…
…

…
எதை எழுதினாலும், அரசாங்கத்திற்கு விரோதமாகவே எழுதுகிறாய் என்று குற்றச்சாட்டு வருகிறது.
அரசாங்கங்களின் “சாதனை” களைத்தான், அவர்கள் வெளியிடும் கோடிக்கணக்கான விளம்பரங்கள் பறைசாற்றுகின்றனவே…
வேதனைகளை யார் எடுத்துச் சொல்வது…?
எதிர்க்கட்சிகள் எடுத்துச் சொல்லலாம்…
தேர்தல் அரசியலில் ஈடுபடாத பொது நல இயக்கங்கள் சொல்லலாம்.
சுய-பலன் எதையும் எதிர்பார்க்காத –
சமூக நலனில் அக்கறையுடைய தனி மனிதர்களும் சொல்லலாம்…
நான் எழுதுவதெல்லாம் இந்த வகை தான்…!
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தான் கடிவாளம் போட்டு வைத்திருக்கிறது. எதையும் அவர்கள் கட்சி கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், சாதாரண பொது மக்கள் இந்த மாதிரி செய்திகளை எல்லாம் அறிய வரும்போது – யோசிக்க வேண்டும்… இவற்றிற்கு என்ன தீர்வு
என்றும் யோசிக்க வேண்டும்.
உலக பொருளாதார மாநாடு ஸ்விஸ்ஸில், டவோஸில் நடந்ததும், அதில் இந்தியப் பிரதமர் முக்கிய உரையாற்றியதும் அனைவரும் அறிவர்.
இந்த மாநாட்டினையோட்டி, இதில் வெவ்வேறு குழுக்களில் விவாதிப்பதற்காக, உலக அளவில், பல ஆராய்ச்சி நிறுவனங்கள் பொருளாதார புள்ளி விவரங்களை திரட்டி ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவை உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவானவை.
அவற்றிலிருந்து இந்தியா சம்பந்தப்பட்ட சில விவரங்களை கீழே தனியே எடுத்துத் தருகிறேன்.. இவற்றைக் கண்டு உங்களுக்கு எத்தகைய உணர்வுகள் உண்டாகின்றன என்பது தான் இந்த நாட்டைப்பற்றி உங்களுக்குள்ள கவலையை
பிரதிபலிப்பதாக இருக்கும்.
– 2014-ஆம் ஆண்டில் 10% இந்திய பணக்காரர்களிடம் இந்தியாவின் மொத்த வருமானத்தின் 56% போய்ச்சேர்ந்தது –
– ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பின் 73 சதவீதம் -இந்தியாவின் 1% அளவிலுள்ள பணக்காரர்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது.
( யார் இந்த 1 % பணக்காரர்கள் என்பதை பட்டியலில் வெளியிடவில்லை என்றாலும், ஒரு சிலரை நாமே புரிந்து கொள்ள முடியும் …! )
– கிட்டத்தட்ட இந்த நாட்டின் மொத்த பட்ஜெட் தொகைக்கு சமமான 20.9 லட்சம் கோடி ரூபாய் இந்த 1 % இந்திய பணக்காரர்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறதாம்….
-இது எதனை காட்டுகிறது…?
– இதே காலத்தில் – இந்திய மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி – அதாவது 67 கோடி பேர், தங்களது சொத்தில் சுமார் 1 % உயர்வை கண்டிருக்கிறார்கள்…!!!
– அதிக வருமானம் பெறும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கும் மிகச்சாதாரண தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தினக்கூலிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கிறது….
…

…
இந்தியாவின் ஒரு டெக்ஸ்டைல் (ஆடை உற்பத்தி நிறுவனம்) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெறும் ஒரு வருட சம்பளத்திற்கு சமமான தொகையை சம்பாதிக்க ஒரு சாதாரண தொழிலாளி 941 வருடங்கள் உழைத்தால் தான் முடியுமாம்….
அதாவது குறைந்த பட்ச, உச்சபட்ச ஊதிய ஒப்பீடு அளவுகள் –
இந்தியாவில் 1 : 941 என்கிற அளவில் உள்ளன…!
(இது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1 : 350 என்கிற அளவில் இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன…!!! )
ஒட்டு மொத்த வளர்ச்சி என்பதற்கும் சமச்சீர் வளர்ச்சி என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி என்பது சீராக அமைந்தால் தான் அந்த நாட்டின் அனைத்து மக்களின் வாழ்க்கைத்தரமும்உயர்வதாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட வர்க்கம் மட்டும் அதிக செல்வத்தை குவித்துக்கொண்டே போவது – வளர்ச்சியை குறிக்குமா…? அல்லது உடம்பின் ஒரு பகுதியின்
வீக்கத்தை குறிக்குமா…?
இந்த உலக பொருளாதார மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இன்னும் சில விஷயங்களையும் கூறுகின்றன….
( நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற ) 29 வளர்ச்சி அடைந்த நாடுகள் முதல் பிரிவில் தனியே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
வளர்ச்சி அடைந்து வரும் 74 நாடுகளின் பட்டியலில் – சமச்சீர் வளர்ச்சியில் சீனா 26-ஆவது இடத்திலும் இந்தியா 62-ஆவது இடத்திலும் இருக்கின்றன…!!!
(இப்போதெல்லாம் சீனாவில் கூட பில்லினியர்கள் அதிகரித்து விட்டார்கள்…!!!)
சமச்சீர் வளர்ச்சி இல்லையே என்று அவர்கள் கவலைப்படுவது வேறு காரணங்களுக்காக –
ஒரு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சமச்சீராக வளர்ச்சி அடையும்போதுதான் அனைவருடைய வாங்கும் சக்தியும் அதிகரித்து, அதன் மூலம் விற்பனைக்கான சந்தையும் விரிவடையும்.
பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் மீது அக்கறை செலுத்துவதன் முக்கிய காரணமே, இங்கே அதிக அளவிலான நடுத்தர வர்க்கத்தினர் இருப்பதும்.
அவர்களது வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதும் தான்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த நடுத்தர வர்க்கத்தினரின்
எண்ணிக்கையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும், அவர்களது வருவாய் அதிகரிக்காமல் இருப்பதும் மல்டிநேஷனல் கம்பெனிகளை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது….! அவர்கள் சந்தையை இது பாதிக்குமே என்பது அவர்களின்
கவலை….
பொருளாதார ஆய்வுகளின் முடிவுகளை, பாசிடிவ்’வாக எடுத்துக்கொண்டு, நாட்டின் செல்வம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சிலரிடத்தே மட்டும் சென்று சேர்ந்து விடாமல் இந்த நாட்டின் மக்கள் அனைவரும் சீராக பொருளாதார வளர்ச்சி பெறவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் சீராக உயரவும்
மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
செய்வார்களா…?
———————-
பின் குறிப்பு –
குறைந்த பட்சம் இந்த ஒரு இடுகைக்காவது எதிர்ப்பு பின்னூட்டங்கள்
இருக்காது என்று நம்புகிறேன்.
——————————————————————————



It is very shocking to know that the 3/4th of the wealth in india and also all over the world travels towards very few people and the vast majority of the people are holding very few wealth in their possession. It is a red signal for the entire world about capitalism,which works for very few and destroys the livelihood of many. Unfortunately, the rich and mighty corporates controls the democratically elected governments in the world and supply money (illegitimate?) for the political parties to stand in elections without any transparent manner. The ruling parties, which thrives on the money supplied by the rich and mighty corporates are duty bound to create policies, which suits the 1% of the population. In our country, we witness this upward trend of the rich becomes richer since 1991 onwards, when Narasimha Rao government introduced liberalization and globalization, which is being followed more vigourously by all the government. As a result, we see sudden spike in increase of wealth possessed by these 1% of the privileged class. The corporate lobbies and the media controlled by corporates consistently making propaganda that higher corporate tax will lead to lesser collection and more inflation and lesser tax structure will have more tax compliance. We see in most of the countries, including our own country, tax evasions and stashing funds to abroad by dodging tax and utilizing the liberal policies people do not pay the taxes which are due to government. Multinational corporations,indian big companies are paying huge salary and perks to their senior officials and pay very less to their other employees, which may not be a real wage. They also pay huge sums of dividents to their share holders out of the profits but refuse to pay to the employees, who are directly involving in daily activities of the organizations, this includes production etc. Very few board of directors are determining the companies fate sitting somewhere, such as what to produce, where to produce,how to produce and what to do with profits. As Dr.Richard Wolff, a professor, teaching marxist economics in university in USA for over 4 decades, suggested that the work places must be democratized by Co-operative methods of production and running of the organization by workers themselves and decide all the matters, we can try this method here and for which the government must co-operate. Inequality in any society is dangerous and may lead to complicated problems for the countries. We have never seen the countries discussing these matters in any forum. Hope our country realises this grave danger and put an effort collectively to address this serious nature of problem.
பொறுமை இழந்து மக்கள் புரட்சி ஏற்பட்டு இந்த 1% கொள்ளையர்களிடம் குவிந்து கிடக்கும் செல்வங்கள் எல்லாம் சூறையாடப்பட்டால் தான் இப்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கும் சேர்ந்து புத்தி வரும்.
