திரு.வழ…வழ…இல… கணேசன் – என்னும் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதி ….!!!


பாஜகவில் இருப்பவர்களுள் இவர் ஒரு ‘சத்தியசந்தர்’ என்று தோன்றிய
சமயங்களுண்டு. ஆனால், அப்படியெல்லாம் தப்பு தப்பா யோசிக்காதீங்க
என்கிறார் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் திரு.இல.கணேசன்…..

‘ பாஜகவின் சிங்கம் -1,2,3 etc…..’ ஹெச்.ராஜா அவர்களைப்பற்றி
ஒரு பேட்டியில், திரு.வழ.வழ.கணேசன் சொல்லும் பதில்களை பாருங்கள் –

கேள்வி –
ஹெச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து உங்கள் கருத்து …?

பதில் –
” ஹெச்.ராஜாவின் பேச்சை நான் முழுமையாக ஆய்வு செய்யவில்லை…. 🙂 🙂 🙂
சம்பவம் நடந்தபோது நான் அங்கே அவருடன் இல்லை…!!!
அவருடன் இதுபற்றி இதுவரை நான் விவாதிக்கவே
இல்லை (ஹரிச்சந்திரன் நினவிற்கு வருகிறாரா…? )

விவகாரம் இப்போது கோர்ட்டில் இருக்கிறது… நான்
கோர்ட்டை முழுவதுமாக நம்புகிறேன்…. 🙂 🙂 ”

கேள்வி –
அப்படியென்றால் போலீஸ் அதிகாரிகள் பொய் புகார் கொடுத்திருப்பார்களா…?

பதில் –
” இதை நீங்கள் ராஜாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் ”

“ராஜாவின் பேச்சில் தவறு இருந்தால், கோர்ட்டை விட
மக்கள் மன்றத்தில் நிச்சயம்
அவருக்கு தண்டனை கிடைக்கும்.”

(ஆக, இனி கோர்ட்டுக்கு போக வேண்டாம்…
எல்லாவற்றையும் மக்கள் மன்றத்திலேயே
தீர்த்துக் கொள்ளலாம்…!!! )

———————————————-

ராஜா இன்னமும் கைது செய்யப்படாமல்,
சிறையில் அடைக்கப்படாமல் இருப்பதன் காரணம்,
அந்த “சிங்க”த்தின் வீரமா ..? அல்லது ஆட்சியாளர்களின்
கோழைத்தனமா…? – மக்கள் அனைத்தையும் கவனித்துக்
கொண்டு தான் இருக்கிறார்கள்… அவர்களுக்கு தெரியும்…!!!

வழ.வழ.கணேசன்-ஜி சொன்னது போல், உரிய சமயத்தில்,
மக்கள் கோர்ட்டில் இதற்கு தீர்ப்பு கிடைக்கும்…!

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.வழ…வழ…இல… கணேசன் – என்னும் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதி ….!!!

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    “சுத்த’மான ” அரசியல்வாதி 🙂

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! முன்பு இதே பாேன்று ஒரு இடுகை நம் தளத்தில் வந்துள்ளது …அது
    : // திருவாளர் இல. வழ.வழ. கணேசன்…..!!! //
    Posted on பிப்ரவரி 8, 2016 by vimarisanam – kavirimainthan. …. அதை மீண்டும் நினைத்தால் எப்பவாவது இப்படியா … இல்லை எப்பவும் இப்படித்தானா என்று கேட்க தூண்டுகிறது ….. !!

  3. paiya's avatar paiya சொல்கிறார்:

    For us H.Raja is Hero and true leader. In tamilnadu, For the past five decades, nobody should defend Hinduism and praise hindu god. He will be isolated from main stream and on the contrary if you criticize Hinduism and praise Jesus and Mohamed, you will be appreciated. H.Raja is not a Pseudo Secularist. All should understand under which circumstance Raja busted.

  4. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    paiya

    உங்களைப் போன்ற மதஅபிமானிகளின் அறியாமை தான் ராஜாவின் பலம்.
    ராஜா’வின் உண்மை சுயரூபம் தெரியவேண்டுமானால், அவரது உள்ளூரில்,
    காரைக்குடியில், புதுக்கோட்டையில் போய் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    அவர் செய்த மோசடிகள் பற்றி உள்ளூர் மக்கள் கோடி-காட்டுவார்கள்.
    அவரது நாண’யத்தைப்பற்றி கதை கதையாக சொல்வார்கள்.
    பாஜக ஆட்சிக்கு வரும் முன்னர் இந்த சிங்கம் எங்கே தூங்கிக் கொண்டிருந்தது ?
    ஜெயலலிதா இருக்கும் வரை இது ஏன் உறுமவில்லை ?உறும வேண்டாம் – கனைக்க கூட இல்லையே ஏன் ?
    இந்த சிங்க’தை மற்ற பாஜக தலைவர்களே அ’சிங்கமாக பார்ப்பது உங்களுக்கு
    தெரியவில்லையா ? இங்கே தேவை காந்திஜி’யின் “ராம்” – கோட்சேயின் “ராம்”அல்ல.
    உங்களுக்கு மத அபிமானத்திற்கும், மத வெறிக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
    காவிரிமைந்தன் சாரின் தளத்தை தொடர்ந்து படித்து வந்திருந்தால் தெரிந்திருக்குமே. தயவுசெய்து உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்கள்.
    நமக்கு தேவை அமைதி, ஒற்றுமை, மத நல்லிணக்கம்.

  5. avudaiappanna's avatar avudaiappanna சொல்கிறார்:

    indukkalukka oruvar bechanaal matha viroothi entru alappatha

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      avudaiappanna
      அவர் இந்துக்களுக்காக மட்டும் பேசினால் தவறில்லை.
      ஆனால் அவர் அதை மட்டுமா பேசினார் ? மற்ற மதங்களை ஏசவில்லையா ?
      நீதிமன்றத்தை ஏசவில்லையா? காவல்துறை அதிகாரியை பொது இடத்தில் அவமரியாதையாக பேசவில்லையா ?
      இதெல்லாம் சரி என்று நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்களா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.