“மர்மமாக ஆஃப் ஆகும் சிக்னல்கள்…” கேபிள் டிவி பிரச்சினைக்கு விஜய் அரசு காரணமா … ???

…………………………………………………

…………………………………………………………………………..

ஜூனியர் விகடன் சொல்லும் செய்தி ….

அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கும் சர்ச்சைகளுக்கும் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. அவ்வப்போது, அதன் கேபிள் சேவைகள் தடைப்படுவதும், அரக்கப் பரக்க அரசு அதிகாரிகள் வேகமெடுக்க, தடைப்பட்ட சேனல்கள் மீண்டும் இணைப்புக்குள்ளாவதும் வாடிக்கையாகிவிட்டது.

கடந்த ஆட்சியில் நடந்த அதே அவலங்கள், இந்த த.வெ.க ஆட்சியிலும் தொடர்கதையாகியிருப்பதுதான், சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

“மர்மமாக ஆஃப் ஆகும் சிக்னல்கள்…”

தமிழ்நாட்டில், சுமார் ஒன்றே கால் கோடி கேபிள் இணைப்புகள் இருக்கின்றன. அந்த இணைப்புகளை டி.சி.சி.எல்., வி.கே.டிஜிட்டல், எஸ்.சி.வி போன்ற தனியார் கேபிள் நிறுவனங்கள் பங்கிட்டுக்கொண்டது போக,

அரசு கேபிள் டி.வி நிறுவனமான ‘TACTV’ கட்டுப்பாட்டில், சுமார் 16 லட்சம் கேபிள் இணைப்புகள் இருக்கின்றன. அதில்தான் சிக்கல் முளைத்திருக்கிறது.

அது குறித்து நம்மிடம் பேசிய அரசு கேபிள் டி.வி நிறுவன அதிகாரிகள் சிலர்,

“2017-ல், அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கு 37.4 லட்சம் செட்டாப் பாக்ஸுகள் கொள்முதல் செய்யப் பட்டன. மும்பையைச் சேர்ந்த வடஇந்திய நிறுவனம்தான், 614 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த டெண்டரை எடுத்து செட்டாப் பாக்ஸுகளை சப்ளை செய்தது.

சீனத் தயாரிப்பான அந்த செட்டாப் பாக்ஸுகளிலுள்ள சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடியாது. அதன் இணைப்புகளை ஒரே Conditional Access System-மில்தான் பயன்படுத்த முடியும். அந்த செட்டாப் பாக்ஸுகளுக்கான சாஃப்ட்வேர்களைப் பராமரிக்கும் பொறுப்பு, வடஇந்திய நிறுவனத்திடமே அ.தி.மு.க அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

அந்த நிறுவனத்துக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாத சமயங்களில், அவ்வப்போது சிக்னல்கள் மர்மமாக ஆஃப் ஆகிவிடும். நிலுவைத் தொகையை வழங்கியவுடன் சிக்னல்கள் ‘ஆன்’ ஆகிவிடும்.

கடந்த தி.மு.க ஆட்சியில், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆனதைத் அடுத்து, சாஃப்ட்வேர்களைப் பராமரிக்கும் பொறுப்பையும், அதற்கான ‘கீ பாஸ்வேர்டு’-களையும், வடஇந்திய நிறுவனத்திடம் கேட்டது அரசு.

ஆனால், அப்போதிருந்த ஆட்சி மேலிடத் தொடர்பால், பாஸ்வேர்டைக் கடைசிவரை தரவில்லை அந்த நிறுவனம். அதுதான் பிரச்னையே.

“இதனால் அரசுக்குச் செலவாச்சே…”

த.வெ.க அரசு அமைந்தவுடன், ஐடி துறை அமைச்சரான குமார், அரசு கேபிள் டி.வி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, ஆக்டிவ்வாக இருக்கும் கேபிள் இணைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டார்.

