ரஜினி கட்சி – இயக்குநர் அமீரின் நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி ….




ரஜினி அவர்கள் புதிய கட்சியை துவங்குவது பற்றி, அதுவும் ஆன்மிக அரசியல் சார்ந்த கட்சி துவங்குவது பற்றி பலருக்கும் பலவித சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றில் சில – நியாயமான சந்தேகங்கள்; சில வெறும் காழ்ப்புணர்ச்சி, போட்டி மனப்பான்மையால் கிளப்பப்படும் சந்தேகங்கள்….

நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே – இயக்குநர் அமீர் அவர்களுடன் நிகழ்த்திய “கேள்விக்கென்ன பதில்” பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாயின.

இந்த பேட்டி, ரஜினி புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்ததாக இருந்தது. இயக்குநர் அமீர் – ரஜினி, தனியாக கட்சியை ஆரம்பிப்பதை தான் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்;

அதற்கான காரணங்களை ரங்கராஜ் பாண்டே துருவித் துருவி கேட்க, பல சுவாரஸ்யமான பதில்கள் / விளக்கங்கள் வெளிவந்தன.

இந்த இருவருக்குமான, கேள்வி-பதில் நிகழ்ச்சியினூடேயே அமீர் கிளப்பிய பலவித சந்தேகங்களுக்கு அவரிடமிருந்தே விளக்கங்களும் வந்து விட்டன…. ( ரங்கராஜ் பாண்டேயின் சாமர்த்தியம்… 🙂 🙂 🙂 )

இறுதியாக, இரண்டே இரண்டு முக்கியமான கேள்விகள் / சந்தேகங்கள் மட்டும் விளக்கம் கிடைக்கப்பெறாமலே பேட்டி முடிவடைந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்….

அவை –

1) ரஜினி அவர்களின் கட்சி – அவரது வயது, ஆரோக்கியம் காரணமாக ஒரு கட்டத்தில் – அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்குள் போய் விடுமோ என்கிற அச்சம்….

2) ரஜினி கட்சியை ஆரம்பித்து, மக்களிடம் தனக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வெற்றியும் பெற்று விட்ட பின்னர் – அதை
பாஜக வுடன் இணைத்து விட்டால் என்ன செய்வது ..? – என்கிற அச்சம்…!

இந்த இரண்டு அச்சங்களும் நியாயமான அச்சங்களே….

ஆனால் இதற்கு திரு.ரஜினிகாந்த அவர்களைத்தவிர வேறு யாரும் விளக்கம் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் அது ஏற்புடையதாக இருக்காது.

– இத்தகைய பேட்டிகள் எல்லாம் நிச்சயம் ரஜினியின் கவனத்திற்கு போகும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ரஜினிகாந்த் அவர்கள் கூடிய விரைவில் இத்தகைய சந்தேகங்களை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாகவே – மக்களும், ஊடகங்களும் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு அவர் விரைவாக விளக்கம் தருவது அவருடைய முயற்சிகளுக்கு பலமூட்டுவதாக அமையும். அவரது டீமில், அவருக்கு துணையாக, இருப்பவர்கள் இந்த விஷயங்களை அவரது பார்வைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.

தந்தி தொலைக்காட்சியில் பேட்டியை காண இயலாதவர்களுக்கு
அந்த பேட்டியின் லிங்க் கீழே –


அமீர் – ரங்கராஜ் பாண்டே பேட்டி

—————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ரஜினி கட்சி – இயக்குநர் அமீரின் நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி ….

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு – வழக்கமான தொழில்நுட்ப குழப்பம்…!!!

    இதற்கடுத்து மீண்டும் ஒரு முறை ” ஆன்மிக அரசியல் – நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி …!!! ” என்கிற தலைப்பில் இதே இடுகை பதிவாகி இருக்கிறது.
    பின்னூட்டமிடும் நண்பர்கள் அங்கேயே எழுதுமாறு வேண்டுகிறேன்.

    -அன்புடன்,
    காவிரிமைந்தன்

  2. BVS's avatar BVS சொல்கிறார்:

    பொதுமக்கள் யாரும் ரஜினிகாந்தின் வருகையை எதிர்க்கவில்லை.
    அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தான், தங்கள் வியாபாரம் பறிபோய் விடுமே
    என்று பயந்து, கண்டபடி திட்டுகிறார்கள்.
    இதுவரை ரஜினி எல்லாராலும் விரும்பப்படுபவராகத்தான் இருந்தாஆர்.
    இப்போது அரசியலில் இறங்குகிறேன் என்று சொன்னவுடன் இத்தனை எதிர்ப்பு
    வருவது ஏன் ? புரிந்துகொள்ளக்கூடியது தான். அவர் வருவதால் யாருக்கு பாதிப்பு வருமோ அவர்கள் தான் எதிர்க்கிறார்கள்.
    ரஜினி கூட்டணி வைத்துக்கொள்கிறேன் என்று சொல்லட்டும். உடனே சின்ன கட்சிகளின் நிலை எல்லாம் மாறிவிடும். சின்ன சின்ன கட்சிகள் எல்லாமே அவரை ஆதரிக்க ஆரம்பித்து விடும்.

  3. R.Srinivasan's avatar R.Srinivasan சொல்கிறார்:

    The announcement of Mr.Rajnikanth to enter in to politics in Tamilnadu, is being welcome by all. The BJP, which is trying very hard to somehow show its small presence in TN politics, is the one which is openly thrilled by the entry of Rajini’s polittics. Mr.Rajini also commented that he wants to have a spritual politics and later on given explanation to that comment, after the people openly raised questions on his comment. But BJP welcomed the statement. So it is Mr.Rajnikanth’s duty to give proper explanation about his comments. He also must come out with blue print about his organization, policies and plan to go about to start his party.

  4. Karna's avatar Karna சொல்கிறார்:

    Don’t push your interest in other Tamils.
    , most of the Tamil not like him. Please encourage public to choose educated people.in politics.

  5. BVS's avatar BVS சொல்கிறார்:

    Karna

    Don’t push your interest in other Tamils.
    Most of the Tamils like Rajni.
    Please encourage HONEST and STRAIGHT FORWARD people in Politics.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.