ஒரு பாஜக MP-யின் வேண்டுகோள்… மோடிஜி உடனடி நடவடிக்கை எடுப்பாரா……???


New Delhi: A View of Parliament house with Gandhiji statue in the forefront

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டன. பல வீண் செலவுகள் குறைக்கப்பட்டன…

மக்களுக்கு போய்ச்சேரும் மான்யங்கள் / உதவிகள் (subsidies) அவை அவசியம் தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே போய்ச்சேர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வந்த மாதாந்திர ரேஷன் பொருட்களில், அரிசி, சர்க்கரை போன்றவைக்கான மான்யங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் முதலில், LPG சிலிண்டர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மான்யங்களை வசதி படைத்தவர்கள் தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டுமென்று, வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர், ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உடையவர்களின் மான்யங்கள் தனிச்சட்டமே கொண்டு வரப்பட்டு ஒழிக்கப்பட்டன…

அதே வழியில் இன்னொரு அற்புதமான சீர்திருத்த நடவடிக்கைக்கான ஒரு யோசனை பாஜக எம்.பி. ஒருவராலேயே கூறப்பட்டுள்ளது. மோடிஜியின் அரசு இதற்கான மேல் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வார் என்று
நம்புவோமாக…..

——————

M.P. யின் யோசனை –
———————-

ஒவ்வொரு எம்.பி.க்கும், சம்பளம் மற்றும் அலவன்சுகள்(படிகள்) மூலமாக மத்திய அரசு மாதா மாதம் ரூ.2.70 லட்சத்துக்கும் மேல் செலவழிக்கிறது….

2009-ஆம் ஆண்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 319-ஆக இருந்தது.

தற்போது அந்த எண்ணிக்கை 449-ஆக அதிகரித்துள்ளது. இதில் 24 சதவீத எம்.பிக்கள் (அதாவது 132 எம்.பி.க்கள்) தங்களுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

லாபம் ஈட்டும் தனியார் துறையில் கூட இந்த மாதிரி 400 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை….

நாட்டு மக்களிடையே நாளுக்கு நாள் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. இதுபோல், மக்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவது, நாட்டின் ஜனநாயகத்துக்கு சீர்குலைவை ஏற்படுத்தும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், இந்த ஏற்றத்தாழ்வு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

எனவே, மக்களவையில் வசதிபடைத்த எம்.பி.க்கள் அனைவரும் எஞ்சிய பதவிக்காலத்துக்கு ஊதியம் வாங்குவதை கைவிட வேண்டும். இதற்கான இயக்கத்தை தாங்கள் தொடங்கி வைத்து ஊக்குவிக்க வேண்டும்….

—————————————–

நல்ல யோசனை…
மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறக்கூடிய இந்த யோசனையை நிறைவேற்ற மோடிஜி உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஒரு பாஜக MP-யின் வேண்டுகோள்… மோடிஜி உடனடி நடவடிக்கை எடுப்பாரா……???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மிக நல்ல யோசனை. நிச்சயம் அமல்படுத்தவேண்டும். செய்வார்களா என்று பொருத்திருந்து பார்க்கவேண்டும்.

    பொதுவா, ‘இரக்க உணர்வு’, ‘அடுத்தவங்களுக்கு உதவுவது’, ‘தியாகம்’ போன்றவை நடுத்தர மற்றும் அதற்குக் கீழே உள்ள மக்களுக்குத்தான் உண்டு. பணம் சேரச் சேர, பணத்தின் மீதான ஆசை அதிகமாகும். சின்ன அளவு பணத்தைக்கூட விட்டுக்கொடுக்காமல் சேர்க்கத் தோன்றும். அடுத்தவர்களுக்குக் கொடுக்க மனது வராது. ஏதாவது PURPOSE இல்லாமல் யாருக்கும் எதுவும் செய்யத் தோன்றாது.

    இந்த உலகில் நன்றாக வாழ, ஒரு கோடி ரூபாய்க்குமேல் சேமிப்பு தேவையா (அதுவே அவசியமில்லை). ஒருவனுக்கு 20 கோடி ரூபாய் இருந்தால் அவன் இறப்பதற்குள் எப்படி அதனைச் செலவழிக்கமுடியும்? 100 பவுன் நகைகளைப் போட்டுக்கொள்வதால் எப்படி மகிழ்ச்சி அடையமுடியும்? இந்த அளவுக்கே செலவோ அல்லது மகிழ்ச்சியைக் கொண்டுவரும் திறனோ இல்லாதபோது, எதற்காக இதற்குமேல் பணத்தைக் குவிக்கிறார்கள்? யாருக்காக? எதையும் கொண்டுபோக முடியாது. (உங்கள் தகவலுக்கு. எம்.பிக்கள் எல்லோருக்கும் அரசு வீடு கொடுக்கும். அப்படிக் கொடுக்கும் வீடுகளில், கார் காராஜ் முதற்கொண்டு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் அனேகமாக எல்லோரும் இருப்பார்கள். பாராளுமன்ற, ராஜ்ஜிய சபாக்களில் கேள்வி கேட்பதற்கு-இதற்கு பெரிய நிறுவனங்கள் கேள்விகளை அனுப்பி கேட்கச் சொல்லும், பணம் வாங்காதவர்கள் யார் யார்?)