வடஇந்திய நிறுவனத்திடம் தான் மொத்தத் தரவுகளும் இருப்பதாக அதிகாரிகள் சொல்லவும், ‘ஆக்டிவ் இல்லாத செட்டாப் பாக்ஸுகளுக்கும் பராமரிப்புச் செலவை அரசு செலுத்த வேண்டியிருக்குமே… அந்த நிறுவனத்திடம் விவரங்களைக் கேட்டுப் பெறுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அதை வடஇந்திய நிறுவனம் ரசிக்கவில்லை. தன்னுடைய வழக்கமான வேலையைக் காட்டிவிட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக, ஒவ்வொரு சேனலாக அரசு கேபிளில் தடைப்படத் தொடங்கின. இதனால், அரசியல்ரீதியிலான எதிர்ப்புகளும் எழுந்தன. நாங்கள் விசாரித்தால், ‘இது டெக்னிக்கல் பிரச்னை. ஹைதராபாத்தில் சர்வர் இருப்பதால், அங்கே சிக்னல் கோளாறு. நார்வேயிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து, சரிசெய்கிறோம்’ என்கிறார்கள்.

ஆனால், புதிய அரசை, தன் வழிக்குக் கொண்டுவருவதற்காகவும், ஆண்டு பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையைப் பெறவும் அந்த வடஇந்திய நிறுவனம் சில சித்து வேலைகளைக் காட்டியிருப்பது தெரியவருகிறது.

இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து விளக்கியிருக்கிறார் அமைச்சர் குமார்.

டெல்லி டூர் முடிந்து முதல்வர் ஊர் திரும்பியதும், அரசு கேபிள் டி.வி தொடர்பாக ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில், அந்த வடஇந்திய நிறுவனத்தையும் வரச் சொல்லப் போகிறார்கள்.

எழுத்துபூர்வமாக அவர்களின் குறைகளை எழுதி வாங்கவும், CAS, SMS சாஃப்ட்வேர்களுக்கான பாஸ்வேர்டுகளைப் பெறவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதன் மூலமாவது, அந்த வடஇந்திய நிறுவனத்தின் ஆதிக்கம் அரசு கேபிளில் முடிவுக்கு வர வேண்டும்” என்றனர் விரிவாக.

`மந்திர’ கட்டு அறுத்தெறியப்படுமா?

நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “கடந்த ஆட்சியில், ஐடி துறை அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருந்தபோது, அரசு கேபிள் சாஃப்ட்வேர்களை கன்ட்ரோல் எடுக்க முயன்றார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை.

இந்த முறை என்னவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது. வடஇந்திய நிறுவனத்தின் சாஃப்ட்வேர் சர்வாதிகாரத்திலிருந்து வெளிவர, சொந்தமாகவே சாஃப்ட்வேர் கன்ட்ரோல் சிஸ்டத்தை சென்னையில் அமைக்கவும் ஆலோசிக்கப் பட்டிருக்கிறது.

Tanfinet உடன் இணைந்து, கேபிள் இணைப்புகள் வழியே இன்டர்நெட், ஓடிடி வசதிகளைக் கொண்டுவரவும் தீர்மானித்திருக்கிறோம்” என்றார்.

அரசு கேபிளில் சுமார் ஒன்பது ஆண்டுகளாகவே தொடர்கிறது இந்தப் பிரச்னை. ஒரு தனியார் நிறுவனம், அரசாங்கத்தோடு மோதிப் பணியவைக்க முயல்வதும், கெட்ட பெயரை உருவாக்க முனைவதும் ஏற்கத்தக்கது அல்ல.

அரசு கேபிளைச் சுற்றியிருக்கும் ‘மந்திர’ கட்டை புதிய அரசு அறுத்தெறிய வேண்டும் …..( உதவிக்கு நன்றி – ஜூனியர் விகடன் )

……………………………………………………………………………………………………………………………………

பின் சேர்க்கை – கீழே திருமா பேட்டி –

…………………………………………….

திருமா வெளியேற விரும்பினால்,

அவர் மட்டும் தான் வெளியேற முடியும் …

மாண்புமிகு வன்னியரசு அவர்கள் வெளியே வர மாட்டார் …

திருமாவுக்கு – கீழ்ப்பாக்கத்துக்கு வழி தெரியுமா … யாராவது

உதவ வேண்டுமா … ???

……………..

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக