…
…
இந்தக்கால இளைஞர்கள் காணவென்றே சில நகைச்சுவை சித்திரங்களை கீழே பதிப்பிக்கிறேன்.
இன்றைய வார, மாத இதழ்களை, முக்கியமாக அவற்றின் அட்டைப்படங்களை பார்க்கிறோம்…. திரைப்பட நட்சத்திரங்கள் அட்டையில் இல்லாத இதழ்கள் உண்டா…? ஆனால், அபூர்வமாக (பிழைக்கத் தெரியாத..!!) ஒன்றிரண்டு இப்போதும் இருக்கின்றன தான்….!!
ஒரு காலத்தில், வார, மாத இதழ்கள் எல்லாம் – நகைச்சுவை, தொடர்கதை, சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன. முக்கியமாக சரித்திரத் தொடர்கதைகளுக்கு…
இப்போது முற்றிலும் நேர்மாறு. சினிமா, அரசியல், கவர்ச்சிகரமான புகைப்படங்கள் – இவையே பெரும்பாலும் இதழ்களை ஆக்கிரமித்துள்ளன…. இந்த பத்திரிகைகளையும் குறை சொல்லி பயனில்லை…. மக்கள் விரும்புவதைத்தான், தாங்கள் கொடுப்பதாக இன்றைய பத்திரிகைகள் சொல்கின்றன…!!!
ரசனையை வளர்த்துக் கொள்வதோ, மாற்றிக் கொள்வதோ –
யார் கையில் இருக்கிறது…? அது யாருடைய பொறுப்பு…?
காலம் மாறும்போது – ரசனைகளும் மாறும்… நான் ஏற்கிறேன்…
ஆனால், ” தரம் ” ….?
“தரம்” நாளுக்கு நாள் உயர வேண்டுமே தவிர, குறையக்கூடாது என்பது
மட்டுமே என் ஆசை, விருப்பம்…!!!
கீழே, எனக்கு கிடைத்த – அறுபதுகளில் வெளியான ஆனந்த விகடன் வார இதழ்கள் சிலவற்றின் அட்டைப்படங்கள் – அந்த காலத்தை நினைவுபடுத்திக்கொள்ள….!!!
…

…

———————————————————————————



ஐயா
அதே போல 80-களில் விகடனில் 3D படங்களை வெளியிட்டு அவற்றை எப்படி பார்ப்பது என்று டிப்ஸ்-ம் கொடுத்து பார்த்து மகிழ்ந்த அனுபவும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்!