……………………………………..

…………………………………….
பாஜகவிலிருந்து விலகி, புதிய அரசியல் கட்சியைத் துவங்கும் அண்ணாமலையை பற்றி, நல்லதும்-கெட்டதுமாக பல விமரிசனங்கள் வருகின்றன… ஓரு காலத்தில் துக்ளக்’கில் எழுதிவந்த சாவித்திரி கண்ணன், தற்போது இயக்கி வரும் “அறம்” இணைய இதழில் எழுதி இருக்கும் ஒரு கடுமையான விமரிசனத்தைப் பார்த்தேன்…. சில விஷயங்கள் நிஜம் தான்….. வேறு சில – அவரது கொள்கை காரணமான கோணம் மட்டுமே….. நடுநிலையான பார்வையல்ல ….
வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது….கீழே –
……………………………………………………………………………………………………………………….
புதிய பாதையாம்! புதிய இயக்கமாம்…!
பிரமாதமாகப் பேசுகிறார் அண்ணாமலை…!
அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இத்தனை லட்சம் பேர் சேர்ந்தனர், அத்தனை லட்சமாக கூடியுள்ளது.. என புளகாங்கிதம் அடைகின்றனர்.
அரசியல் புரிதலற்ற சாதாரண சராசரி அப்பாவி மனிதர்களிடம் அண்ணாமலையின் பேச்சு மிக வலுவான ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
’’அடடா! ஊழல்வாதிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற இதோ ஒரு ரட்சகர் கிடைத்துவிட்டார்’’ எனப் பலர் புளகாங்கிதம் அடைகின்றனர்…!
அண்ணாமலை பேசுவதை அனைத்து ஊடகங்களும் லைவ்வாக டெலிகாஸ்ட் பண்ணினார்கள். அவர் தற்போது பாஜக தலைவரல்ல. எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் தான். ஆனால், அவருக்கு அனைத்து ஊடகங்களும் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன..என்றால், இதன் பின்னணியில் நடந்திருக்கும் அதிகார லாபி அவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதே உண்மை.
அண்ணாமலை மக்கள் இயக்கம் கட்டுகிறாராம்!
“We The Leaders” இயக்கமாம்!
ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் பயிற்சி மையமாம்!
அவரை வளர்த்த ஆர்.எஸ்.எஸ்சிலும், பாஜகவிலும் அவரால் உதாரணம் காட்ட ஒருவரும் இல்லை என்பதால், நல்லகண்ணு, அப்துல்கலாம் ஆகியோரின் நற்பெயர்களை பயன்படுத்துகிறார். அக்மார்க் பிராடான அண்ணாமலை அந்த நல்லோர்களின் பெயரை உச்சரிக்கவும் தகுதியற்றவர். இன்றைக்கு அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்கள் பெயரை துஷ்பிரயோகம் செய்கிறார்.
கடந்த ஆறாண்டுகளாக அண்ணாமலையின் நடவடிக்கைகளை பார்க்கின்ற எவரும் மிக இயல்பான ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த மனிதர் பேச்சுக்கும், நடத்தைக்கும் துளியும் சம்பந்தமில்லாதவர் என்பது!
’உன் நண்பர்கள் யார் எனச் சொல் உனைச் சொல்கிறேன்’ என்றொரு அறிஞர் கூறியுள்ளார். அண்ணாமலையின் நண்பர் எனச் சொல்லதக்க ஒரே ஒரு யோக்கியவானைக் கூட நம்மால் அடையாளம் காண முடியாத அளவுக்கு தன்னைச் சுற்றிலும் மிகப் பெரிய பிராடுகளை வைத்துக் கொண்டு வலம் வந்தவர் தான் அண்ணாமலை.
பொய்யும், பித்தலாட்டமும் என்றே வாழும் அமர்பிரசாத் ரெட்டி,
மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நடத்திய வகையில் 5,000 அப்பாவி டெபாசிட்தாரர்களை ஏமாற்றி 571 கோடிகளை சுருட்டி பலரது தற்கொலைகளுக்கு காரணமான பிராடு தேவநாதன் யாதவ்,
சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்க பல கோடிப் பணத்தை வசூலித்து ஆட்டையப் போட்டு கைதான கார்திக் கோபிநாத்,
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் சம்பந்தப்பட்ட ஹரிஸ், ஆர்.கே.சுரேஷ்..போன்றவர்கள் தான் அண்ணாமலையின் சகாக்களாக வலம் வந்தனர்.
கிரிமினல் செயல்களுக்கு பேர் போன ரவுடிகளை பாஜகவில் சேர்த்து அவர்கள் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகளை தடுத்தவர் தான் அண்ணாமலை.
அண்ணாமலையின் நண்பர்களான பிராடுகளைப் பற்றி பாஜகவின் ஆதரவாளரான யூடியூப்பர் மாரிதாஸே ஆதாரங்களுடன் பல காணொளிகளை வெளியிட்டு உள்ளார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே…!
பாஜகவில் உள்ள கல்யாணராமன் தொடங்கி பல பேர் அண்ணாமலையின் உண்மையான குணாம்சத்தை தோலுரித்து காட்டியுள்ளனர்.
அண்ணாமலையின் ஒரே ஒரு சிறப்பம்சம் என்னெவென்றால், பாஜகவில் உள்ள மற்ற தலைவர்களைப் போல பெண் சபலம் இவருக்கு இல்லை என்பதே.
