இப்படி மெழுகுச்சிலை செய்து கொள்வது அவஸ்தையா…? அல்லது ஆனந்தமா …?



என்ன கொடுமை சார் இது…
சிலையை பார்க்கும்போது ஆனந்தமாக இருந்தாலும் –

மெழுகுச்சிலை செய்து கொள்வது எவ்வளவு அவஸ்தையாக
இருக்குமென்று கீழேயுள்ள வீடியோவை பார்த்தால் புரியும்.

செயற்கையாக சிரிக்க வைத்து பல்லின் அளவுகளை எல்லாம்
எடுத்து படாதபாடு படுத்துகிறார்களே…..

பாவம் – மோடிஜியை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாமா … ?


( இதில் உள்ள சில தகவல்களுக்காக – நன்றி பிபிசி.காம் )

—————————————————————————————————————

கீழேயுள்ள இந்த காணொளி 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில்
எடுக்கப்பட்டது. மேடம் தசெளட்ஸ் வேக்ஸ் அருங்காட்சியகத்தை
சேர்ந்த குழுவினர் தங்களின் அருங்காட்சியகத்தில் அமைத்து
வருகின்ற மோதியின் வேக்ஸ் சிலையின் மாதிரிக்கு, அளவுகள்
மற்றும் பிற விவரங்களை எடுப்பதற்கு மோதியின் இல்லத்திற்கு
வந்திருந்தபோது இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது.

மேடம் தசெளட்ஸ் வடிவத்தையும் இந்த காணொளியில்
காணலாம்.இந்த காணொளி மேடம் துசாத்தின் யுடியூப் பக்கத்தில்
உள்ளது.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி லண்டன்
மேடம் தசெளட்ஸ் அருங்காட்சியகத்தல் மோதியின்
வேக்ஸ் சிலை நிறுவப்பட்டது….

prime minister narendra modi joins the world leaders
at Madame Tussauds London

பின் குறிப்பு –

இந்த இடுகையை எழுதி முடித்து, பதிவிடும் முன்னர்
ஒரு தடவை படித்தபோது, எனக்குள் ஒரு சின்ன கேள்வி
எழுந்தது…. முதலில் அதையும் இங்கே எழுதி விடலாமென்று
நினைத்தேன்.

பிறகு, வாசக நண்பர்கள் யார் மனதிலாவது அதே
கேள்வி எழுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போமே
என்று தோன்றியது.

எனவே, காத்திருக்கிறேன்…
யாரும் பின்னூட்டத்தில் அந்த கேள்வியை கேட்கா விட்டால்…
பிறகு நான் வருகிறேன் அந்த கேள்வியுடன்… 🙂 🙂 🙂

.
————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இப்படி மெழுகுச்சிலை செய்து கொள்வது அவஸ்தையா…? அல்லது ஆனந்தமா …?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்துக்குச் சென்றிருக்கிறேன். பல மெழுகுச் சிலைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். இந்தியர்கள் சிலரின் சிலை, எதிர்பார்த்த மாதிரி அவ்வளவு சரியாக இல்லாததையும் உணர்ந்திருக்கிறேன் (நேட்டிவிட்டி). ‘ஆஸ்கார் விருது’ என்பதையே ஒரு மார்கெட் வேல்யூ என்பதுபோல் ஆகிவிட்டதுபோலவே, இந்த அருங்காட்சியகத்துல என் சிலையும் இடம் பெற்றது என்பது ஒருவித கெளரவம்தான் (அதில் அர்த்தம் இல்லாவிடினும்). அருங்காட்சியகத்துக்கு, ‘புதிது புதிதாக சிலைகளைச் செய்வதன்மூலம் புதுப் பார்வையாளர்களை வரவழைக்கும் முயற்சிதான்’. காலாவதி ஆகிவிட்டால் அகற்றிவிடுவார்கள்.

    பார்வையாளர்களும், அந்தச் சிலைகளோடு படம் எடுத்துக்கொள்வார்கள். (ஆனா படங்கள் மிகச் சரியாக எடுக்க முடியாது என்பது வேறு விஷயம். ரிஃப்ளெக்‌ஷன், சூழல், லைட்டிங்க்ஸ் இதெல்லாமும் காரணம்.

    சச்சின், அமிதாப் , ஒபாமா போன்றவர்கள் நான் பார்த்தவர்களில் சிலர். இந்திரா காந்தி-நான் நினைத்ததுபோல் இல்லை. காந்தியும் அதே கதைதான். (கொள்ளையர்கள், சர்வாதிகாரிகள் சிலைகளும் அங்கு இருக்கின்றன)

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    நரேந்திர மோதி தன்னை அழகுப்படுத்த மாதம் ’80 லட்சம் ரூபாய் செலவிட்டது’ உண்மையா ..? என்கிற சர்ச்சைக்கான விடைதான் இந்த ” மெழு சிலை ” செய்வதற்கான முன்னேற்பாடுகள் பற்றிய இடுகை …! — அய்யாவைப்பற்றி எழுதினால் மட்டும் போதுமா இன்று …?

