………………………………….

……………………………………..
திமுக தோற்றது ஏன் – ??? என்று ஸ்டாலின் அவர்களுக்கு,
முன்னாள் திமுக தலைவர் ஓருவரே கூறுகின்ற காரணங்கள் –
*திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்*.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது….!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8) போதைபொருள் நடமாட்டத்தை அடக்கத் தவறியது…!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது…..
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.
12) போதைப் பொருள்,பட்டப்பகல் கொள்ளைகள் , கொலைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நிலை, காவல் மரணங்களை் என்று சட்ட ஒழுங்கு சீர்கெட்டது என பல குற்றச்சாட்டுகள்…..
13) ஊடகங்களை மிரட்டி விலை கொடுத்து ஊமை ஆக்கப்பட்டது.
etc etc ……..( நன்றி திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் )
………………………………………………………………………………………………………………………………………………….



போதைப் பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.
மக்கள் கஷ்டப்படும்போது பாலும் தேனும் ஓடுகின்றன என்று சேகர்பாபு, மா.சு. சென்னை மேயர் என்று சொல்லிக் கூத்தடித்தது.
எங்குமே பிரச்சனை இல்லை, எல்லாமே சூப்பர் திட்டங்கள், இனி ஒவ்வொரு பகுதியிலும் செழிப்புதான் என்று ஊடகங்களை விலைக்கு வாங்கி, தாங்கள் சொல்லுவதை வெளியிடச் செய்தது. இதனால் எல்லா ஊடகங்களுமே நம்பகத்தன்மை இழந்தன. காசு கொடுத்தால் குரைக்கும் நாய்கள் என்றுதான் ஊடகங்களின் மீது மக்களின் எண்ணம் இருந்தது.
திமுக தலைமை, உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு தெரிந்துகொள்ள விரும்பிய பொய்யை விற்றன நக்கீரன் இந்து ராம் போன்ற விலைபோன அடிமை ஊடகங்கள். யாராவது சென்ற அரசாங்கத்தின் செலவுகளை உண்மையான ஆடிட் செய்து வெளியிட்டால்தான், இந்து ராம், நக்கீரன் கோபால் போன்றோர்கள் எவ்வளவு பணத்தை வாங்கிக்கொண்டார்கள் என்பது வெளிப்படும்.
வெட்கமே இல்லாமல், உதயநிதி, இன்பநிதி என்று வாரிசுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும், மருமகனின் ஜி.ஸ்கொயர் ஆட்டமும், எந்த தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்றாலும் 51 சதம் தங்களுக்கு என்று விலை பேசியதும், ஒரு நல்ல மனிதர், தான் பிறந்த ஊருக்கு நல்லது செய்யணும் என்று நினைத்து 100 கோடி, திருச்செந்தூர் ஆலயத்து மேம்பாட்டுக்குச் செலவு செய்கிறேன் என்று சொன்னால், எனக்கு 50 கோடி கொடு என்று வெட்கமில்லாமல் கேட்டது. சைக்கிளில் போய்க்கொண்டிருந்த சாதாரண சபரீசன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஆளாளுக்கு பல கோடி ரூபாய் வாட்ச், செருப்பு, கார் என்று வலம் வந்து, தேர்தலில் நிற்கும்போது, 10,000 ரூபாய்தான் இருக்கிறது என்று பொய்க்கணக்கு கொடுத்தால், மக்களுக்குத் தெரியாமல் போய்விடுமா?
திரும்பவும் எந்தக் காரணம் கொண்டும் திமுக என்ற தீயசக்தி வந்துவிடக் கூடாது என்பதற்காக யாருக்குப் போட்டால் இவங்க வரமாட்டாங்க என்ற குழப்பம் காரணமாகவே திமுகவிற்கு 60 சீட்டுகள் கிடைத்துள்ளன. ஒருவேளை ஒரே ஒரு கட்சி அதிமுக மாத்திரம் களத்தில் இருந்திருந்தால், திமுகவிற்கு 6 சீட்டுக்கள் கூடக் கிடைத்திருக்காது
அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி தன்னிடம் இருந்தால் போதும் என்று நினைத்த எடப்பாடி.
திமுகவைத் தீவிரமாக எதிர்த்தால்தான் அதிமுக என்ற கட்சிக்கு மதிப்பு, அவசியம். அப்படி எதிர்க்காமல், மறைமுகக் கூட்டணியை வைத்துக்கொண்ட ஓபிஎஸ், எடப்பாடி போன்றோரே அதிமுக இந்த நிலைமையை அடைந்ததன் காரணம்.
ஒருவேளை தன் வாழ்வை தியாகம் செய்து அதிமுக தலைமைக்கு அஜித் வந்திருந்தால் அதிமுக வெற்றிப் பாதையில் போயிருக்கும்.