…
…
இந்த இடுகையை வெளியிடும்போது,
மென்மையான இதயம் உடையவர்களும்,
மைதா சாப்பிடுபவர்களும் இதை
படிக்கவோ / பார்க்கவோ வேண்டாம் என்று
கேட்டுக் கொள்ள வேண்டுமோ என்று கூடத் தோன்றியது ….!!!
// மைதாவிலுள்ள மிகக்கேடான ஒரு பொருள் அலாக்சா…
அலாக்சாவை இஞ்ஜெக்ஷனாக போட்டாலே சர்க்கரை வியாதி வந்து விடும்…
நேரடியாக கணையத்தை தாக்கி இன்சுலின் உற்பத்தியை
பாதிக்கக்கூடியது அலாக்சா – //
இப்படியெல்லாம் பயமுறுத்துகிறார் இவர்.
இவர் யாரென்பது பலருக்கும் தெரிந்திருக்கும் –
சித்த மருத்துவர் கு.சிவராமன்….
தன்னுடைய திறமையை செயலில் காட்டுவதை விட,
பேச்சிலும், விளம்பரம் பெறுவதிலும் –
அதிகம் காட்ட முயலும் ஒரு மருத்துவ-பேச்சாளர்…!!!
(மைதா, பிஸ்கெட், பிரட் … உட்பட…)
அனைத்து packaged products – பாக்கெட்டுகள்
ஒவ்வொன்றின் மீதும் அந்த பொருளில் கலந்துள்ள
உப-பொருட்கள், அவை ஒவ்வொன்றின் சதவீதம்
போன்ற அனைத்து விவரங்களும்
அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது
உணவுப் பொருட்கள் பாதுகாப்பு சட்ட விதி…
இந்த தகவலை எந்த நிறுவனமும் சொல்லாது
என்கிறார் இந்த பேச்சாளர் …..
அப்படியானால், இந்த பாக்கெட்டுகளில் இருக்கும்
பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை மீறி,
உண்மையை மறைக்கின்றனவா…?
இது அரசுகளின் அமல்படுத்தும் அங்கங்களுக்கு
தெரியவில்லையா…?
அல்லது தெரிந்தும் – அரசாங்கங்கள் இதை
கண்டுகொள்ளவில்லையா…?
இந்த உண்மை தெரிந்த – இவ்வளவு பேசும் இவரே,
மக்கள் நலன் கருதி ஒரு பொது நல வழக்கு தொடர்ந்திருக்கலாமே…?
மைதா உடல்நலத்துக்கு உகந்தது அல்ல என்பதை
நான் முழுவதுமாக ஏற்கிறேன்.
ஆனால், இவர் தனது பேச்சால் கேட்பவர்களை பயமுறுத்தி,
அவர்கள் குற்ற உணர்ச்சியால், நிம்மதியை இழந்து,
குலைந்து போகும் அளவிற்கு வரம்பு மீறிப் பேச வேண்டுமா…. ?
…
…
.