    60 வயது தாண்டி ஓய்வு பெற்றுவிட்டால், எந்தப் பெரிய பதவியை வகித்தவரும், சாதாரண ஊழியரும் ஒன்றுதான். நினைத்த உணவை உண்ணமுடியாதவனும் (உடல் நலத்தினால்), மோர் சாதமோ, கஞ்சியோ சாப்பிடும் நிலையில் உள்ளவனும் ஒன்றுதான். வீல் சேரிலோ அல்லது ஐசியுவிலோ வாழ்க்கையைக் கழிப்பவர்களும், அவர்கள் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்திருந்தாலும், அவர்களும் சேமிப்பே இல்லாதவனும் ஒன்றுதான்.

    கடந்த 50 வருடத்தில் எத்தனை மந்திரிகளை நமக்கு அவர்களுடைய நல்ல மனதுக்காக, நல்ல செயலுக்காக ஞாபகத்தில் வைத்திருக்கிறோம்? ஓரிருவரே தேறாது. மற்றவர்களை நாம் ஞாபகத்தில் வைத்திருந்தால், அது அவர்கள் அடித்த கொள்ளைக்காகத்தான் இருக்கும்.

  2. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இடுகைக்குச் சம்பந்தமில்லாத விஷயம் கா.மை. சார். இந்த ஹெச் ராஜா ஏன் தேவையில்லாத கருத்துக்களை வெளியிடுகிறார் (இப்போ, இளையராஜா ஐயர் என்று). சமூகத்தில் இருக்கும் பிரச்சனை போதாதா, ஏன் புதிது புதிதாக பிரச்சனைகளை உண்டாக்கவேண்டும்? மக்களை சாதி, சமயத்தால் பிளவுபடுத்தினால், தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகாதா, மக்கள் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படாதா? இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும்போது, நாம் எப்படி ஓவைசியை மட்டும் குறை சொல்லமுடியும்?

    இத்தனைக்கும் இவர் படித்தவர். படிப்பு LEVEL HEADEDஆக ஒருவரை மாற்றாவிட்டால், அந்தப் படிப்பால் என்ன பயன்? ‘கற்றதனால் ஆன பயன் என்’கொல்?’

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தமிழன்,

      ஒவைசி’க்கும் ஹெச்.ராஜாவுக்கும் இடையே – எந்தவித வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை…
      இரண்டு பேருமே மக்களிடையே மதவெறியை தூண்டி விட்டு, தங்களை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள்.
      இரண்டு பேருமே வெறுக்கத்தக்கவர்கள்… ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

      ஆனால், இந்த particular விஷயத்தில், மூட்டி விட்டவர் பாரதிராஜா..
      அண்மைக்காலங்களில் பாரதிராஜாவும் முதிர்ச்சியற்று பேசி வருகிறார்.
      அவர் தான் “இளையராஜா அய்யராக விரும்புகிறார்”… என்று சொல்லி இருக்கிறார்.
      ஹெச்.ராஜா அதற்கு எதிர்வினையாற்றி இருக்கிறார்…

      இந்த முதிர்ச்சியற்ற முதியவர்களால், அநாவசியமாக இளையராஜா அவர்களின்
      தலை இங்கே உருளுகிறது….

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. NS Raman's avatar NS Raman சொல்கிறார்:

    Tamil nadu ex MP Sarath Kumar already given up pension and set an example.
    .

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    “Dalit outreach with Ilaiyaraaja’s Padma” – The New Indian Express.

    தி நியுவ் இந்தியன் எக்ஸ்பிரசின் கீழ்த்தரமான புத்தியை யாராவது இங்கு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அது இன்று மன்னிப்பு கேட்டாலும் அதன் கயமை வெளிப்பட்டமைக்கு ஒரு வகையில் நல்லதே.

    மேஸ்ட்ரோவை கொண்டாடும் காமை சாரும் இந்த‌ கயமையை கண்டுகொள்ளாதது வியப்பளிக்கின்றது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அறிவழகு,

      அது யாராக இருந்தாலும் சரி, ஜாதியை வைத்து இளையராஜா அவர்களை அடையாளப்படுத்துவது – தெரியாமல் செய்தால் முட்டாள்தனம் -வேண்டுமென்றே செய்தால் அயோக்கியத்தனம்…. அதற்கு மீண்டும் மீண்டும் விளம்பரம் கொடுப்பது அசட்டுத்தனம் – புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.