கடலுக்கடியில் மோடிஜி பூஜை செய்த இடத்தில் ‘கிருஷ்ணர் ஆண்ட துவாரகை’ இருந்ததா….?

…………………………………

………………………………….

……………………………………

அண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிஜி, ஆன்மிக நகரமான
துவாரகை அருகே கடலுக்கடியில் மூழ்கி வழிபாடு நடத்தினார். நீருக்கு
அடியில் மயிலிறகை வைத்து அவர் பூஜை செய்தார்.

இது தொடர்பான வீடியோவை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்த
மோடிஜி, நீரில் மூழ்கிய துவாரகை நகரில் பிரார்த்தனை செய்தது ஒரு
புனிதமான அனுபவம் என குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய துவாரகை நகரத்தை இதற்கு முன் அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் தேடிச் சென்றபோது என்ன கிடைத்தது….? மகாபாரதம் சொல்லும் நகரம் உண்மையில் இங்கு தான் இருந்ததா?

இது குறித்த சில சுவாரஸ்யமான செய்திகள் –

துவாரகை நகரத்திற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. மகாபாரதத்தில்
கூறப்படும் நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த
ஒரே இடமாக அது உள்ளது,” என்கிறார் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரான முனைவர்.அலோக் திரிபாதி.

நீருக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளும் தொல்லியல் ஆய்வுப் பிரிவால் ஒரு
மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி துவாரகையில் மேற்கொள்ளப்பட்டது

“இந்த இடம் வரலாறு மற்றும் சமய முக்கியத்துவத்திற்காக மட்டும்
புகழ்பெற்றது அல்ல, அகழ்வாராய்ச்சியிலும் முக்கியத்துவம் பெற்ற ஓர் இடம்
என்றும் அவர் குறிப்பிடுகிறார்

இந்தியாவின் 7 புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக துவாரகையும்
கருதப்படுகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சாம்ராஜ்யமாக இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் இந்த உலகத்தைவிட்டு மறைந்த பிறகு இந்த சாம்ராஜ்யம் கடலில் மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

“இந்த வரலாற்று நகரம் உண்மையில் இருந்ததா என்பதை சந்தேகத்திற்கு
இடமின்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு, கடந்த நூற்றாண்டின் இரண்டாம்
பாதியில் முக்கிய ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டதாகக் கூறுகிறார் அலோக் திரிபாதி.

துவாரகையில் முதல் அகழாய்வு 1960-களில் புனே’யின் டெக்கன் கல்லூரியால் மேற்கொள்ளப்பட்டது. 1979-ல் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மற்றோரு அகழாய்வை மேற்கொண்டது. இதில், மண்பாண்டங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவை கிறிஸ்து பிறப்புக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று அப்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டவர்கள் கருதியதாக அலோக் திருபாதி குறிப்பிடுகிறார்.

“துவாரகைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம், பல வகையான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


பல வண்ணங்களில் மண் பண்டங்கள், சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணம்
பூசப்பட்ட கூஜா போன்றவை கிடைத்தன” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வுகளின்போது ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள்
கிடைத்தாக குறிப்பிடும் அலோக் திரிபாதி, இங்கு கிடைத்த மண்பாண்டங்கள்
கிமு 2000-க்கு முந்தையது ( அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கும் முந்தையது ) என்பதும் இங்கே நாகரிகம் எப்படி படிப்படியாக வளர்ந்திருக்கலாம் என்பதை
அவை நிரூப்பிப்பதாகவும் கார்பன் டேட்டிங் மூலம் தெரியவந்ததாக கூறுகிறார்.

ஆழ்கடல் பகுதியில் கற்களால் ஆனா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அங்கு நீரோட்டம் மிக வலுவாக இருப்பதால் பிற பொருட்கள் காணப்படவில்லை என்றும் அலோக் திரிபாதி தெரிவித்தார்.

துவாரகை அழிந்தது எப்படி….?

“நீரில் மூழ்கிய துவாரகையின் தொல்லியல் ஆய்வுப் பணிகள் தற்போதுள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கு அருகில் நடத்தப்பட்ட அகழாய்வுடன் தொடங்கியது,” என்று கூறுகிறார் சிஎஸ்ஐஆர் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜீவ் நிகம்.

கோவிலை சுற்றி ஏராளமான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது
கடல்மட்டம் உயர உயர நிலத்தை நோக்கிக் கோவில் மெல்ல மெல்ல
நகர்ந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதையடுத்து, கடலுக்குள்ளே ஆய்வு மேற்கொண்டு மூழ்கிய நகரத்தின்
சான்றுகள் அங்கு உள்ளனவா என்று ஏன் பார்க்கக்கூடாது என்ற எண்ணம்
இந்தியாவின் பிரபல தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் எஸ்.ஆர்.ராவுக்கு
வந்ததாகவும் . அதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் ராஜீவ் நிகம் குறிப்பிடுகிறார்.

2007ஆம் ஆண்டு இது தொடர்பாக விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் இயக்குநராக அலோக் திரிபாதி இருந்தார்.

இது தொடர்பாக பேசும்போது, “புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் துவாரகையில் காணப்படுகின்றன.

அங்கிருந்து ஒரு சிறு நீரோடை கடலுடன் வந்து கலக்கிறது. அது கோமதி நதி
என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியின் கரையில்தான் துவாரகை நகரம் அமைந்துள்ளது. அறிவியல்ரீதியாக அந்த இடம் முழுவதையும் ஆய்வு செய்தோம். அதில் நாங்கள் 50 மீட்டர் பகுதியில் அதிக எச்சங்கள் இருப்பதையும் அவை நன்கு பாதுகாக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம்,” என அலோக் திரிபாதி கூறினார்.

இந்தப் பகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையில் கல் நங்கூரங்கள்
கிடைத்துள்ளன. எனவே இதுவொரு புராதன துறைமுகம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது,” என அசோக் திரிபா தெரிவித்தார்.

50 ஆயிரம் ஆண்டுகளில் கடல்மட்டம் எந்தளவு மாற்றமடைந்துள்ளது என்பது
குறித்த தரவுகளை தேசிய கடலியல் ஆய்வு அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறும் டாக்டர் ராஜீவ் நிகம், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ளதைவிட கடல் மட்டம் 100 மீட்டர் கீழே இருந்ததாக குறிப்பிடுகிறார்.

சுமார் 3,5000 ஆண்டுகளுக்கு முன்புதான் துவாரகை நகரம் கட்டப்பட்டிருக்க
வேண்டும். பிறகு கடல் மட்டம் அதிகரித்தபோது, அந்த நகரம் நீரில்
மூழ்கியிருக்க வேண்டும்,” என ராஜீவ் நிகம் தெரிவித்தார்.

.
……………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.