———————————————————————————————-



கா.மை. சார்… நிச்சயம் பேச வேண்டும். இது ரொம்ப முக்கியமான விஷயம். நாம, நம் பாரம்பர்ய உணவுவகைகளை விட்டு விலகி, கண்ட கருமத்தையெல்லாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். இதே பிஸ்கெட் நான் +2 படிக்கும்போதும் இருந்தது… ஆனால் அப்போ 5 பிஸ்கட் 6 மாதத்தில் சாப்பிட்டாலே அதிகம். அதாவது எப்போவோ வாங்குவாங்க, அதிலும் ஃபேக்டரிலேர்ந்து ‘உடைந்த பிஸ்கட்’. நீங்களும் இனிப்பு சாப்பிட்டிருப்பீங்க, ஆனால் மாதம் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ… ஆனால் இப்போ எதையெடுத்தாலும் சர்க்கரை, உப்பு, மைதா போன்றவை சேர்த்த கலவை. காணாக்குறைக்கு அஜினமோட்டோ. இவையெல்லாம் மிக மிக ஆபத்தானவை. மேற்கத்தைய நாடுகளிலும் பிட்சா போன்றவை இருக்கிறது. ஆனால் அவங்க வெஜ் சாலட் எடுத்துப்பாங்க, தினமும் உடற்பயிற்சி, எதையும் அளவுக்கு அதிகமா சாப்பிடமாட்டாங்க. இந்தியாவில் எதிலும் மிக மிகக் கூடுதலான சர்க்கரை சேர்க்கிறார்கள். இதுபற்றி ரொம்ப நீளமாக என்னால் எழுதமுடியும். கல்ஃபில் வாங்கும் எந்த பிராண்டும், இங்கு தரம் குறைவாகத்தான் கிடைக்கிறது. ஒரே பிராண்டு, ஆனால் இங்கு தரம் மிகக் குறைவு. (for that matter, அனைத்துப் பொருட்களும்)
இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்க எழுதறேன். நான் வெளிநாட்டில், 2 ரூபாய் செலவு செய்யும் இடத்தில் 1 ரூபாய்க்கு அதே அளவு கார்ன்/சூர்யகாந்திவிதை ஆயில் இருப்பதைப் பார்த்து, அதை எடுக்கச் சொன்னேன். அப்போ அந்தக் கடைக்காரர் என்னிடம், எண்ணெயில் விலை குறைவுன்னு வாங்காதீங்க, பாமாயில் கலப்பு அதிகமா இருக்கும், நீங்க வழக்கமா வாங்கும் பிராண்டையே வாங்குங்கள் என்றார். அதற்கு அப்புறம்தான் இப்படி ஒரு விஷயம் இருக்கு என்பதே எனக்குத் தெரியும். அதனால் ‘இன்க்ரெடியண்ட்ஸ்’ நான் எப்போவும் எண்ணெய்க்குப் பார்க்க ஆரம்பித்தேன். எண்ணெயில் பாமாயில் கலப்பு மிக மிக அதிகம், அது உடலுக்குக் கெடுதி. பெட்ரோலிலிருந்து வரும் வாசனையற்ற எண்ணெயையும் கலக்கிறார்கள். (ஆனா பாமாயில் உடலுக்குக் கெடுதின்னு யாரும் சொல்வதில்லை.நிரூபிக்கப்படவில்லைனு நினைக்கிறேன். தெரியலை. அதனால்தான் கல்ஃபில் அதற்கு இன்னும் அனுமதி இருக்குன்னு நினைக்கிறேன். இந்த விலை குறைந்த எண்ணெய், நம் ஊரைவிட நல்ல குவாலிட்டியாகத்தான் இருக்கும், ஆனால் வசதி குறைந்தவர்கள் உபயோகிப்பது)
இந்தியாவில், நல்லெண்ணெய் என்று சொல்லிக்கொண்டு 30% நல்லெண்ணெய், மீதி மற்ற ஆயில் என்று விற்கறாங்க. (பாஜக அரசில்தான் இந்தச் சட்டம் வந்ததுன்னு ஞாபகம், அதாவது 30% இருந்தாலே ‘அந்த’ எண்ணெய் என்று விளம்பரம் செய்யலாம் என்று. டக்கென செய்தி படித்த மாதம்/வருஷம் ஞாபகத்துக்கு வரலை). அதிலும் அயோக்கியர்கள், ‘வெளி உபயோகத்துக்கானது’ என்று பாக்கெட்டில் ஆங்கிலத்தில் ப்ரிண்ட் செய்து ரிஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்கிறார்கள். இதைப் பற்றி யாரும் எழுதுவதில்லை, விவாதிப்பதில்லை. அப்படிச் செய்தால், தொலைக்காட்சிக்கு, பத்திரிகைக்கு விளம்பரம் வராதே.
