……………………………………….

…………………………………………
மாயமான – நகைகள் கோடிக்கணக்கில் திருடப்பட்ட பணம், பக்தர்களின் காணிக்கைகள் …….!!!
அதிர வைக்கும் அயோத்தி ராமர் கோயில் மோசடி …
திருடனே, ” திருடன் திருடன் ” -என்று கத்திக்கொண்டு ஓடுவது தானே இங்கே நடக்கிறது….???
இன்றைய செய்தித்தளத்திலிருந்து –
டெலிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள், கழிப்பறையில் பணம், மாயமான நகைகள்.. அதிர வைக்கும் அயோத்தி ராமர் கோயில் ட்ரஸ்ட் மோசடி …!!!
லக்னோ: ராமரின் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் கோயிலுக்கு மிகப் பெரியளவில் காணிக்கை கொடுத்து வருகிறார்கள். இருப்பினும், அந்த காணிக்கையில் பெரியளவில் முறைகேடு நடந்ததாகப் பூகம்பமே இப்போது வெடித்துள்ளது.
இதன் பின்னணி குறித்து …!
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் போடும் நன்கொடைகளில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைகள் பெரிதாக வெடித்துள்ளன. இது தொடர்பாகச் சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் அம்பலமாகியுள்ளன.
ராமர் கோயில் உண்டியலில் இருந்து சுமார் 7.75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இதுவரை 80 லட்ச ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள எட்டு ஊழியர்களும் உண்டியல் பணத்தைத் திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரது சொத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்திருப்பது விசாரணை அமைப்புகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் திருட்டுப் பணத்தைக் கொண்டு நிலங்கள், வீட்டுமனைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற மிக விலையுயர்ந்த சொத்துக்களை அவர்கள் வாங்கியுள்ளனர்.
போலீசாரின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை உணர்ந்த குற்றவாளிகள், தங்களுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க முயன்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் தங்களது மொபைல் போன்களில் இருந்த வாட்ஸ்அப் (WhatsApp) அரட்டைகள், குறுஞ்செய்திகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியத் தரவுகளை நீக்கியுள்ளனர். மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று, காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தங்களது மொபைல் போன்களை முழுமையாக ‘ஃபார்மேட்’ (Format) செய்து ஒட்டுமொத்த சான்றுகளையும் துடைத்தெறிந்துள்ளனர்.
நிர்வாக குறைபாடுகள், காணிக்கை பணம் எப்படித் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். எஸ்.ஐ.டி-யின் முதற்கட்ட அறிக்கை கோயிலின் நிர்வாக குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
காணிக்கை எண்ணும் போது பாதுகாப்பு காவலர் முன்னிலையில் இருக்க வேண்டும்,
அறைக்குள் நுழைபவர்களைச் சோதனையிட வேண்டும்,
மற்றும் சிசிடிவி காட்சிகளை 180 நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் போன்ற அடிப்படை விதிகள் எதுவுமே இங்கு –
பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் –
முன்னாள் ஓட்டுநர் டின்னு யாதவ்,
விதிகளுக்குப் புறம்பாகப் பல உண்டியல்களின் சாவிகளைத் தன் வசம் வைத்திருந்தார். டின்னு யாதவிடம் சாவிகள் இருந்த உண்டியல்களில் இருந்தே பணம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
(ட்ரஸ்ட் செய்லாளர் சம்பத் ராயிடம் இருக்க வேண்டிய சாவிகள், அவரது முன்னாள் டிரைவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது எதை குறிக்கிறது ….??? )
இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
கழிவறையில் ரூ.500 நோட்டுகள்.. அயோத்தி ராமர் சிலையின் தங்க, வெள்ளி நகைகளையும்.. அள்ளி சென்ற கும்பல்… விதிகளை மதிக்கல,
காணிக்கை பணத்தில் முறைகேடுகள் நடப்பதாக அறக்கட்டளை அதிகாரிகள் சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து, 2025-ல் அறக்கட்டளை மற்றும் எஸ்பிஐ அதிகாரிகள் கூட்டத்தில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டன.
அதன்படி ஊழியர்கள் பாக்கெட்டுகள் இல்லாத ஆடைகளை அணிய வேண்டும்,
சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும், முறையான சோதனைகளை நடத்த வேண்டும் போன்ற விதிகள் வகுக்கப்பட்டன.
ஆனால், இந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை.
காணிக்கை எண்ணும் அறையின் சிசிடிவி காட்சிகள் 180 நாட்களுக்குப் பதிலாக வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தன.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள காணிக்கை எண்ணும் பிரிவின் பொறுப்பாளர் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, அறக்கட்டளையின் முக்கிய அதிகாரி ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே அந்த பணியில் அமர்த்தப்பட்டார் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜூன் 7-ம் தேதி இந்த முறைகேடுகள் குறித்து புகார்கள் எழுப்பப்பட்டன…..
இருப்பினும், அதை வழக்கம்போல அறக்கட்டளை மறுத்தது.
இருப்பினும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் ஜூன் 13ம் தேதி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, பல அதிர்ச்சி தகவல்களைக் கண்டறிந்தது.
