……………………………………..

……………………………………..
ஒருமுறை சார்லஸ் டார்வினுக்கும் அவர் நண்பருக்கும் ஒரு பெரிய விவாதம்……
உள்ளுணர்வா அறிவியலா??? என்பது அந்த விவாதம்…..
அறிவியல் தான் என்றார் டார்வின் – உள்ளுணர்வு தான் என்றார் நண்பர்…..
இவ்விவாதம் நடைபெற்றது ஒரு மிருகக்காட்சி சாலையில்……
…………..
அவர்கள் நடந்துக்கொண்டே தீவிரமாக விவாதிக்கொண்டே வருகையில்
கண்ணாடியால் ஆன ஒரு பாம்புக் கூண்டு வந்தது……அக்கூண்டில் கடுமையான விஷம் கொண்ட பாம்பு இருந்தது……
அக்கண்ணாடியில் தன் கன்னத்தை வைக்கச் சொன்னார் டார்வினின் நண்பர்……
டார்வின் கன்னத்தை வைத்தார்…..
உடனே அந்த பாம்பு ஓடிவந்து டார்வினின் கன்னத்தில் கொத்தியது…..
டார்வின் விருட்டென தன்முகத்தை எடுத்துக்கொண்டார்……
நண்பர் சிரித்தார்……
………………………….
“டார்வின் அவர்களே இந்த கனமானக் கண்ணாடியைத் தாண்டி பாம்பு உங்களை கொத்த முடியாது என்பது அறிவியல் உண்மை…..அது உங்களுக்கும் தெரியும்…..ஆனாலும் முகத்தை சட்டென எடுத்தீர்களே ஏன்???
உள்ளுணர்வு தானே காரணம்???”
என்றார் நண்பர்……
டார்வினும் ஆமோதிக்கும் வகையில் சிரித்தார்…….
…………………………………………….
எப்போதுமே உள்ளுணர்வு தனக்கான எளிமையான பாதையைத் தான் தேர்ந்தெடுக்கும்……
அதாவது கண்ணாடிக் கடினமானது. அது விஷப்பாம்பின் கடியை எதிர்க்கும் வல்லமையுடையது என்பதைவிட –
முகத்தை கண்ணாடியை விட்டு எடுத்து விட்டால், எளிதில் தப்பிக்கலாம் என்பது தான் உள்ளுணர்வு சொல்லும் பாடம்……
இதனாலேயே அறிவியலை அவ்வளவு எளிதில் உள்ளே அனுமதிக்காது உள்ளுணர்வு……
அதாவது உங்கள் வீட்டின் அருகே ஒரு சுபநிகழ்ச்சி….80டெசிபலில் பாட்டுப் போடுகிறார்கள்……நீங்கள் அதனைக் கேட்டுப் பழகுகிறீர்கள்……இரவு முழுக்க அந்த டெசிபலில் பாடல் ஓடினாலும் உங்கள் உள்ளுணர்வு இது ஆபத்தான ஒலியல்ல என்பதை உணர ஆரம்பித்து உங்களை உறங்க வைக்கும்…..நீங்களும் அந்த ஒலியின் சத்தத்திலும் உறங்கிவிடுவீர்கள்……
ஆனால் நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது அதே டெசிபலில் –
தூக்கத்தின் இடையில் பாட்டுப்போட்டால் திடீரென எழுந்துக்கொள்வீர்கள்…… அறிவியல்படி அதே டெசிபல் தான்…..ஆனால் திடீரென வருவதால் உங்கள் உள்ளுணர்வு உங்களை எச்சரிக்கிறது……
………………………………
இந்த எச்சரிக்கை உணர்வு தான் அக்காலங்களில் வேட்டை விலங்குகளில் இருந்து
நம்மைப் பாதுகாத்தது……
பாதுகாத்தும் வருகிறது…….
அதாவது ஒரு நான்கு பேர் பதற்றமாக ஓடிவருகிறார்கள்……
என்ன என்று நீங்கள் கேட்கும் போது
“புலி வருகிறது ஓடு”
என்றுவிட்டு ஓடுகிறார்கள்……
உடனே நீங்களும் ஓடுவீர்கள்……
வருவது ஆண் புலியா பெண் புலியா அல்லது குட்டியா ….??? நம்மால் சமாளிக்க முடியுமா???
நம் பகுதியில் புலி வாழ்கிறதா … ???
என்று அறிவியல்பூர்வமாக கணக்குப்போட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள்…….
ஏனெனில் அவர்களுடன் ஓடினால் பாதுகாப்பு என்று உள்ளுணர்வு நமக்கு சொல்லும்…….
இது என்னவகையான நம்பிக்கை….???
மூடநம்பிக்கையா … ???
…………………………….
இல்லை – இது தான் உள்ளுணர்வின் ஆதிக்கம்…….
ஆனால் பிறகு உள்ளுணர்வு அறிவியலுடன் தொடர்புக்கொண்டு நடத்தையை சீர்செய்ய ஆரம்பிக்கும்……..
இந்த உள்ளுணர்வீன் அதீத ஆதிக்கம் தான் –
108 தடவை அங்கபிரதட்சனம் செய்தால் பாஸாகிவிடலாம் என்பது போன்ற நம்பிக்கைகள்……..
ஏனென்றால் உள்ளுணர்வு எப்போதும் எளிய பாதையைத் தான் தீர்மானிக்கும்…….
ஆனால் அதன்பிறகும் – அறிவியலை ஏற்காமல் இருப்பதன் பெயர் தான் மூடநம்நம்பிக்கை ஆகும்……
அந்த வகையில் பல விஞ்ஞானிகள் கூட மூடநம்பிக்கையாளர்கள் தான்…..!!! (உதவி – வலைத்தளம்…. )
……………………………………………………………………………………………………………………………………



அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம்.…