    அன்னையர் தினத்தில் ‘ அம்மா ” இல்லாமலா …?

    // அ……..ம்……….மா…!!!
    Posted on மே 12, 2018 by vimarisanam – kavirimainthan // சென்ற வருட இடுகையில் …… இந்த வரிகள் நிறைய நண்பர்கள் மற்றும் எம் வாழ்க்கையிலும் கூட என்பது தான் ;— // என் துரதிருஷ்டம்….. அம்மா மறையும் வரையில், அவரை வசதியாக வைத்துக்கொள்ளும் நிலையில் நான் இல்லை…. சொல்லப்போனால், ரிடையர் ஆனபிறகு தான் நான் ஓரளவு வசதியாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்…
    ( முக்கிய காரணம் – தேவைகள் குறைந்து விட்டன…!!! ) //

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      மெழுகுச்சிலை’யை, நேற்றிரவே தயாரித்து விட்டேன்.
      அன்னையர் தினத்தைப்பற்றி, என்ன எழுதலாமென்று
      யோசித்துக் கொண்டிருந்தேன்.

      சென்ற வருடம் எழுதியதை எடுத்துப் பார்த்தேன்.
      அதைவிட முழுமையாக மீண்டும் எழுத முடியாதென்று
      தோன்றியது…

      இன்று மதியத்திற்கு மேல் அதை மறுபதிவு போடலாமென்று
      நினைத்துக் கொண்டிருந்தேன்…

      நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்… மிக்க நன்றி.

      மற்ற நண்பர்களுக்கு –
      சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று வெளியான
      ” அ……..ம்……….மா…!!! ”
      இடுகையின் லிங்க் –

      https://vimarisanam.wordpress.com/2018/05/12/%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/

      இதற்கு அடுத்த இன்னொரு இடுகையும்
      பதிவு செய்திருந்தேன்… இதுவரை படிக்காதவர்கள்
      அதையும் அவசியம் படிக்க வேண்டும்…
      “பெற்றால் தான் அம்மாவா என்ன …?”

      அதற்கான லிங்க் –

      https://vimarisanam.wordpress.com/2018/05/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9/

      – அன்னையர்க்கு என்று மட்டுமல்லாமல் –
      அனைத்து பெண்களுக்கும் எனது
      உளமார்ந்த வாழ்த்துகள்…
      நீங்கள் இல்லையேல் – இந்த உலகம் ஏது…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஐயா,

    புகழுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் எதையும் தாங்கிக் கொள்வார்கள், மலை உச்சியில் இருந்து குதிக்க சொன்னாலும் சரியே.

    அப்படியா பட்டவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொறுட்டேயல்ல.

    இது உங்கள் மனதில் தோன்றிய அதே கேள்வியாக இருக்க வேண்டும் என்று இல்லை, அது நிச்சயம் முடியாது, நெருக்கமாக இருக்கா…?

    அண்மை பேட்டியொன்றில் பிரதமர் மோடி அவர்கள் கூறியதன் மொழி பெயர்ப்பு கீழே,

    /// பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9-9.30 மணிவாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டும் இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன். எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது. தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது. நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன். இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனல் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள் ///

    இது ராகுல் காந்தி நேற்று ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தவறை சரி செய்தார் என்று செய்தி வந்ததற்கு பதிலாக தன்னை முன்னிலை படுத்துவதற்காக கொடுத்த பேட்டியாக இருக்கும் என்று இன்று சமூகவளை தளங்களில் பேசுபடு பொருளாக இதுதான் இருக்கிறது.

    நாமும் நம் பிரதமரின் தொழில் நுட்பம் ஞானம் கண்டு வியந்தோதுவோம்.

    இதையும் புகழுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் என்பதையும் தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டாம்.

    நீங்கள் ஆன்டி இன்டியனாக கூடும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அறிவழகு,

      இந்த உரையை நான் நேரடியாக தொலைக்காட்சியில் கேட்டேன்.

      கூடவே, கூட்டத்தைப்பார்த்து இன்னொரு கேள்வியையும் கேட்டார் –

      “எதிரே ஒரு தீவிரவாதி வந்து நிற்கும்போது,
      அவனை சுடுவதற்கு கூட நான் தேர்தல் கமிஷனிடம்
      அனுமதி வாங்க வேண்டுமா…? ”

      தமிழில் ஒரு வார்த்தை உண்டு. உங்களுக்கும்
      தெரிந்திருக்கும்….

