” தாத்தா கட்டிய தாலி” – பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ….

………………………………………….

திமுகவினர் ஈ.வே.ரா.பெரியாரை பெரிதும்
கொண்டாடி வரும் இந்நாளை சேர்ந்த –

இளைஞர் சமுதாயத்திற்கு, நான் கீழே தரும்
அந்நாள் விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்களுக்கு இந்த நிகழ்வுகள், அதிசயமாகவும்,
நம்பத்தகாததாகவும் கூட இருக்கலாம்.,,,

……………………………………………………………………………………………………………………………………..


” முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா..”

பெரியாருக்கும், மணியம்மைக்கும் நிகழ்ந்த திருமணம் –

  • இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில்
    பேசினார் அண்ணா.

பலவித எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் ஈவேராவின்
இந்தத் திருமணம் முடிந்தவுடன் கட்சியை விட்டு அண்ணா வெளியேறி, பின்

திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு
மடலின் கடைசியில் இப்படிச் சொல்கிறார்:

…………………………………………………..

‘பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது
வீசப்பட்ட ஈட்டி.

இயக்கத்தின் மாண்பு அதன் தலைவரின் தகாத செயலால்
தரைமட்டமாகிவிடும். உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவை காப்பாற்றிவிட முடியாது.

போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும்
அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய்
விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயனில்லை.

உழைத்து நாம் சிந்தும் கண்ணீர்த்துளிகள் அவரது ‘சொந்த ‘ வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும் வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக
எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் –
கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர். ‘

……………………………………………………………………………………………..


அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர
வாய் குளிர கேட்போர் காது குளிரக் கூறுவதும்
அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும்
பெருமையும் அடையும் விதமாக,
பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும் –

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான
நிலை இருந்தது. அந்த

வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்.

‘கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு ‘
என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே. ‘ஊருக்குத்தானய்யா உபதேசம் ‘ என்று இடித்துரைக்கிறார்களே.

‘எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது.
ஒருகாலை வீட்டிலும், ஒரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை.
நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை ‘ என்றெல்லாம்
பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா
என்று கடைவீதி தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.

வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண,
வேதனைப் படுகிறோம் தனிமையிலே!
(நன்றி: திராவிடநாடு – 21-8-1949)
………………………………………

பழைய குமுதம் வார இதழிலிருந்து ஒரு பக்கம் –
…………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to ” தாத்தா கட்டிய தாலி” – பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ….

  1. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

    என்ன சார் இப்படி எழுதியிருக்கிங்க… உங்கள சங்கின்னு இந்த திருட்டு ஒழுக்கமே இல்லாத திராவிட ஆதரவாளர்கள் சொல்லுவாங்களே

  2. புதியவன் சொல்கிறார்:

    நொண்டிக்குச் சறுக்கினது சாக்கு என்று பழமொழி உண்டு. அதுபோல, ஆட்சி அதிகாரத்தின்மீது ஆசை வைத்த அண்ணா, ஏதோ குறை சொல்லி பெரியாரை விட்டு விலகினார். அவரைப்பற்றியும், அவரது ஒழுக்கத்தைப் பற்றியும் பல செய்திகளை எல்லோரும் படித்திருப்பார்கள். அத்தகைய ஒழுக்கம் கொண்டோர் அண்ணாவை ஆதரித்ததில், அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை. நிற்க,

    பெரியாரின் கொள்கைகளை விமர்சிக்க முடியும். அவர் பிரச்சாரம் செய்ததை விமர்சிக்க முடியும். ஆனால் தன் வயதான காலத்தில் தனக்கு முழுமையாகப் பணி செய்ய (உதவிகள்) தன்னோடு இருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் என்ற ஒப்பந்தத்தில் நுழையாதிருந்தால், கதைகட்டி அவரை ஏளனமாகப் பேசும் இந்த உலகம். இந்தத் திருமணம் அவருக்கு அவப்பெயரைத் தரும் என்று இராஜாஜி நம்பி, அதனையே தன் ஆலோசனையாக பெரியாருக்குச் சொன்னார். ஆனால் பெரியார், தான் செய்த முடிவு சரி என்று நினைத்துப் பதிவுத் திருமணம் செய்தார். அவரது உடல் நிலைக்குச் செய்யவேண்டிய எல்லா சிசுருஷையும் மணியம்மை செய்தார் (அவற்றைப் பற்றிச் சிற்சில செய்திகளை நான் படித்திருப்பதால் அந்தத் திருமணம் பெரியாரின் உடல்நிலை சார்ந்தது என்ற எண் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. Something like a very personal nurse)

    அண்ணா பற்றி, திமுக பற்றி பெரியார் மாத்திரம் குறை சொல்லவில்லை. பாரதியார் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, பாரதிதாசனைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய அண்ணா மற்றும் திமுகவைப் பற்றி நன்றாகவே பாரதிதாசன் வைத்துச் செய்திருக்கிறார். பாரதிதாசன் எழுதியுள்ள ஏராளமான கட்டுரைகளில் இது தெரியவரும்.

