எங்கே போனது 3,622 கோடி ரூபாய்….???


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
புனேயைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர்
அதிகாரபூர்வமாக பெற்றிருக்கும் தகவலின்படி –

இந்த தேர்தல் சமயத்தில் –

மார்ச் 2019 -ல் 1,365.69 கோடி ரூபாய்க்கும்,
ஏப்ரல் 2019 -ல் 2,256.37 கோடி ரூபாய்க்கும்,
ஆக மொத்தம் சுமார் 3,622 கோடி ரூபாய்க்கு

SBI மூலமாக தேர்தல் நன்கொடை பத்திரங்கள்
– Electoral Bonds -தனிப்பட்ட நபர்களாலும்,
கம்பெனிகளாலும் வாங்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் சில குறிப்பிட்ட அரசியல்
கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக
வழங்கப்பட்டிருக்கின்றன…

ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால் –

இந்த பத்திரங்களை வாங்கியது யார் என்றோ…
கொடுக்கப்பட்டது யாருக்கு என்றோ –
யாருமே தெரிந்து கொள்ள முடியாது….
அந்த அளவிற்கு ரகசியம்…உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2018 ஜனவரிக்கு முன்னால் இந்த நிலை இல்லை.
20,000 ரூபாய்க்கு மேல் யார் நன்கொடை
கொடுத்தாலும், செக் (காசோலை) மூலமாகத்தான்
கொடுக்க வேண்டும். யார் கொடுத்தது,
எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்த
விவரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கட்சிகள்,
தேர்தல் கமிஷனிடம் அளிக்கும் ஆண்டு
நிதி அறிக்கையில் வெளிப்படையாக
தெரிவிக்கப்பட்டாக வேண்டும்…
எனவே, இதில் வெளிப்படைத்தன்மை இருந்தது.

ஆனால், மோடிஜி சர்க்கார் கொண்டு வந்த
electoral bond scheme மூலம்,
ஜனவரி 2018 முதல் இந்த வெளிப்படைத் தன்மை
அழிக்கப்பட்டது.

ஆக, இப்போது எவ்வளவு பணம் யாருக்கு சென்றது,
யாரால் கொடுக்கப்பட்டது என்பதை பொதுமக்களோ,
மீடியாவோ தெரிந்து கொள்ள வழி இல்லை.

இது குறித்த பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்
முன்னிலையில் விவாதத்திற்கு வந்தபோது,
மத்திய அரசின் தரப்பில் –

” வாக்காளர்களுக்கு இது குறித்த
( அரசியல் கட்சிகளுக்கு, பணம் யார் கொடுத்தது,
எவ்வளவு கொடுக்கப்பட்டது … ) போன்ற விவரங்கள்
தெரிய வேண்டும் என்கிற அவசியம்
இல்லை” என்று வாதிக்கப்பட்டது.

( During the hearings, attorney general K.K Venugopal
stated that it was not the “voter’s concern”
to “know where the money comes from”…)

வாழ்க ஜனநாயகம்….
பாஜகவின் வெளிப்படையான ஜனநாயகம்…!!!!

.
—————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to எங்கே போனது 3,622 கோடி ரூபாய்….???

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    சேச்சே…

    நாங்க ஊழல் செய்ற கட்சியோ ஊழலுக்கு துணை போற கட்சியோ கெடையாது…

    ஏன்னா…

    நாங்க வித்தியாசமான கட்சி…!

    இப்படி யாரோ மொதல்ல சொல்லிக்கிட்டாங்க.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //20,000 ரூபாய்க்கு மேல் யார் நன்கொடை கொடுத்தாலும், செக் (காசோலை) மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் // – இந்தச் சட்டமே தவறு. 1000 ரூபாய்க்கு மேல் ஒருவர் அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுக்கிறார் என்றாலே அவரது ‘ஆதார் எண்’ முதல்கொண்டு அரசுக்குத் தெரியவேண்டும். அதாவது அத்தகைய நிதி கணக்கில் கொண்டுவரப்படவேண்டும் (மாயாவதி பல நூறு கோடி ரூபாய் நன்கொடை எல்லாமே, 20,000 ரூபாய்க்கு கீழ் கொடுத்த பணம் என்று அரசை ஏமாற்றிவிட்டார்).