நான் இந்தத் தளத்தைப் படிப்பவர்களிடம் கேட்டுக்கொள்வது, எண்ணெயில் இன்க்ரிடியண்ட்ஸ் என்ன என்று படித்து வாங்குங்கள். ‘சாப்பாட்டுக்கானதா’ என்பதையும் பாருங்கள். அதேபோல, ‘ஆயுர்வேத பேஸ்ட்’ என்று ஃப்ராடு பண்ணுகிறார்களா என்பதை, பேஸ்டின் அடிப்பகுதியில் உள்ள ‘கோட்டை’ வைத்து அறிந்துகொள்ளுங்கள். அது ‘பச்சை’க் கோடு என்றால் உண்மையிலேயே ஆயுர்வேத டூத் பேஸ்ட்.
நல்லெண்ணெய் கிலோ 280-300க்குக் குறைந்து கிடைத்தால், சந்தேகப்படுங்கள்.
புதியவன்,
நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் பற்றியெல்லாம்
படித்தவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் awareness
நிறையவே இருக்கிறது… ஆனால் எவ்வளவு பேர்
கடைபிடிக்கிறார்கள்… ?
நடுத்தர/ கீழ்மட்ட வர்க்கத்து
குடும்பத்தினர்கள் எவ்வளவு பேரால் நடைமுறையில்
கடைபிடிக்க முடிகிறது…?
சுலபமாக கிடைப்பதை வாங்கிச்சாப்பிடும்
நிலையில் தானே அவர்கள் இருக்கிறார்கள்.
தவறான பண்டம் என்றால் தடைசெய்ய வேண்டிய
பொறுப்பு, அரசாங்கத்திற்கு இல்லையா…?
அது சரி, நான் இடுகையில் சொல்லியிருந்த –
இந்த விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்தையும்
சொல்லலாமே…
// அப்படியானால், இந்த பாக்கெட்டுகளில் இருக்கும்
பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை மீறி,
உண்மையை மறைக்கின்றனவா…?
இது அரசுகளின் அமல்படுத்தும் அங்கங்களுக்கு
தெரியவில்லையா…?
அல்லது தெரிந்தும் – அரசாங்கங்கள் இதை
கண்டுகொள்ளவில்லையா…?
இந்த உண்மை தெரிந்த – இவ்வளவு பேசும் இவரே,
மக்கள் நலன் கருதி ஒரு பொது நல வழக்கு தொடர்ந்திருக்கலாமே…? //
இந்த மருத்துவ பேச்சாளர் வாய்கிழிய பேசுவதையும்,
யூட்யூபில் வீடியோக்கள் போடுவதையும்,
சொந்தமாக வியாபாரம் நடத்துவதையும் தவிர,
இந்த தவறான விஷயங்களின் விற்பனையை தடுக்கவோ,
பொதுநலனுக்காகவோ எதாவது செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… அதையும் நான் யோசித்தேன். May be it is out of reach for him while youtube videos are simpler. இன்னொன்று, //அலாக்சாவை இஞ்ஜெக்ஷனாக போட்டாலே// – எல்லா பேக்கரிகளும், பிட்சா ஹவுஸ் போன்றவைகளும் All Purpose Flour என்று சொல்லப்படும் மைதாவை உபயோகப்படுத்துகின்றன (வெளிநாட்டில்). நம்ம ஊர் மாதிரி இல்லாமல், அங்கெல்லாம் ஸ்டிராங் கண்காணிப்பு உண்டு. (வெஜ் என்று சொல்லி, அதில் ஒரு நான் வெஜ் பை ப்ராடக்ட் இருந்ததற்காக மிலியன் டாலர் கணக்கில் இழப்பீடு வழங்கியிருக்கின்றன பெரிய பிராண்ட்கள். அவ்வளவு கண்காணிப்பு). அப்போ, அங்கு உபயோகப்படுத்தும் மைதாவை ஏன் இவ்வளவு கொடியது என்று நம் சித்தா அறிஞர்கள் சொல்றாங்க? நம்ம ஊரில் நம் ப்ராசசிங்கில் ஏதேனும் பிரச்சனை இருக்கோ? அதுபோல வெல்லத்தில் நாம் மிக அதிகமாக கலப்படம் செய்கிறோம். காய்கறிகள், கழுவும் முறை என்று நாம் நிறைய பெஸ்டிசைடுகளைச் சேர்க்கிறோம். இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றே தோன்றுகிறது.