இதையடுத்து ஜூன் 23-ம் தேதி தனது முதற்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற கோயில் பிரதிஷ்டைக்குப் பிறகு,
குறிப்பாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது, அயோத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
இதனால் கோயில் உண்டியல்களில் ரொக்கப் பணமும், நகை உள்ளிட்ட பொருட்களும் அதிகமாக காணிக்கையாக வந்தன.
அந்த நேரத்திலேயே பணத்தை இவர்கள் திருடியுள்ளனர்.
இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து எஸ்.ஐ.டி அறிக்கையின்படி ஜூன் 25-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவிநாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ரமாசங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் டின்னு யாதவ்( ட்ரஸ்ட் செயலாளர் சம்பத் ராயின் டிரைவர்….)
ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, காணிக்கை எண்ணும் அறைக்கு அருகிலுள்ள கழிவறையிலிருந்து 2.5 லட்சம் ரூபாய் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது….
………………………………………………………….
விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் என்கிற போர்வையில், பல அயோக்கியர்கள்,( ட்ரஸ்ட் செயலாளர், சில உறுப்பினர்கள் உட்பட ) கமிட்டியில் /ட்ரஸ்டில் இடம் பெற்றுள்ளனர்…. கைது செய்யப்பட்டவர்கள் – அந்த பிரமுகர்களால் நியமிக்கப்பட்டவர்களே…அவர்களின் பினாமிகளே என்பது தெரிய வருகிறது….
திருடப்பட்ட பணத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டால்மெண்டில் ரிலீஸ் செய்யப்படுகிறது…..முதலில் 6 லட்சத்தில் தொடங்கியது, இப்போது ஆறரை கோடி வரை சென்றிருக்கிறது…..
மேற்கண்ட திருட்டுகளைத் தவிர, கோயிலுக்காக நிலங்கள் வாங்கப்பட்ட வகையில், பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது… முதலில் இந்த நிலங்களை ட்ரஸ்டிக்களின் பினாமிகளின் பெயரில் வாங்கி விட்டு, பிறகு அந்த நிலங்கள் அறக்கட்டளையால் கோயிலுக்காக வா ங்கப்பட்டுள்ளான. முதலில் 2 கோடிக்கு வாங்கப்பட்ட ஒரு சொத்து, பிறகு, அதே நாளில் அறக்கட்டளைக்கு 18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது….
உண்மையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு என்பது கொள்ளையில் ஈடுபட்டவர்களைத்தவிர வெளியே யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை; கண்டு பிடிக்கவும் முடியாது…..
கணக்கில் வைக்கப்பட்டவை கொள்ளை போனால், மதிப்பை கண்டுபிடிக்கலாம்….
கணக்கில் வரவு வைப்பதற்கு முன்னதாகவே, கொள்ளை அடிக்கப்பட்டால், யாருக்கு தான் அசல் மதிப்பு தெரியும் …???
யோகிஜி அமைத்துள்ள எஸ்.அய்.டி. கமிட்டியில் இடம் பெற்றிருப்பவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே…. இவர்களால், அதிகாரத்தில் இருக்கும் பெரிய மனிதர்களை மீறி என்ன கண்டுபிடித்து விட முடியும் …???
………………………………………….
அரசாங்கம் தண்டிக்காவிட்டாலும், அசல் சூத்திரதாரிகளை /குற்றவாளிகளை அந்த அயோத்தி ராமரே – அவசியம் தண்டிப்பார்…
சிவன் சொத்து மட்டுமல்ல – ராமர் சொத்தும் குல நாசம் தான் என்பதை நிச்சயம் புரிய வைப்பார்… என் கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது…
அரசன் அன்று கொல்வான் – தெய்வம் நின்று கொல்லும் …!!!
( Read more at: https://tamil.oneindia.com/news/india/what-happened-in-ayodhya-ram-mandir-donation-scam-as-sit-exposes-security-lapses-and-arrested-eight-014-812111.html )
……………………………………………………………………………………………………………………………………………………



மிகவும் அதிர்ச்சிகரமான அவமானமான விஷயம். பொதுவாக கோயிலில் அதுவும் சன்னிதானத்தில் கடவுள் அருகில் பணி செய்பலர்களுக்கு தெய்வ நம்பிக்கையும் பயமும் குறைவு. நான் பலப் பல கோயில்களில் இதனைக் கண்டிருக்ஙிறேன்.
அயோத்தி இராமர் கோயிலுக்கு பல முறைகள் (முன்பும் பின்பும்) சென்றிருக்கிறேன். நிறைய பாதுகாப்புகள் இருந்தும், திருப்பதி போன்ற முக்கியமான கோயில்களில் பின்பற்றப்படுவது போன்று ஓரளவு கடுமையான கண்காணிப்புகளுடன் கூடிய நடைமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை.
யோகி அவர்கள் புல்டோசர் தண்டனை கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தான் எல்லோருக்கும் சம நீதி வழங்குவதை உறுதிப்படுத்துவாரா? எனக்கு நம்பிக்கை இருக்கிறது
எனக்கு நம்பிக்கை இல்லை…
பின்னணியில் இருப்பவர்கள்
எல்லாரும் விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ்.,
பாஜக பிரமுகர்கள்….
எனவே, சில பலிகடாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு
வரப்படுவார்கள்….
பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய மனிதர்களையெல்லாம்
அந்த அயோத்தி ராமரே
தண்டித்தால் தான் உண்டு.
.
-காவிரிமைந்தன்
.