…
…

…
ஹிந்தியில் இசையமைப்பாளர் ஓ.பி.நய்யார் “ஹம்மிங்” பாடல்களை இசையமைப்பதில் புகழ்பெற்றவர். ஆனால், அவரது படைப்பு விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடல்கள் தான்.
ராஜவின் ஹம்மிங் நிறைந்த பாடல்களை எண்ணவே முடியாது… எண்ணற்ற பாடல்களில், மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன ராஜா சாரின் ஹம்மிங் இசை.
ஹம்மிங் துவங்கும்போதே, நமக்கு அது எந்த பாடல், எந்த காட்சி என்பது நினைவிற்கு வந்து விடுகிறது என்பது இன்னொரு சிறப்பு…. காட்சிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும் இசை…!
ஒரு trial என்றே வைத்துக் கொள்ளலாம். முறையாக யோசித்து செய்தால் இன்னும் பலமடங்கு சிறப்பாக செய்யலாம்…
ராஜாவின் ஹம்மிங் சிலவற்றை தொகுத்துப் பார்த்துள்ளார் நண்பர் ஒருவர்… அவரை எனக்கு தெரியாது… அதனை, சேகர் என்கிற என் நண்பர் ஒருவர் வேறு format-ல் அனுப்பியதை, யூ ட்யூப் வடிவில் பதிவேற்றி இங்கும் காண / கேட்கச் செய்வது மட்டும் தான் நான்.
இதற்கு நன்றி கூறுவது என்றால் – யாருக்கு கூறுவது..? தொகுத்தவருக்கா, அனுப்பியவருக்கா, பாடியவர்களுக்கா – அல்லது இசையமைப்பாளருக்கா…?
நமக்கு ராஜா சாரை தந்த அந்த இறைவனுக்கு நன்றி கூறுவது, எல்லாவற்றையும் உள்ளடக்கி விடும் என்று நினைக்கிறேன்.
கீழே – ஒரு 13 நிமிட கதம்பப் பூக்களின் மணம் வீசும் வீடியோ…
…………..——–
———————————————————————————



MSV கூட எண்ணற்ற ஹம்மிங் பாடல்கள் தந்திருக்கிறார். பலர் இதயத்தை வருடியவை. காலத்தால் அழிக்க முடியாதவை. 30 நிமிடத்திலோ 60 நிமிடத்திலோ கூட அடக்கி விட முடியாதவை.
Most respected sir have u ever heard the songs of msv and rm.
என்ன John இப்படி கேட்டு விட்டீர்கள்…?
MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!!
Posted on ஜூலை 30, 2015 – என்கிற தலைப்பில் வந்த
தொடரை நீங்கள் பார்க்கவில்லையா…?
எனக்கே கூட அந்த 5 பகுதி தொடரை மீண்டும் பார்க்க/கேட்க
வேண்டும் போலிருக்கிறது…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!!
சில ஹம்மிங், மனதில் ஒன்றிப்போய்விட்ட பாடல்களை நினைவுபடுத்துகின்றன. பல ஹம்மிங், அவ்வளவு சிறப்பான பாடலாக அமையவில்லை. யாராவது, இளையராஜாவின் ‘அட்டஹாசமான 100 கீதங்கள்’ என்று தொகுத்துத் தந்தால், மீண்டும் அவர் இசையின்பத்தில் முழுகலாம் (பாடல் ஆரம்ப வரிகளே போதும்). அதுவும் ஜென்ஸி அவர்கள் (உச்சரிப்பு தவறாக இருந்தபோதும்) நல்ல ரசனைக்குரிய பாடல்களைப் பாடியிருக்கிறார். (of course, எஸ். ஜானகி அவர்களும்)
“Dalit outreach with Ilaiyaraaja’s Padma” – The New Indian Express.
தி நியுவ் இந்தியன் எக்ஸ்பிரசின் கீழ்த்தரமான புத்தியை யாராவது இங்கு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அது இன்று மன்னிப்பு கேட்டாலும் அதன் கயமை வெளிப்பட்டமைக்கு ஒரு வகையில் நல்லதே.
மேஸ்ட்ரோவை கொண்டாடும் காமை சாரும் இந்த கயமையை கண்டுகொள்ளாதது வியப்பளிக்கின்றது.