…………………………………….

………………………………………
சாட்டிலைட் தொலைக்காட்சிகளோ, சினிமா தியேட்டர்களில்
அட்வான்ஸ் புக்கிங் / ரிசர்வேஷன் வசதிகளோ இல்லாத
அந்த நாட்களில் –
பாக்யராஜ் படம் பார்க்கச் சென்று, பார்க்க முடியாமல்
பல தடவைகள் திரும்பிய அனுபவம் எனக்கு உண்டு.
காரணம், தியேட்டர் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும்
கையால் எழுதப்பட்ட போர்டுகள்….
“பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இன்று
காலைக்காட்சி மற்றும் மேட்டினிக்கு ஆண்களுக்கு
டிக்கெட் கிடையாது…. பெண்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்…. “
ஆமாம் – அந்த அளவுக்கு அந்த நாட்களில், நடுத்தர வயது
குடும்பப்பெண்களை ஈர்த்தன பாக்கியராஜ் படங்கள்.
அருமையாக பின்னப்பட்ட குடும்பக்கதை, படம் பூராவும் தெளிக்கப்பட்டிருக்கும் அருமையான நகைச்சுவை காட்சிகள் என்று,
அனைவரையும் கவர்ந்திழுக்கும். திரைக்கதை மன்னனாக
திகழ்ந்தார் பாக்யராஜ்.
கதை, வசனகர்த்தா, நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர்,
திரைப்பட தயாரிப்பாளர் ஆகிய பல முகங்கள் அவருக்கு
இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது அவரது ஸ்க்ரிப்ட்
அமைக்கும் திறமையே…. !!!
இன்று காலை – வாக்கிங் போய் விட்டு வந்த அவர் –
வீட்டிற்கு வந்து சில நிமிடங்களில் மாரடைப்பால் மறைந்து விட்டார்.
அவரை நான் – லக்கிமேன் – அதிருஷ்டசாலி என்று கூறுவதற்கு
முக்கிய காரணம் – நோய்வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக
அலைந்து, தானும் கஷ்டப்பட்டு, குடும்பத்தினரையும்
கஷ்டப்படுத்தாமல் – சட்டென்று உயிர் பிரியும் அதிருஷ்டம்
கிடைக்கப்பெறும் முதியவர்கள் அனைவருமே அதிருஷ்டசாலிகள்
என்று தான் நான் கருதுகிறேன்….( எனக்கும் அந்த அதிருஷ்டம்
கிடைக்க வேண்டும் என்பது ஆண்டவனிடம் நான் முன்வைக்கும் எனது தினசரி பிரார்த்தனைகளில் ஒன்று…)
………………………..
பாக்கியராஜின், பாலக்காட்டு மாதவனை பார்த்தவர்கள் /
பார்ப்பவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்…. மிகச்சிறந்த
ஒரு பாத்திரப்படைப்பு அது…. அதை மிகச்சிறப்பாக படைத்து,
இயக்கி, நடித்துள்ள பாக்கியராஜ் …. ஒரு அற்புதமான, என்றும்
இறவாத படைப்பாளி ….!!!
கீழே – உயிரோட்டமுள்ள பாலக்காட்டு மாதவன் …..
……………..
………………………………………………………………………………………………………………………………………………………



தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…