    எலெக்ட்டொரல் பாண்ட் திட்டமே பெரிய மோசடித் திட்டம். ‘சாதாரண மக்களுக்கு 10 பைசா வருமானம் வந்தாலும் கணக்குக் காண்பிக்கவேண்டும்’ என்று எதிர்பார்க்கும் அரசு, ‘அரசியல் கட்சிகளுக்கு மட்டும்’ கொள்ளயடிக்கலாம், ஊழல் செய்யலாம் என்று சட்டம் போட எண்ணுகிறதா? மோடி தலைமையிலான பாஜக, ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஆதரிக்கிறது என்பதையே இந்த ‘எலெக்டொரல் பாண்ட்’ திட்டத்தின் மூலம் சொல்கிறது.

    கடுமையான ஊழல் செய்யும் எண்ணமுடைய என்னைப் போன்றவர்கள் அரசின் தலைவராக ஆனால், ‘ஐ டி ரெய்டு’, ‘சிபிஐ ரெய்டு’ என்று பயமுறுத்தி, மற்றவர்களை எலெக்டொரல் பாண்ட் வாங்கி என் கட்சிக்கு நிதியளி என்று அழுத்தம் கொடுத்து கட்சிக்கு நிதி சேர்ப்பேன். கருப்புப் பணம் இருப்பதை, நான் காட்டிக்கொடுக்க மாட்டேன், 30% என் கட்சிக்கு எலெக்டொரல் பாண்ட் மூலம் நிதியளி இல்லைனா என் டிரெஸ்டுக்கு நிதியளி என்று பணம் சம்பாதிப்பேன். ஆனால் பாஜக ஊழலே செய்யாத கட்சி அல்லவா? ஊழல் செய்யும் எண்ணம் இல்லாத தலைவர்களைக் கொண்ட கட்சி அல்லவா? அதனால் அந்தக் கட்சி இந்த முறையில் பணம் சேர்த்திருக்காது. அட்டர்னி ஜெனெரல், பாஜக கட்சி, பிரதமர் ஆகியவர்களை கன்சல்ட் செய்யாமல் இந்த மாதிரி நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்திருப்பார். ஆகவே ‘யார் பணம் கொடுத்தார்’ என்பதை வெளிப்படையாக பாஜக, பிரதமர் மோடி சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

  3. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    புதியவன் –

    // ஆனால் பாஜக ஊழலே செய்யாத கட்சி அல்லவா? ஊழல் செய்யும் எண்ணம் இல்லாத தலைவர்களைக் கொண்ட கட்சி அல்லவா? அதனால் அந்தக் கட்சி இந்த முறையில் பணம் சேர்த்திருக்காது. அட்டர்னி ஜெனெரல், பாஜக கட்சி, பிரதமர் ஆகியவர்களை கன்சல்ட் செய்யாமல் இந்த மாதிரி நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்திருப்பார். //

    ஆமாமாம். நீங்கள் சொல்வது மிகவும் சரி.
    ஆனால் ஒரு சின்ன சந்தேகம்;
    இந்த சட்டத்தை பார்லிமெண்டில் கொண்டு வந்து நிறைவேற்றியதைக் கூட மோடிக்கு தெரியாமலே பண்ணி இருப்பார்களோ ?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      @ராஜகோபாலன் – சட்டையர், சர்காஸ்டிக் – இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா இல்லை புரியுமா?

      • Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

        புதியவன் –

        // ராஜகோபாலன் – சட்டையர், சர்காஸ்டிக் – இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா இல்லை புரியுமா? //

        எனக்கு புரிகிறது சார் உங்கள் எஸ்கேப் கேட்.