வசதிப்பட்ட சமயங்களில் ரெய்டுக்குச் செல்கிறார்கள் என்றும் நினைக்கிறேன். ‘வசதிப்பட்ட’ என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும்.
அமெரிக்காவிலும் கனடாவிலும் ஒஸ்திரேலியாவிழும் கூட இப்படியான விண்ணாதி விண்ணர்களின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன, அவர்களின் சொல்லை தலைமேல் கொண்டு செயல்படும் பக்தகோடிகளும் ஏராளம்!! கடைசியில் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்தான் தலையைப்போட்டு உடைத்து, இவர்களை காப்பாற்ற வேண்டிய நிலை!! இவர்களை “படித்த முட்டாள்கள்” என்று அழைப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்??
// https://ta.wikipedia.org/s/1bp2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா,[1] ஐரோப்பிய ஒன்றியம்,[1] (பிரிட்டன் உட்பட,[2][தொடர்பிழந்த இணைப்பு]) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான பசையாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து[3] மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் “ஜவ்வரிசி” உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம். //
இந்த விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டுள்ள இரண்டு கெமிக்கல்ஸ் ” பென்சோயில் பெராக்சைடு மற்றும் அலொட்சான் ” கெடுதல் பற்றி இதுலேயே குறிப்பிட்டு இருந்தும் அதைப்பற்றி கவலைகொள்ள யாருக்கும் மனம் இல்லை —
கொக்கோகோலா என்பதைப் பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்து — கடுமையான ரசாயன பொருள் உள்ளது என்று கூறியும்
கர்நாடகா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அதை ” பூச்சிக்கொல்லியாக ” பயன்படுத்துவது தெரிந்தும் விற்பனையாகிக்கொண்டு இருப்பதும் —
ஒரு நூடுல்ஸ் மிகவும் கெடுதல் என்று தடை செய்யப்பட்டு — அந்த கம்பெனிக்கு ஏற்படுகிற இழப்பைப்பற்றிதான் ஆளும் வர்க்கம் கவலை கொண்டதே தவிர மக்களைப்பற்றியல்ல — அதே நூடுல்ஸ் மீண்டும் வீரியம் அதிகமாக விற்பனையாகிக் கொண்டு இருப்பதும் நம் நாட்டின் எதார்த்தம் —
மீண்டும் – மீண்டும் குழந்தைகளுக்கான பவுடர் –ஆயில் –எண்ணெய் போன்றவற்றை தயாரிக்கின்ற பிரபல கம்பெனியின் வண்டவாளம் சில தினங்களுக்கு முன் கூட வெளிவந்ததும் அதுபற்றி கவலைகொள்ள நாதியற்று கிடக்கின்ற நாட்டில் — எதை சொல்லி யார் கேட்பது ..? — அனைத்திலும் போலிகள் — கண்டுகொள்ள ஆட்கள்தான் இல்லை …
விளம்பரங்களில் ஆஹா ஓகோ என்று போடுகின்ற நிறுவனங்கள் — அந்த விளம்பரத்தின் கீழே கண்ணுக்கு புலனாகாத சிறிய எழுத்துக்களில் போடுவதை யாரும் படித்து அதன் தரத்தை தெரிந்துகொள்ள கூடாது என்கிற நோக்கில் கவனமாக இருப்பதை பற்றி அரசு கேட்குமா … ? வெள்ளையே விஷமா அல்லது அதைப்பற்றி தெரிந்தும் கவலைகொள்ளாத ஆளுவோர்கள் விஷமா …?
