…
…
“Exit Poll” முடிவுகள் ஏன் இப்படி அமைந்தன … ? சந்தேகம்
வலுக்கவே செய்கிறது….!!!
இன்று ஸ்டாக் எக்சேஞ்சில் பயங்கர பிசினஸ் என்று செய்திகளை
பார்த்திருக்கலாம்.
நேற்றிரவு வெளியான பாஜகவுக்கு ஆதரவான Exit poll முடிவுகளின்
காரணமாக இன்று காலையில் பிசினஸ் துவங்கிய 60 விநாடிகளில்,
3.18 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் பார்த்திருக்கிறார்கள்…!!!
…

…
இந்த எக்சிட் போல் முடிவுகளால் யாருக்கு ஆதாயம்
என்று பார்த்தால், முடிவுகள் ஏன் இப்படி இருந்தன
என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.
இத்தனை லட்சம் கோடி ரூபாய் லாபம் பண்ணக்கூடிய
ஒரு வாய்ப்பை உருவாக்க, சம்பந்தப்பட்டவர்கள் –
சில கோடி ரூபாயை –
செலவிட்டிருக்க மாட்டார்களா என்ன…?
எனவே, ஒருவேளை Exit poll முடிவுகள் செயற்கையானதாக
இருக்குமோ என்கிற சந்தேகம் மேலும் வலுப்படுவதை
தவிர்க்க முடியவில்லை.
.
————————————————————————————————————



அப்படியாவது மனசைத் திருப்தி பண்ணிக்கொள்ளுங்கள்
யார் லாபம் பார்த்தனர்.? எப்படி பார்த்தனர்? ஒரு தரப்புக்ஷ லாபம் பார்க்கிறதெனில் மற்றொரு தரப்புக்கு நஷ்டம்தானே ?
” ஃபார்ச்யூன் 500 ” ன் எச்சரிக்கை :– // எக்ஸிட் போலை நம்பாதீர்கள்.. உலக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. அதிர வைக்கும் ஃபார்ச்யூன் 500 கடிதம்! //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/fortune-500-warning-letter-to-companies-on-exit-poll-351093.html …
// இந்திய பங்கு சந்தை தற்போது உயர்வை யாரும் நம்ப வேண்டும். இந்த உயர்வை வைத்து வரும் லாபம் போதும் உடனடியாக பங்குகளை வெளியே எடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதாவது எக்ஸிட் போலை நம்ப வேண்டாம், வேகமாக பங்குகளை வெளியே எடுங்கள் என்று ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
பொதுவாக ஆட்சி மாற்றம் இருக்க வாய்ப்புள்ள சமயங்களில் மட்டுமே இதுபோல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சி மாறிய போது இதேபோல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே போல ஃபார்ச்யூன் எச்சரிக்கை விடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. // ….. போக — போக தெரியுமோ …?