        ஆனால் நான் கீழே பண்ணி இருப்பது அதே தான்
        என்பதை உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை ?
        மீண்டும் இதை படித்துப் பாருங்கள் –

        // ஆனால் ஒரு சின்ன சந்தேகம்;
        இந்த சட்டத்தை பார்லிமெண்டில் கொண்டு வந்து நிறைவேற்றியதைக் கூட மோடிக்கு தெரியாமலே பண்ணி இருப்பார்களோ ? //

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        You are not understanding the point. If you go thru my various comments in this blog, you would understand that my comments are issue based and may not be in line with the writer’s tone.

        In this issue, what Modi and BJP are doing is WRONG. I hope now you can understand the tone of my feedback.

        When Modi said, நானும் சாப்பிடமாட்டேன் அடுத்தவர்களையும் சாப்பிடவிட மாட்டேன், there was much expectation from his supporters, as we witnessed Doll PM who allowed/encouraged other swindlers. But after demonetization whenever a culprit was found (with amazing 2000 rs notes), there was no action taken. There were several IT raids (including Jegathratchagan) and so many… I wont spare even that 200 odd crores caught in a container, in Tamilnad-JJ’s time, said to be bank’s money etc.) with zero outcome. On top of it, Modi has brought up ‘Electoral bonds’ which in my opinion is a SCAM though it allows opposition also to take such monies and gain.

        What attorney General says is the voice of Modi. ie வாக்காளர்களே… உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க. யார் பணம் வாங்கறா, யார் வாங்கிக்கொள்கிறார்கள், எந்த வகையான பணம் அது, ஏன் பணம் கொடுக்கறாங்க – இதெல்லாம் none of your business. இதை எந்தக் குடிமகன் ஏற்றுக்கொள்வான்? The office of PM, Party Heads are accountable.

        பத்திரிகைல, தொலைக்காட்சில பெரிய பிரச்சனையாக இது வளர்ந்தால், அப்போ (இதுக்கு முன்னால செய்தமாதிரி), வேணுகோபால் ஆஃபீஸ் தவறாக சொல்லிவிட்டது, இதோ புதிய பிரமாணப் பத்திரம் என்று சொல்வார்கள். ஆனா எத்தனைபேர் இதனை பெரிய பிரச்சனையாக அணுகுவார்கள் என்பது தெரியலை. இதுக்கும் என்.ஜி.ஓ ஸ்கேமுக்கும் என்ன வித்தியாசம்?

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    பாஜக ஊழல் செய்யாத கட்சி, ஊழல் செய்யும் எண்ணம் இல்லாத தலைவர்களை கொண்ட கட்சி…

    எனில்,

    அந்த கட்சியின் சொத்து மதிப்பு 2014க்கு முன்பு எவ்ளோ 2019 இன்றைய தேதிக்கு அதன் சொத்து மதிப்பு எவ்ளோ என்று கேட்டு சொல்ல முடியுமா…?

    சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது என்று சொல்கிறார்களே…. இன்று இருக்கும் அரசியல் கட்சிகளில் பணக்கார கட்சியாக முதலிடம் வகிப்பது அது தான் என்கிறார்களே…. எப்படி வந்தது அவ்ளோ பணம்…?

    கேட்டு சொல்வார்களா அதுக்கு காவடி தூக்குபவர்கள்.

    • Babu's avatar Babu சொல்கிறார்:

      காங்கிரஸ் யோக்கியமா ?
      சோனியா மருமகன் எவ்வளவு பெரிய திருடன் தெரியுமா ?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அறிவழகு – இந்த வாதத்தில் பெரிய அர்த்தமில்லை. “ஊழல் செய்யாத கட்சி, ஊழல் செய்யும் எண்ணம் இல்லாத கட்சி” என்று யார் சொன்னாலும் அதில் அர்த்தமில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…… உள்ளூர்ல ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் ஜெயிக்கக்கூடிய வேட்பாளர்கள், 20 கோடிக்குக் குறைவாக செலவழிப்பாங்கன்னு நினைக்கறீங்க? அவங்க எம்.பி. பதவியின் நியாயமான வருமானம் 4 கோடியாவது வருமா என்பது என் சந்தேகம். அப்புறம் ஏன் இவங்க 20+ கோடி செலவழிக்கிறாங்க? எம்.பிக்களே இப்படீன்னா, மந்திரி பதவியில் இருப்பவங்க, அதுக்கு தலைமை… யோசித்துப்பாருங்க….

