………………………………….

…………………………………….
( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது,
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில்,
பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு – கோவிலையும், உயர்ந்த அந்த கோபுரத்தையும், அதன் பின்னால் தெரியும் முழு நிலவையும் பார்த்துக்கொணடு, நேரம் போவதே தெரியாமல், பாலகுமாரன் சொல்வது போல் பல நினைவுகளில் மூழ்கியிருப்பேன்…
அற்புதமான சரித்திரப் பின்னணி நம்முடையது ….. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி எல்லாம் இருந்திருக்கிறோம்….. !!!
ஆனால் இன்று …… ??? தமிழர்களை, தமிழர்களின் பண்பாடு, வீரம், கலைத்திறன், அற்புதமான குணங்கள் – அத்தனையையும், சாராயக்கடையில் அடமானம் வைத்து விட்டு,
சுயநினைவேயின்றி, வேட்டி அவிழ்ந்து கிடப்பது கூடத் தெரியாதபடி, தெருவில் வீழ்ந்து கிடக்கும் தமிழர்களைக் காணும்போது, இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது ….. என்ன செய்ய …..??? – காவிரிமைந்தன் ) சரி, இதை இங்கேயே விடுவோம் …..
கீழே – பாலகுமாரனின் உடையார் அனுபவங்கள் –
……………………………………………………………………………………
ஆதித்த கரிகாலனை யார் கொன்றார்கள் என்று சரித்திரப் பேராசிரியர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சான்று இல்லாமல் அவர்கள் எந்த முடிவுக்கும் லருவதில்லை.
அந்த இடத்தை எடுத்துக்கொண்டு யாரால், எப்படி, இந்தக் கொலை நிகழ்ந்திருக்கக்கூடும் அதற்கு அந்த சூழ்நிலை என்னலாக அமைந்திருக்கும் என்று கற்பனை செய்வது எழுத்தாளர்களாகிய எங்களுடைய உரிமை.
ஆதித்தகரிகாலன் கொலையில் உத்தமசோழருக்கு பங்கு உண்டு என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். கண்டராதித்தன் மனைவி செம்பியன்மாதேவிக்கு பங்கு உண்டு என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.
வெறுமே சரித்திர நிகழ்வுகளை கல்லெட்டில் கிடைத்தது மட்டும் சொன்னால் சுவாரசியமாக இராது என்று, ஒரு நிலைப்பாடு எடுத்துக்கொண்டு அந்த அரசியல் சூழ்நிலையை திரும்பத்திரும்ப யோசித்து விவாதித்து இந்த உடையார் நாவல் படைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு உள்ளுணர்வாக நான் வாழ்ந்த பூமி என்கிற பிரமை உதவி செய்திருக்கிறது. இதை பிரமை என்றுதான் சொல்ல லேண்டும். ஏனெனில், நான் வாழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகள் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. ஆனால், மிக பலமாக, கனவிலும் நனவிலும் இந்த எண்ணம் என்னை துரத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.
அறியாத பருலத்தில் மட்டுமல்ல, அறிந்து தெளிந்து – மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ தேவரை நன்கு தெரிந்தபிறகு கூட இந்த பிரகதீஸ்லர கோயில் வெட்டவெளிக்குள் நுழைகிறபோது மிகப்பெரிய சிலிர்ப்பு ஏற்படும். கனமான மன அழுத்தம் உள்ளே நடக்கும். சோகம் கவ்விக் கொள்ளும்.
இது எல்லா சரித்திர இடத்திலும் நிகழ வேண்டுமல்லலா….???
இல்லை. மதுரை கோவிலிலோ, நாயக்கர் மஹாலிலோ, செஞ்சியிலோ, செயின்ட்-ஜார்ஜ் கோட்டையிலோ திருச்சியிலோ, ராமேஸ்வரத்திலோ ஏற்பட்டதேயில்லை. இங்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை என்னால் சரிவர விளக்கமுடியவில்லை. ஒரு ஊகமாகத்தான் இந்த மண்ணில் நான் பிறந்திருக்கக்கூடும் என்று சொல்கிறேன்.
மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவரை எரியூட்டிய மண்டபம் நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு பிறகு இயற்கை சீற்றத்தால் இடிந்து விழுந்தபோது பல நாட்கள் உபவாசமிருந்து இராசேந்திர சோழனின் தளபதி ஒருவன் அதை மறுபடியும். நிர்மாணித்திருக்கிறான்.
அந்தத் தூண் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதைத் தழுவிக்கொள்ளத்தான் ஆசை ஏற்பட்டது. என் ஐயனே நீ இத்தூண் அருகேதான் சிதையில் அடுக்கப் பட்டாயா என்று துக்கம் பொங்கியது.
பலமுறை பலமணிநேரம் அந்தத் தூணை தடவித்தடவி நானும் நண்பர்களும் இருந்தோம். அந்த ஊருக்கு உடையாளூர் என்று பெயர். இன்னமும் ஸ்ரீ ராஜராஜசோழன் நினைவாக இருக்கின்ற சிவலிங்கம் ஒன்று வாழைத்தோப்பில் சாய்ந்து கிடக்கிறது. இவையிரண்டும் பால்குளத்தம்மன் கோயில் (அமண்குடி) அருகில் உள்ளன.
ஸ்ரீ ராஜராஜத்தேவரின் இரண்டாவது மகள் மாதேவடிகள் பற்றிய கவ்வெட்டுள்ள கோவிலும் சிதைந்து போயிருக்கிறது. உள்ளே புகமுடியாதபடி சுற்றி புதர்கள் மண்டி யிருக்கின்றன.
ஸ்ரீ ராஜராஜத் தேவருக்காக அவரது மகன் ஸ்ரீ ராஜேந்திரத்தேவர் திலதர்ப்பணம் செய்த இடத்தில், திருவலஞ்சுழி கோயிலில் நாங்கள் வெகுநேரம் அமைதியாக அமர்ந்திருப்போம்.
தன் சிற்றன்னை பஞ்சவன்மாதேவிக்கு மட்டும் ஏன் பள்ளிப்படை எழுப்பினார் ஸ்ரீ ராஜேந்திர தேவர் என்கிற கேள்வி இன்னொரு புதினம் தரும்.
எனக்குத் தெரிந்தவரை உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் எங்கெல்லாம் நின்றாரோ, அங்கெல்லாம் நானும் நின்றிருக் கிறேன். எப்பொழுதும் நின்றிருக்கிறேன். இப்பொழுதும் போய் பார்த்து வந்துவிட்டேன் என்று ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு.
மற்ற கதைகள் எழுதுவதைவிட, இந்த நாவல் எழுதுகிற பொழுது மிகப்பெரிய குதூகலத்தை நான் அடைந்தேன்.
கதை எழுதத் துவங்கிய காலத்திலேயே இப்படியொரு ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற ஒரு எண்ணம் எனக்குள் தோன்றி விட்டது.
நல்லதற்கு, கெட்டதற்கெல்லாம் தஞ்சைத் தரணி போகையில் நான் இந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இதுபற்றியே அதிகம் சிந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட என் இருபத்தைந்து வயதில் ஆரம்பித்து இந்த ஐம்பத்தாறு வயதுவரை முப்பத்தியோரு வருடங்கள் இதற்காக உழைத்திருக்கிறேன்.
– பாலகுமாரன்
……………………………………………………………………………………………………………………………………………



வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை என்றே எண்ணத் தோன்றும்.
செம்பியன் மாதேவியார், உத்தமச் சோழனைப் பெற்றதைத் தவிர வேறு எந்த வகையில் ஆதித்தன் கொலையில் பங்கு உள்ளது என்று சொல்ல இயலும்? கடைசி வரை அவர் ராஜமாதாவாக, இராஜராஜன் குழந்தைகள் காலம் வரை வாழ்ந்திருந்தார், அளவுக்கதிகமான சிவன் கோயில்களுக்கு நிறையச் செய்திருக்கிறார்.
உத்தமச் சோழன் எனப்படும் மதுராந்தகத் தேவருக்கு மறைமுகமாக ஆதித்தன் கொலையில் பங்கு இருந்திருக்கலாம். நேரடியாக இருந்திருந்தால் பட்டத்திற்கு வந்திருக்க முடியாது. அவரது ஆட்சிக்காலம் அவ்வளவு அமைதியாக இருந்திருக்க இயலாது.
அவரது (உத்தமச் சோழன்) மகன், அறநிலையத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்ததும், பிற்காலத்தில், இராஜராஜன் அரியணை ஏறிய பிறகான காலத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி இழந்ததும் கவனிக்கத் தக்கது.
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // – ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு எங்கே போனது? இலவச காசு வாங்கிக்கொண்டு பல்லிளித்து வாக்களிக்கும் பித்துக்குளிகள் எக்கேடு கெட்டால் ஏன் நாம் கவலைப்படவேண்டும்?
பிச்சைக்காரர்களாக இருந்து (உண்மையான வறியவர்களைச் சொல்லவில்லை. ஆனால் தொலைக்காட்சி, தனக்கு என்று இடம், வாகனம் வைத்துக்கொண்டு அரசின் இலவசங்களை, கட்சி தரும் பணத்தை ஈஈஈ என்று இளித்து வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் நயவஞ்சகர்களை தேசத் துரோகிகளைக் குறிப்பிடுகிறேன்) எதை இலவசமாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு சொந்த நாட்டிற்கு துரோகம் செய்யும் இந்தக் கயவர்கள் டாஸ்மாக்கால் அழிந்தால் எதற்கு நாம் கவலை கொள்ளவேண்டும்? ஒன்றே ஒன்று வேண்டிக்கொள்ளலாம். இப்படிப்பட்டவர்களுக்குப் பிறப்பவர்களும் இவர்களைப் போலவே அழிவை நோக்கிச் செல்லட்டும் என்று. காரணம் இவர்களால்தானே மற்ற 60 சதத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.