…………………………………….

……………………………………….
துக்ளக் ஆசிரியர் சோ, தனது கடைசி வருட கூட்டங்களில்,
அதாவது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு
பேசிய கூட்டங்களில் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசுவது வழக்கம்.
பாஜக முன்வைத்த ” காங்கிரஸ் முக்த் பாரத்”
( காங்கிரஸ் இல்லாத பாரதம் ) என்கிற கோஷத்தை
ஆசிரியர் சோ அவர்கள் ஏற்கவில்லை…
” மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட,
காங்கிரஸ் கட்சி வலுவிழந்து போவதை நான் விரும்பவில்லை.
அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.
இரண்டு தேசிய கட்சிகள், பாஜகவும், காங்கிரஸும்
ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக எப்போதும் வலுவாக
இருக்க வேண்டும்… மாநில கட்சிகள், மத்திய ஆட்சியை
கைப்பற்றுவது நிச்சயமாக விரும்பத்தக்கதல்ல…”
இதே கருத்து தான் எனக்கும்….
காங்கிரஸ் இப்போதைக்கு மத்திய்ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு
பலம் பெறும் என்று நான் நினைக்கவில்லை… ஆனாலும், த்ரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக – போன்ற கட்சிகளின் நிலை,
காங்கிரஸ் கட்சி, முனைந்து கடுமையாக உழைத்து பலம் பெற்று,
அகில இந்திய அளவில், பாஜவுக்கு மாற்று காங்கிரசாகத்தான் இருக்க முடியும் என்கிற கருத்தை உறுதிப்படுத்த வேண்டும்…..
……………………………………………………………………………………………………………………………………………..



காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும் என்று எண்ணி பல தசாப்தங்களாக இந்துக்களைவிட சிறுபான்மையினருக்கே பலவேறு விதங்களில் முன்னுரிமை கொடுத்தனர் (தற்போது திமுகவும் அதனையே செய்கிறது சனாதன ஒழிப்பு என்று). இந்துக்கள் எப்போதுமே மதம் சார்ந்து வாக்களித்தது கிடையாது. மதத்தை வைத்து வாக்களிப்பது எப்போதுமே முஸ்லீம்களும் கிறித்துவர்களும்தான்.
அதனால்தான் பாஜக மிகச் சுலபமாக இந்துக்களுக்கு இதனைக் காட்டிக்கொடுக்க முடிந்தது, அதன் பலத்தைத் தொடர்ந்து அதிகரிக்க முடிந்தது.
மக்கள் என்ன நடக்கிறது என்பதை உணருகிறார்கள். அதனால்தான் மேற்கு வங்காளத்திலும் பாஜக பெரும் வளர்ச்சி பெற முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும், யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்வதற்கே 70 சதம் மக்கள் பயந்தார்கள். அந்த அளவு முஸ்லீம்களுக்காக மம்தா உழைத்தார்.
தமிழகத்திலும் காங்கிரசின் நிலைப்பாடு, யாரை எம்பி எம்.எல்.ஏக்களா தேர்ந்தெடுக்க வைக்கிறாங்க பாருங்க. அவங்க எப்போதுமே கிறித்துவ மற்றும் முஸ்லீம் சார்பாகத்தான் முடிவெடுப்பாங்க. ஆனால் தேர்தலின்போது மாத்திரம் நெற்றியில் பெரிய குங்குமத் தீற்றலோடு இந்துக் கோயில்களுக்குச் செல்வாங்க (திமுக பாணி).
பாஜக மாத்திரம் பெரிய கட்சியாக இருப்பது நல்லதல்ல. காரணம் தலைவர்கள் நிரந்தரமல்ல. அதற்கு மாற்றாக ஒரு நல்ல தேசியக் கட்சி இருக்கவேண்டும். அதனால் காங்கிரஸும் நல்ல தனித்துவ தலைமையைப் பெற்று பெரிய கட்சியாக வளரணும். அந்த எண்ணம் உண்மையிலேயே காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கும் என்றால் ராகுல் மற்றும் பிரியங்கா வத்ரா காங்கிரஸிலிருந்து விலகி, செல்வப்பெருந்தகை, கார்கே போன்ற தலைவர்களை ஒழித்துக்கட்டி, செல்வாக்குள்ள இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும். சசிதரூர் நல்ல தேர்வாக இருந்திருப்பார். இப்போது வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.