    சாத்தான் வேதம் ஓதுவது போன்று, திருக்குறளைப் போற்றுபவர்கள், அதில் சொல்லப்பட்ட ஒரு அறநெறியையும் கனவில்கூடப் பின்பற்றாதவர்கள்.

    • புதியவன் சொல்கிறார்:

      //அவரைப்பற்றியும், அவரது ஒழுக்கத்தைப் பற்றியும் // இது அண்ணாவைப் பற்றிச் சொன்னது

    • கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

      Personal nurse வேணும்னா வச்சிருந்திருக்கலாமே. அந்த வசதி வாய்ப்புகள் ரொம்ப இருந்ததே…
      திராவிட இயக்கத்தில் ஒழுக்கமானவர்களை பார்ப்பதே அபூர்வம்

      • புதியவன் சொல்கிறார்:

        அப்போது அப்படி வசதிகள் இல்லை. அப்படி இருந்திருந்தாலும் அதனையும் ஊர் குறை சொல்லும். அதனால் அவர் செய்தது சரிதான் என்பது என் எண்ணம்.

        பெரியாரோ ஊர் ஊராகச் சுற்றுபவர். அவருடன் எப்போதும் செல்லவேண்டும். (அவர் கடைசிக் காலத்தில் Urineக்காக உதவி செய்யவேண்டியிருந்தது. இது தவிர பல்வேறு உடல் உபாதைகள். இவைகளுக்கிடையில், அவர் தான் நம்பிய கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்தார்). அவர் சிறிய வயதில் ஒழுக்கம் தவறியிருந்ததாக அவரே எழுதியிருக்கிறார் என்று நினைவு. ஆனால் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு அந்த மாதிரி தவறு செய்ததில்லை. அவர் தன் இயக்கத்தின்மூலம் சம்பாதித்ததை தன் சுகத்துக்காக அவர் அனுபவித்ததே இல்லை. எனக்கு பெரியார் கொள்கைகள் சுத்தமாகப் பிடிக்காது என்பதையும் இங்கு சொல்லிவிடுகிறேன்.

        • Ramaswamy thamilan சொல்கிறார்:

          ஆச்சரியம் நீங்க தான் இதை எழுதினீங்களா.. பெரியாரின் மீது எவ்வளவோ விமரிசனங்கள் இருந்தாலும் அவர் பொது வாழ்வில் ஒரு போதும் நெறி தவறியதில்லை.. என்னை பொறுத்த வரை மிகச்சிறந்த சீர்திருத்தவாதி தமிழர் தலைவராக ஏற்று கொள்ள மனம் மறுக்கிறது..

          • புதியவன் சொல்கிறார்:

            அவர் தமிழர் தலைவர் கிடையாது. அவர் சமூகச் சீர்திருத்தத்துக்காகப் பாடுபட்டவர். ஆனால் அவரது அடிப்பொடிகள், அவர் சேர்த்த பணத்தை அனுபவிப்பவர்கள், அவரின் பெயரைக்கொண்டு வியாபாரம் செய்து பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள், அவர் சொன்ன எல்லாவற்றையும் மூடிமறைத்து,த் தங்களுக்குச் சாதகமான கருத்துக்களையே சொல்லி வயிறு வளர்க்கின்றனர்.

            அத்தகைய வியாபாரிகளுக்கு, பெரியாரின் ‘கடவுள் இல்லை, பிராமண எதிர்ப்பு’ இரண்டையும் சொல்லிப் பிழைப்பு நடத்துகின்றனர். அதுபோல, அவரை எதிர்ப்பவர்களுக்கு ‘மகளைத் திருமணம் செய்துகொண்டார், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார், இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கக்கூடாது என்றார்’ என்பதையே பிரதானமாகச் சொல்லி எள்ளிநகையாடுகின்றனர்.

            ஆகமொத்தம் அவர் கொள்கைகளைப் பின்பற்றத்தான் ஆட்கள் கிடையாது. இதைக் கேள்வி கேட்டால், உடனே அண்ணா சொன்னதைச் சொல்லி, ‘பிறர் மீது எங்கள் கருத்தைத் திணிக்க மாட்டோம்’ என்று பேசி, தங்கள் குடும்பத்தினரைக் கோவில் கோவிலாகச் சுற்றச் செய்வதும், யாகங்கள் செய்வதும், வீட்டின் திருமணத்தில் தாலிகட்டி, ஐயரை வைத்துச் சடங்குகள் செய்வதும், முஸ்லீம்/கிறித்துவர்களின் இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் கடவுள் இருக்கிறார் என்று பேசுவதும் என்று அயோக்கியத்தனத்தைச் செய்கின்றனர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.