அண்ணாமலையைப் பொறுத்த வரை அரசியல் என்பது ஒரு ஏமாற்றும் கலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதில் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்.
மைக்கேல்பட்டி மாணவியின் மரணத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடித்த அண்ணாமலையை நாம் மறக்கமுடியுமா?
பாதயாத்திரை நடத்துகிறேன் என சொல்லி ஒரு பெரிய வசூல் வேட்டை நடத்தியதும், எந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாமல் அந்த பாத யாத்திரையை நடத்தி விளம்பரம் பெற்றதும், கட்சிக்காரர்களுடனான அவரது நட்பும் அவர் பாஜகவை வளர்க்க கட்சிக்கு வரவில்லை, தன்னை வளர்த்துக் கொள்ளவே பாஜகவை பயன்படுத்திக் கொண்டார் என்பதைக் காட்டின.
தன் இமேஜை பில்டப் செய்யவும், தன் எதிரிகளை துவம்சம் செய்யவும் பெரிய அளவு இணையக் கூலிப்படையை உருவாக்கி வார் ரூம் நடத்தியவர் தான் அண்ணாமலை.
அண்ணாமலை திமுக அமைச்சர் ஒருவரது பினாமியுடன் சேர்ந்து Zen Path Ventures தொடங்கியதும், தன்னுடைய நண்பர்களை பினாமியாக வைத்து ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் போன்ற பத்துக்கு மேற்பட்ட புதிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கியதும் பொருளாதார ரீதியில் தன்னை மிக வலுவாக்கிக் கொண்டு தனி அரசியல் கட்சிக்கு தயாராவதற்குத் தான்.
திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலபடுத்தப் போவதாக திமுக பைல்ஸ் என்றது, அதன் மூலம் ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பெரும் வசூல் வேட்டை நடத்திய விவகாரத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள். ’’அவர் ஒன்றும் ஊழல் செய்யவில்லையே. நல்லவர்களையா ஏமாற்றி பணம் சம்பாதித்தார். ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை வாங்கியது திறமை சம்பந்தப்பட்டதே அன்றி குற்றம் சம்பந்தப்பட்டதல்ல’’ என்ற விளக்கமும் தந்தனர்.
தான் திரட்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் ஊழல் செய்த அமைச்சர்களை சட்டப்படி கைது செய்யும் வகையில் மத்திய ஆட்சியாளர்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தண்டனை பெற்றுத் தந்திருந்தால் தான் அண்ணாமலை யோக்கியன் என்பதை ஏற்கலாம். ஊழலில் பங்கு பெற்று தன்னை வளப்படுத்திக் கொண்டவர் எப்படி நேர்மையான அரசியலை பேச முடியும்?
குறுகிய காலத்தில் குவித்த செல்வத்தை அண்ணாமலை இலண்டன், அமெரிக்கா என்று போய் முதலீடு செய்ததையும் அந்தக் கட்சிகாரர்களே மேலிடத்திற்கு போட்டுத் தந்து மாநிலத் தலைவர் பதவியைப் பறித்தனர்.
மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் தன் அப்பாவின் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் வேலைகளில் ஒதுங்கியதோடில்லாமல் உள்ளடி வேலைகள் செய்து பாஜகவின் மோசமான தோல்விக்கும் காரணமானவர் தான் அண்ணாமலை.
வளர்த்த இயக்கத்தையே வச்சு செய்த அண்ணாமலையை அவர் நிழல் கூட யோக்கியன் என நம்பாது. அதுவும் குறிப்பாக தமிழிசை செளந்திரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரை வீழ்த்திக் காட்டுவோம் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.
தற்போதுள்ள தமிழக அரசியல்வாதிகளிலேயே எவரையும் மிக ஆபத்தானவர் அண்ணாமலை.
இனி மேல் அண்ணாமலை தமிழ், தமிழர் நலன், மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டங்கள்.. என அரசியல் களத்தை அதகளப்படுத்துவார்.
அனைத்து ஊடகங்களும் அவரது ஒவ்வொரு நகர்வையும் உச்சிமோர்ந்து விளம்பரப்படுத்துவார்கள். தவெக விஜய்யின் அரசியலை எதிர்கொள்ள மாநில கட்சிகளை அண்ணாமலை தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும் பாஜக ஒதுங்கிக் கொண்டு வழிவிடலாம்.
‘தமிழர்கள் அவ்வளவு ஒன்னும் இளிச்சவாயர்களல்ல’ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. ( சாவித்திரி கண்ணன் -“அறம்” இணைய தளத்தின் ஆசிரியர்…)
…………………………………………………………………………………………………………………………………………..
இப்போது வந்தது – பின் சேர்க்கை –
…………………
அண்ணாமலை’க்கு – பாஜக’வின் ஆசியும், ஆசிர்வாதமும் …..!!!
……………………………………………………………………………………………………………………………………………………



உள்ளுணர்வுதான் நம்மை வழிநடத்தும். அறிவியல்பூர்வமான எண்ணம் பிறகுதான் வரும். வீட்டிலோ அல்லது தியேட்டரிலோ ஹாரர் படம் பார்க்கும்போது நாம் ஏன் பயப்படுகிறோம்? அங்கு என்ன நடந்தாலும் நமக்கும்…