…
…
…
– 1950-களிலும், 60-களிலும் – தன் கற்பனையாலும்,
கலை மற்றும் படைப்புத்திறமையாலும் ஹிந்தி
திரையுலகை ஆக்கிரமித்திருந்தவர் புகழ்பெற்ற நடிகர்,
இயக்குநர், தயாரிப்பாளர் வி.சாந்தாராம்.
சாந்தாராம் ஒரு மராத்திக்காரர். துவக்க காலங்களில்
மராத்தி படங்களில் இயங்கி வந்தாலும், பிற்பாடு
ஹிந்தி திரைபடங்களில் நடிக்க, இயக்கத் துவங்கிய பிறகு
அவரது புகழ் அகில இந்திய அளவில் பரவியது.
வி.சாந்தாரம் அவர்களின் படைப்புகளை
இரண்டு வகையாகச் சொல்லலாம்.
வித்தியாசமான, கதைக்கரு உடைய திரைப்படங்கள்
மற்றும் இசை, நடனம்,வண்ணச்சேர்க்கை
ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து
உயர்ந்த ரசனைகளுக்கு தீனி போட்ட படங்கள்…
இதில் முதல் ரகத்துக்கு “தோ ஆங்கேன் பாரா ஹாத்”
(பொருள் – இரண்டு கண்களும், 12 கைகளும்…
வெகுகாலத்திற்குப் பிறகு இது தமிழில் எம்.ஜி.ஆர்.
நடித்து “பல்லாண்டு வாழ்க”
என்கிற பெயரிலும் வந்தது…)
இரண்டாவது ரகத்துக்கு “ஜனக் ஜனக் பாயல் பாஜே” …
1955-ல், வெகுசில இந்தியப்படங்களே வண்ணத்தில்
வெளிவந்திருந்த நிலையில்,
ஹிந்தியில் அற்புதமான வண்ணச்சேர்க்கைகளுடன்,
இசையும்-நடனமுமாக அமர்க்களப்படுத்தியது
இந்த ஹிந்தி படம். இந்தியா முழுவதும்
இந்த படம் அமர்க்களமாக ஓடியது.
இந்தியாவின் இந்தி தெரியாத மாநிலங்களில் –
இந்த படத்திற்கு மொழி ஒரு தடங்கலாக
இருந்ததே இல்லை…
இசை, நடனம், வண்ணம் போதுமானதாக இருந்தது.
சாந்தாராம், தன் படங்களில் இசையமைப்புக்கும்
பெரும் அக்கறை எடுத்த்துக்கொள்பவர்.
இன்றைய என் விருப்பத்தில் –
சாந்தாராமின் ” ஜனக் ஜனக் பாயல் பாஜே” மற்றும்
“தோ ஆங்கேன் பாரா ஹாத்”
திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள் கீழே –
இவற்றின் இசையமைப்பாளர் எப்போதும்
சாந்தாராமுக்கு பிடித்த வசந்த் தேசாய்…
( பாடல்கள் slow ஆக இருக்கும்… 1955-57..!!!)
பின் குறிப்பு – ஒருவேளை வீடியோ இங்கு திறக்கா விட்டால்,
watch on youtube என்கிற இடத்தில் க்ளிக் செய்யவும்.
———————
Jhanak Jhanak Paayal Baaje (1955)
Gopi krishna –
…
…
Murli Manohar Krishna Kanhaiyya –
…
Shiv TanDav
…
Do ankhen baarah haath …(1957 )
ye maalik
…
————
.
————————————————————————————————————



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…