்று சொல்லி அவர்கள் கூட்டுச் சேர்ந்தால், நிச்சயமாகச் சொல்கிறேன், அதிமுக வாக்கு வங்கி என்று ஒன்று இருக்கவே இருக்காது. அவர்கள் மற்ற கட்சிக்கு, குறிப்பாக தவெக மற்றும் பாஜகவிற்குச் சென்றுவிடுவார்கள் (அல்லது அண்ணாமலை கட்சிக்கு). அதிமுக தொண்டன் எப்போதும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டான். அதிமுக அரசியல்வாதிகள், ஊழலில் திளைத்தவர்கள் வேண்டுமானால் திமுகவிற்குச் சென்றுவிடுவார்கள்.

    /இரு கட்சிகளின் தொண்டர்களும் மனதளவில் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டார்கள்// இப்படி நினைப்பவர்கள் பயித்தியக்காரர்கள் மாத்திரம்தான்.

    அமைச்சர் ரமேஷ் நல்லது செய்ய நினைக்கிறார். இந்தக் குறுகிய காலத்திலேயே தவெக அரசு நல்லது செய்ய நினைக்கிறது, ஊழலை ஒதுக்க நினைக்கிறது. இதுவே மிகப் பெரிய மாற்றம்.

    வெட்கம் கெட்ட திமுக அரசு, ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் ஐந்து லட்சங்கள் லஞ்சம் வாங்கினர் ஒவ்வொரு வருடத்திற்கும் என்பதே கேவலமாக இருக்கிறது. அதில் 2 லட்சம் கல்வித்துறை மந்திரிக்காம். இவனுகளை (லஞ்சம் வாங்கிய இந்த நாய்களை) சௌதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனை போல இரண்டு கைகளையும், ஏன் கால்களையும் சேர்த்தே வெட்டிவிட வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.