பாலாற்றுப் பகுதியில் நடப்பதென்ன….???

…………………………….

பெருமுகைப் பகுதியை ஒட்டிய (வேலூர்) பாலாற்றுப்
படுகையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 4-ம் தேதியிலிருந்து
ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது.

இந்த குவாரியிலிருந்து நாளொன்றுக்கு பல லட்சம்
மதிப்பிலான மணல், நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பப்படுவதோடு, சகல இடங்களுக்கும் கமிஷன்
பாய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மணல் குவாரி தொடர்பாக, சூழலியல் ஆர்வலர் ஒருவர்
ஆர்.டி.ஐ மூலம் சமீபத்தில் நீர்வளத்துறையின் விழுப்புரம்
கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் சில
கேள்விகளைக் கேட்டிருக்கிறார். நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்திலிருந்து அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.

அதில், ‘‘விழுப்புரம் கோட்ட நீர்வளத்துறை மற்றும்
சுரங்கவியல் கண்காணிப்பின்கீழ் இந்த ஒரே மணல் குவாரி மட்டுமே இயக்கப்படுகிறது.

‘பொக்லைன் டெண்டர்’ ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை.

தினக்கூலி அடிப்படையில் தேவைக்கேற்ற பணியாளர்கள் நியமித்துக்கொள்ளப்படுகிறார்கள். இணையத்தில் பதிவு
செய்த வாகனங்களுக்கு, வரிசைப்படி மணல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே –
அதுவும் – மனித சக்தி மூலம் – மட்டுமே
மணல் எடுக்கப்படுகிறது. அதற்குக் கீழே எடுக்கப்படுவதில்லை’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், “ஆற்றுக்குள் பொக்லைன் மூலமாகத்தான்
மணல் அள்ளப்படுகிறது. பல அடி ஆழத்துக்கு மணலை
எடுத்து விட்டனர். தற்போது, நூற்றுக்கணக்கான
பனைமரங்களைச் சாய்த்து 5 கிலோ மீட்டர் அளவுக்கு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்று சூழலியல் ஆர்வலர்கள்,
புகார் சொல்கின்றனர்.

உண்மையில் அங்கு நடப்பது என்ன….?

…………………………………………………………………

புகைப்படங்களைப் பார்த்தாலே புரிந்து விடுமே….!!! ( புகைப்படங்கள் – நன்றி – விகடன் )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பாலாற்றுப் பகுதியில் நடப்பதென்ன….???

  1. புதியவன் சொல்கிறார்:

    மணல் கொள்ளையடித்து, அதனை கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குக் கடத்துகிறார்கள். கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள முடியாது (இது 30 வருடங்களுக்கும் மேலாக). தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்பதால் இந்த மணல் கொள்ளைக்கூட்டம் மணலைத் திருடுகிறது.

  2. Ganapathy சொல்கிறார்:

    Unfortunately, no one cares about the environment. These kind of happening for years, but at least we can justify what happened 2-3 decades back because knowledge about the impacts arising from sand removal, awareness to prevent/ mitigate the damage, and alternative options were not there. But now with what has happened so far and the damages caused by environmental degradation, it is surprising to see that the government has not learnt and the elected representatives and officials conniving with the sand mafia to steal this natural resource. I guess we will never learn. In many ways, I think a total collapse and rebirth to a sustainable life is required.

    This is equally true on encroachments in water bodies too.

    Thank you Kaviri Mainthan Sir for bringing to attention.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.