இந்த நாடு மக்கள் புரட்சியை நோக்கி செலுத்தப்படுகிறது. அதற்கு இப்போது இருக்கின்ற ஆட்சியாளர்கள் முழு முதற் காரணமாக இருக்கப் போகின்றார்கள்.
ஆம்
/எதை எழுதினாலும், அரசாங்கத்திற்கு விரோதமாகவே எழுதுகிறாய் என்று குற்றச்சாட்டு வருகிறது.//
அரசாங்கம் செய்வதைத்தானே நீங்கள் எழுத முடியும் அப்ப அரசாங்கம் விரோதமாக செயலபடுகிறா என்று கேளுங்கள்
ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒவ்வொரு சகோதரர்களும் ஒவ்வொரு மாதிரி சம்பாதிப்பார்கள். அவர்களது வேலையைப் பொருத்து அவர்களுக்கு உடைகள் வாங்கித்தருவார்கள். ஆனால் உணவு, மற்ற விஷயங்கள் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். இதில் வேலையிலாமல் இருப்பவன், சாதாரணமான சம்பளம் வாங்குபவன் எல்லோரும் ஒரே மாதிரிதான் குடும்பத் தலைவரால் நடத்தப்படுவார்கள். நிறைய சம்பாதிப்பவன், அவனது வேலையின் பொருட்டு காரோ பைக்கோ வைத்திருக்கலாம், சில சமயங்கள் பிஸினெஸ் லஞ்ச் சாப்பிடலாம். ஆனால் கூட்டுக் குடும்பத்தில், தன் மனைவியோடு மட்டும், நல்ல சினிமா பார்க்கப்போவது என்பதெல்லாம் இருக்காது. அத்தகைய bonded கூட்டுக் குடும்பங்கள்தான் நெடு நாள் நிலைத்து நிற்கும். இதில் வெளியிலிருந்து வந்த மனைவிகளால் சிறிது பிரச்சனை வரலாம், ஆனால் for the bigger benefit இவற்றையெல்லாம் மறந்து உயரிய நோக்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். கோவில் கொடை என்று வந்து, ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்யவேண்டும் என்று ஊரில் ஒரு நிலை இருந்தால், பணமே இல்லாதவர்கள் உடல் சேவை செய்வதும், சாதாரணமானவர்கள் 10 ரூபாய் கொடுக்கும்போது பணக்காரர்கள் 500 ரூபாய் கொடுப்பதும் சகஜம்.
இது இந்தியாவிற்கும் பொருந்தும். வரி என்பது மேலிருந்து கீழாக அதே விகிதத்தில் இருக்கவேண்டும். மக்களுக்கும் ஏமாற்றுவது என்பது நோக்கமாக இருக்கக்கூடாது. வருட இறுதியில் ஷேர்கள் முதற்கொண்டு கணக்குக் காண்பிக்கப்பட்டு, அப்போதைய சொத்தாக கணிக்கப்பட்டு, அதற்கேற்ற வரி விதிக்கப்படவேண்டும். 10 கோடிக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு 50% வரியும், 5 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு 5% வரியும் விதிக்கவேண்டும். எல்லோரும் வரி செலுத்தவேண்டும் என்ற நிலைமை வரவேண்டும். அறக்கட்டளைகளையும் அறவே ஒழிக்கவேண்டும்.ஏனென்றால் அறக்கட்டளைகள் என்ற பெயரில் கருப்புப் பணம் பதுக்கப்படுகிறது. உதாரணம் வேண்டுமென்றால், கேடி சகோதரர்கள் (எல்லாரையும் உதாரணம் காட்டலாம், சோனியா முதற்கொண்டு). அவர்களுக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று கணக்குக் காட்டுவார்கள், ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் அவர்களிடம் உண்டு.
மற்றபடி ‘மக்கள் புரட்சி’ என்பதெல்லாம் அர்த்தமில்லாதது. வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. பயன் படுத்திக்கொள்ளாமல், சோம்பேறியாக டாஸ்மாக்கில் குடியிருப்பவர்களுக்கு நாட்டில் எதற்கு உரிமை? இன்றைக்கு பணக்காரர்கள் என்று காட்டப்படுபவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் பணமே இல்லாமல் இருந்தவர்கள்தான். ராஜகோபால், பன்னீர்தாஸ், வசந்த், சரவணா போன்ற அனைவருமே சாப்பிடக்கூடக் கஷ்டப்பட்டவர்கள்தான். இன்றைக்கு பெரிய பணக்காரர்களாக அவர்கள் இருப்பது அதிருஷ்டமல்ல. அவர்களின் கடின உழைப்பு. உழைக்கத் தயாராக இல்லாமல், இலவசம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம்.