…
…

…
ரஜினி அவர்கள் புதிய கட்சியை துவங்குவது பற்றி, அதுவும் ஆன்மிக அரசியல் சார்ந்த கட்சி துவங்குவது பற்றி பலருக்கும் பலவித சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றில் சில – நியாயமான சந்தேகங்கள்; சில வெறும் காழ்ப்புணர்ச்சி, போட்டி மனப்பான்மையால் கிளப்பப்படும் சந்தேகங்கள்….
நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே – இயக்குநர் அமீர் அவர்களுடன் நிகழ்த்திய “கேள்விக்கென்ன பதில்” பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாயின.
இந்த பேட்டி, ரஜினி புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்ததாக இருந்தது. இயக்குநர் அமீர் – ரஜினி, தனியாக கட்சியை ஆரம்பிப்பதை தான் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்;
அதற்கான காரணங்களை ரங்கராஜ் பாண்டே துருவித் துருவி கேட்க, பல சுவாரஸ்யமான பதில்கள் / விளக்கங்கள் வெளிவந்தன.
இந்த இருவருக்குமான, கேள்வி-பதில் நிகழ்ச்சியினூடேயே அமீர் கிளப்பிய பலவித சந்தேகங்களுக்கு அவரிடமிருந்தே விளக்கங்களும் வந்து விட்டன…. ( ரங்கராஜ் பாண்டேயின் சாமர்த்தியம்… 🙂 🙂 🙂 )
இறுதியாக, இரண்டே இரண்டு முக்கியமான கேள்விகள் / சந்தேகங்கள் மட்டும் விளக்கம் கிடைக்கப்பெறாமலே பேட்டி முடிவடைந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்….
அவை –
1) ரஜினி அவர்களின் கட்சி – அவரது வயது, ஆரோக்கியம் காரணமாக
ஒரு கட்டத்தில் – அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்குள் போய் விடுமோ என்கிற அச்சம்….
2) ரஜினி கட்சியை ஆரம்பித்து, மக்களிடம் தனக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வெற்றியும் பெற்று விட்ட பின்னர் – அதை பாஜக வுடன் இணைத்து விட்டால் என்ன செய்வது ..? – என்கிற அச்சம்…!
இந்த இரண்டு அச்சங்களும் நியாயமான அச்சங்களே….
ஆனால் இதற்கு திரு.ரஜினிகாந்த அவர்களைத்தவிர வேறு யாரும் விளக்கம் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் அது ஏற்புடையதாக இருக்காது.
– இத்தகைய பேட்டிகள் எல்லாம் நிச்சயம் ரஜினியின் கவனத்திற்கு போகும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ரஜினிகாந்த் அவர்கள் கூடிய விரைவில் இத்தகைய சந்தேகங்களை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே – மக்களும், ஊடகங்களும் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு அவர் விரைவாக விளக்கம் தருவது அவருடைய முயற்சிகளுக்கு பலமூட்டுவதாக அமையும். அவரது டீமில், அவருக்கு துணையாக, இருப்பவர்கள் இந்த விஷயங்களை அவரது பார்வைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.
தந்தி தொலைக்காட்சியில் பேட்டியை காண இயலாதவர்களுக்கு
அந்த பேட்டியின் லிங்க் கீழே –
…
அமீர் –
ரங்கராஜ் பாண்டே பேட்டி
…
—————————————————————————–



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…