      “பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் –
      புளிய மரத்தில் வாசம் செய்ய வேண்டியிருக்கும்…”

      “சாரா ஜஹான் சே அச்சா…
      ஹிந்துஸ்தான் ஹமாரா…”

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        சாரே ஜஹான் சே அச்சா பாடலை – இயற்றியவர் –
        முஹம்மது இக்பால் என்கிற உருது கவிஞர் –
        அதன் பொருள் ஆங்கிலத்தில் –

        Better than the entire world, is our Hind,
        We are its nightingales, and it (is) our garden abode

        If we are in an alien place, the heart remains in the homeland,
        Know us to be only there where our heart is.

        That tallest mountain, that shade-sharer of the sky,
        It (is) our sentry, it (is) our watchman

        In its lap where frolic thousands of rivers,
        Whose vitality makes our garden the envy of Paradise.

        O the flowing waters of the Ganges, do you remember that day
        When our caravan first disembarked on your waterfront?

        Religion does not teach us to bear animosity among ourselves
        We are of Hind, our homeland is Hindustan.

        In a world in which ancient Greece, Egypt, and Rome have all vanished
        Our own attributes (name and sign) live on today.

        There is something about our existence for it doesn’t get wiped
        Even though, for centuries, the time-cycle of the world has been our enemy.

        Iqbal! We have no confidant in this world
        What does any one know of our hidden pain?

        …..

        …..

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        ஐயா,

        தங்கள் மனதில் தோன்றிய கேள்வி என்ன என்று சொல்ல வில்லையே.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          அறிவழகு,

          மிகவும் சாதாரணமான கேள்விகள் தான்…
          Just out of curiosity .. 🙂 🙂
          விடை தெரிந்தவர்கள் யாரும் பின்னூட்டத்தின் மூலம்
          தெரிவிக்கலாம்…!

          1) மோடிஜியின் மெழுகுச்சிலையை தயாரிக்கும்படி
          யார் சொல்லி இருப்பார்கள்…?
          -(who gave the orders …?)

          2) ஒரு மெழுகுச் சிலைக்கு சுமார் 1,50,000 பவுண்ட்-ஸ்டெர்லிங்
          என்கிற அளவில், 4 சிலைகளுக்கு சுமார் ஆறு லட்சம்
          பவுண்ட்-ஸ்டெர்லிங் அளவிற்கு பில் வந்திருக்கும்.

          இந்த bill-ஐ யார் settle செய்திருப்பார்கள்…?

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

          • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

            அம்மாடியோ…..!

            மொத்தம் சுமார் 54 கோடி இன்றைய எக்ஸேன்ஜ் ரேட்டுக்கு.

            யாராக இருக்கும்…

            Corporate நண்பர்களில் ஒருவராகத்தான் இருக்கனும்.

          • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

            ஒருத்தருக்கு நாலு ஏர்போர்ட் கிடைத்துள்ளது!
            இன்னொருத்தருக்கு ஃப்ரான்ஸ் நாட்டு வரிகளில் விலக்கு!!
            அப்புறம் கவலை எதுக்கு?
            இருக்கும் மேலே கேள்வி கேட்டாதான் இருக்கவே இருக்கு எஸ்பிஐ பாண்டு!
            இப்படியெல்லாம் கேள்வி கேட்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள் ஐயா!
            வாழ்க வளமுடனும் நலமுடனும்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      @அறிவழகு – //நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன். இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனல் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். // – நல்லவேளை… எனக்கு ஹிந்தி தெரியாது. இப்படிப்பட்ட பேத்தலை பிரதமர் பேசினார் என்பதை நினைக்கவே அருவருப்பாக இருக்கு. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

      பிரதமர், இராணுவத் தலைமைக்கு, “எது சரியான முடிவோ அதை எடுங்கள், உங்களுக்கு மத்திய அரசின் உறுதுணை உண்டு” என்று சொன்னார் என்பதைத்தான் நான் பேப்பரில் அப்போது படித்தேன். மோடி அவர்களின் தைரியத்தையும் உடனுக்குடன் முடிவெடுக்கும் திறனையும் மனதில் பாராட்டினேன்.

      ஆனால், அதனை வைத்து அவர் பேசிய பேச்சுக்களை (வென்றுவிட்டோம், அனைவரையும் அழித்துவிட்டோம் போன்றவை….) நான் எப்போதும் ரசித்ததில்லை. ராணுவச் சண்டையில் வெற்றி தோல்வி சகஜம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.