சில கேள்விகள் –
(விரிவான பின்னூட்டத்திற்காக, நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…)
1) கோதுமையின் தவிடு நீக்கப்பட்ட – மாச்சத்து கொண்ட வெள்ளைப்பகுதி –
பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக
மாற்றப்படுகிறது…
இந்த பென்சோயில் பெராக்சைடு – சீனா, ஐரோப்பிய யூனியன் (பிரிட்டன் உட்பட)
நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
– அப்படியானால், அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் ரொட்டி, பிஸ்கட், பிரெட்,கேக் –
போன்றவற்றில் மைதா பயன்படுத்தப்படுகிறதா இல்லையா…?
உண்டு என்றால், அங்கே பென்சோயில் பெராக்சைடு தவிர்த்த மைதாவை எப்படி
தயாரிக்கிறார்கள்….? இல்லை என்றால், மைதாவுக்கு பதிலாக வேறு எதைப்பயன்படுத்துகிறார்கள்…?
அதே முறையை இங்கும் கடைபிடிக்க முடியாதா…?
———–
2) தென்னிந்தியாவில் கோதுமைக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா
தயாரிப்பதாக கூறப்படுகிறதே…
இங்கே பொதுவாக, உணவகங்களில் பரோட்டா தயாரிக்க எந்த மைதாவை பயன்படுத்துகிறார்கள்…?
கோதுமையா அல்லது மரவள்ளிக்கிழங்கா…?
———–
3) உணவு பாதுகாப்பு முறைகள் – மத்திய அரசு, மாநிலஅரசு இரண்டுக்கும் பொதுவான (concurrent list ) அதிகாரங்களுக்கு உட்பட்டவை.
மாநிலங்கள் தங்களுக்கு தேவைப்படும் சட்டங்களை இயற்றிக்கொள்ள முடியும்…
தமிழ்நாட்டில் – பென்சோயில் பெராக்சைடு பயன்படுத்தப்படும் “மைதா”வுக்கு
தடைவிதித்தால் என்ன….?
4) இதுவரை யாராவது தனிநபர்களோ, பொதுநல அமைப்புகளோ –
இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு போயிருக்கிறார்களா…?
– இது குறித்து மேல் விவரங்கள் இருந்தால், பின்னூட்டங்களின் மூலம் தர,
நண்பர்களை வேண்டுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
The following article has been taken from Internet and checked the information with many sites and found to be corroborative I am supporting manufactured with maida. Maida is pure carbohydrates with no fibre which is not good for health especially for diabetics. It’s better to avoid maida and use whole wheat flour which contains fiber: Alloxan is a compound that can indeed destroy cells in the pancreas and cause diabetes in rats. Researchers use it to induce the disease so they can study treatments. But this compound, which is synthesized in the lab for medical research, has no other commercial application. It most certainly is not used to bleach flour. It may however be formed in small amounts in flour during the bleaching process. Milled flour is yellow due to the presence of compounds called xantophylls. If the flour is allowed to stand exposed to air, the xantophylls react with oxygen and the flour turns white. But this is not a commercially viable process and the industry therefore relies on chemical bleaching commonly using chlorine, chlorine dioxide or potassium bromate. Bleaching also improves the properties of the flour so that its gluten proteins form more elastic doughs.
One of the possible minor side products of xantophyll oxidation is alloxan. It may therefore conceivably be found in small amounts in flour. There is no available research that shows trace amounts are a problem or that alloxan builds up in the body. The amounts, if present at all, must be small because xantophylls themselves only occur to the extent of 1 microgram per gram of flour. Basically then the suggestion that alloxan is used to bleach flour is absurd
The following article has been taken from Internet and checked the information with many sites and found to be corroborative I am not supporting products manufactured with maida. Maida is pure carbohydrates with no fibre which is not good for health especially for diabetics. It’s better to avoid maida and use whole wheat flour which contains fibre.
rramanisankarR. RAMANI SANKAR,
உங்கள் விரிவான தகவலுக்கு மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்