      எந்தக் கட்சி ஆளும் கட்சியோ அதுக்குத்தான் தொழிலதிபர்கள் காவடி தூக்குவாங்க. ஒபாமா இங்க வந்தபோது, நம் பாரம்பர்ய தொழிலதிபர்கள் வரிசையில் நின்று அவரைப் பார்க்க பல மணி நேரம் காத்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஒபாமாவும், டிரம்பும் வந்தால், அதே கும்பல் டிரம்ப் ஹோட்டலின் முன்புதான் காத்துக் கொண்டிருப்பார்கள்.

      இன்றைக்குவரை வந்த செய்திகளின் பிரகாரம், ‘வகை தொகை’ இல்லாமல் காங்கிரஸ், திமுக ஆட்சியைப்போல் பாஜக கொள்ளையடிக்கவில்லை என்பதுதான் என் எண்ணமாக இருக்கிறது. காங்கிரஸ், திமுக, மக்களைப் பற்றிக் கவலையில்லாமல் நேரடியாக கொள்ளையடித்தனர். அதனால்தான் மக்கள் வெகுண்டெழுந்து காங்கிரஸ், திமுகவைத் துரத்தியடித்தனர். பாஜக வண்டவாளத்தை யாரேனும் ஆதாரபூர்வமாக எழுதும்போது, ஓரளவு நம்பும்படியாக இருக்கும்போதுதான் அவங்க கதை தெரியும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு (அதாவது இதுவரை) பாஜகவின் பெரிய பிரச்சனை என்பது, ஒரு முகத்தின் ‘சர்வாதிகாரத்தனம்’ என்றுதான் எனக்குள் படுகிறது. அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களை ஹேண்டில் செய்ததில் நான் மோடி அவர்களின் சர்வாதிகாரத் தன்மையையும், நேர்மையற்ற தன்மையையும்தான் கண்டிருக்கிறேன்.

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        என் வாதத்தில் பெரிய அர்த்தமில்லை என்று சொல்லிவிட்டு….. அடுத்த வரியிலேயே

        “ஊழல் செய்யாத கட்சி, ஊழல் செய்யும் எண்ணம் இல்லாத கட்சி” என்று யார் சொன்னாலும் அதில் அர்த்தமில்லை என்றீர்கள் பாருங்கள்….

        என்னா ஒரு வாதம்…. என்னா ஒரு தடுமாற்றம்…முரண்…. ஏன்….!

        பிறகு ஊழலில் பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதாக ஒரு நீண்ண்ண்ட….. வழக்கம் போல …வழ வழா….

        நாமும் அதையே தான் சொல்கிறோம். இந்த தளமும் அதை தான் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டும் இருக்கு.

        பாஜக எந்த கட்சிக்கும் வித்தியாசம் இல்லை என்கிற போது மற்றவர்களை பார்த்து ஊழல் ஊழல் என்று கத்த என்ன தார்மீக உரிமை இருக்கு அதற்கு….அதை அவர்கள் எப்போதோ இழந்து விட்டார்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் மட்டைகள் தான்.

        ஆனால், பாஜக மற்ற கட்சிகளில் இருந்தும் மாறுபட்டது வேறுபட்டது என்பதை அதன் தலைமையின்
        சர்வாதிகார போக்கை மட்டும் வைத்து மட்டுமல்ல, அந்த கட்சியின் அங்கத்தினர்களின் மத
        துவேச பேச்சுக்கள் மதத்தை வைத்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் வெறியூட்டப்பட்ட அதன் ஆதரவாளர்களுக்கு மௌனமாக இருந்து ஆதரவு அளித்து இந்த நாட்டையே சுடுகாடாக்க துடிக்கும் அதன் போக்கு.

        நிச்சயம் மற்ற கட்சிகளில் இருந்தும் மாறுபட்டது தான்.

