…
…
ஜாதி, மத வெறி பிடித்த கூட்டமே…உணர்…
இது எங்கள் நாடு –
நாங்கள் அனைவரும் ஒன்றே …
அமைதியும், மத நல்லிணக்கமும் எங்கள் ரத்தத்தில் ஊறிய
பண்பாடு…. இதற்கு மாறாக, ஜாதி, மத வெறி பிடித்து ஆட்டம்
போடும் கூட்டத்திற்கு – மக்கள் பாடம் புகட்டுவார்கள்…!!!
…
…
————————————————————————————



உனக்கு தினமும் பாஜக…………………………. ………….. பாக்கலைன்னா தூக்கம் வராதே.
தலைப்போ இடுகையோ எந்த ஒரு கட்சியையும் குறிப்பிடவில்லை.
தேவா-உங்கள் பின்னூட்டம், உங்கள் தரத்தைத்தான் காண்பிக்கிறது.
ஜாதி மத வெறியன்கள் தான் ஆர்எஸ்எஸ்/ பாஜக-காரன்கள் என்பதை ஒத்துக்கொள்ள இவ்வளவு ஆங்காரம் வேண்டாம் சைத்தானே.
ஐயா, இந்த சைத்தானின் பின்னூட்டத்தையும் என்னோடதையும் நீக்கி விடுங்கள்.
கா.மை சார்… உங்கள் செலெக்ஷன் சரியா வரலை. அதுவும் தவிர, பாரதியின் ஒரிஜினல் பாடல் (இந்த இசை) சொல்ல வந்ததை அடித்துச் சொல்லுவதுபோல் இந்தப் பாடல் வரலை. சரியான தேர்வு, ‘வெற்றி எட்டுத் திக்கும் என்று கொட்டு முரசே’ என்ற பாடல். (உங்களுக்குத் தெரியும், இன்னும் இதனை நான் முழுமையாக நம்புகின்ற நிலைக்கு வரவில்லை, ஆனால் பாடல் சொல்லுவதுதான் உண்மை என்று என் மனதுக்குத் தெரியும்)
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.
தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:
யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.
புதியவன்,
உங்கள் கருத்தை ஏற்கிறேன்…
நான் அந்த பாடலை போட்டதன் முக்கிய காரணம் –
பாரதியாரையும், இளையராஜாவையும் சேர்த்து கொண்டாட விரும்பியது தான்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்