        இந்த பயங்கரவாத போக்கில் உமக்கு உடண்பாடுண்டா….

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    இந்த கட்சிகளுக்கான நன்கொடை — தேர்தல் நன்கொடை — தேர்தல் நன்கொடை பத்திரங்கள் என்று இதுவரை இதை சார்ந்த மொத்தம் 24 இடுகைகள் தளத்தில் வந்துள்ளன — அதில் :

    // பிரமிப்பைத்தரும் பண வசூல்…. பாஜகவுக்கு – குவிகிறது கோடிகளில்……..!!!
    Posted on ஏப்ரல் 16, 2018 by vimarisanam – kavirimainthan // ஓராண்டுக்கு முன் வந்த இடுகையின் சில பின்னூட்டங்கள் — தற்போது இன்று வந்துள்ள இடுகையின்
    சில பின்னூட்டங்கள் — ? அய்யா … கா.மை அவர்களே படித்து ஏதாவது புதுமையாக இருந்தால் கூறுங்களேன் எமது மரமண்டைக்கு புரியும்படியாக ….! — செக்கு மாடு போல தேர்தல் நிதி பற்றியே சுற்றி வருவது — ஒருவித தளர்ச்சியை ஏற்படுத்தவில்லையா … ?

    மேலும் இதை சார்ந்த ஒரு // கட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ? ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ?”
    Posted on மார்ச் 12, 2015 by vimarisanam – kavirimainthan // என்ற இடுகையின் ஊடே ; // பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க – பாஜகவின் மீது
    எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க – பாஜக விற்கு கிடைத்த
    “டொனேஷன்”களும் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது …!!!

    இதிலிருந்து தெரிய வருவது …?
    வரத்தக நிறுவனங்களும்,
    பெரும் தொழிலதிபர்களும்,
    ஆளும் கட்சியை,
    ஆளப்போகும் கட்சியை ஆதரித்து – பெரிய அளவில்
    “டொனேஷன்”களைக் கொடுப்பது, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு
    வந்த பின் அந்தந்த கட்சித்தலைவர்கள் மூலம்
    தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ளும்
    முயற்சிகள் நடக்கின்றன என்பதைத்தானே ? // என்பது என்றுமே மாறாதது என்று தெரிந்தும் …. மீண்டும் — மீண்டுமா …? வாழ்க ஜனநாயகம..!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      வேறு வழி இல்லை…
      இந்த வயதில், என்னால் இந்த சமூகத்திற்கு
      வேறு எந்த விதத்திலும் பணியாற்ற முடியவில்லை..
      குறைந்த பட்ச சமூக கடமையாக,

      எனக்கு தெரியவரும் தவறுகளை/தீமைகளை
      நல்லது / கெட்டதுகளை
      என் பார்வையில் எடுத்துச்சொல்ல நினைக்கிறேன்.

      மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி –
      எதிர்த்தாலும் சரி.

      நான் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ,
      பெருமைக்காகவோ, எதாவதொரு கட்சியின்
      மீதான அபிமானம் காரணமாகவோ
      இதைச் செய்யவில்லை. சமூக நலன்
      ஒன்று மட்டும் தான் என் குறிக்கோள்.

      இதனால் சொந்த முறையில் எனக்கு ஏற்படும்
      பாதிப்புகளே அதிகம். இருந்தாலும்,
      என் மனசாட்சிக்கு நான் நியாயம் செய்தால்
      அதுவே எனக்கு திருப்தி தரும்…

      இதனால் பெரிய சமூக சேவை எதுவும்
      செய்வதாகவும் நான் கருதவில்லை….
      ஆனால், என் மனதிற்கு திருப்தியளிக்கக்கூடிய
      செயல் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறேன்
      என்று சொல்ல முடியும்.

      3,622 கோடி ரூபாய் சமாச்சாரம் –
      இன்று காலை தான் வெளி வந்தது…!
      அதனால் இந்த இடுகை.

      முன்பு எழுதியவை, அவ்வப்போது
      வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலானவை.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.