…………………………………

……………………………………
கருணையின் வடிவம் –
இந்தக் கோடை வந்ததிலிருந்து பகவான் எப்பொழுதும் ஜீபிலி ஹாலிலேயே (கீற்றுக் கொட்டகை) இருந்து வருகிறார்….
வெயில் அதிகமாக இருக்கும் வேளையில் பணியாளர்கள் –
வடக்குப் பக்கம் பந்தலின் கீழ் குரோட்டன்ஸ் நடுவில் பகவானுடைய சோபாவை நகர்த்தி சுற்றிலும் வெட்டிவேர்த் தட்டிகளைக் கட்டி, தண்ணீர் தெளிக்கிறார்கள்….
இன்று என்னவோ நான் பிற்பகல் இரண்டு மணிக்கே போனேன். பகவான் சோபா அங்கேதான் இருந்தது. வலை போன்ற வெள்ளையான ‘ மேட்டி’ த் துணி யொன்றைத் தலையையும் உடலையும் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார் பகவான்…
கிருஷ்ணசுவாமியைத் தவிர வேறெவரும் இல்லை. பன்னீர்ச் சொம்பை கையில் வைத்துக் கொண்டு அவர் பகவானுக்குப் பின்னால் நின்று கொண்டு , பகவான் மீது பன்னீரைப் பூப்போல் தெளித்துக் கொண்டிருந்தார்…
பகவான் ‘ ஆஹாஹா ’ என்று அந்தப் பன்னீரால் தேகம் முழுவதும் துடைத்துக் கொண்டார்…
நான் வருவதைப் பார்த்து ,
“இதோ இவர்கள் எனக்கு அபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் பார்த்தேளா? ” என்றார்…
நனைந்த மேட்டித் துணியால் முகமெல்லாம் மூடிக் கொண்டு,
“இதோ இந்த ஈரத்துணியைப் போர்த்தியிருக்கிறது. சுற்றிலும் தட்டி கட்டித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். நீலகிரி மேலிருப்பது போலிருக்கிறது ” என்றார் பகவான்…
சோபாவிற்குச் சற்றே அருகில் போனேன். குளுமையாக இருந்தது. “வெயிலிலிருந்து வந்ததினால் குளுமை நன்றாகத் தெரிகிறது”
என்று சொல்லித் திரும்பி வந்து என் இடத்தில் உட்கார்ந்தேன். “ஆமாம் ” என்றார் பகவான்…
பகவானுக்குப் பழைய சம்பவம் ஏதோ நினைவுக்கு வந்ததால் கொஞ்சம் யோசனை செய்து பிறகு இவ்வாறு சொன்னார் ,
“நான் விரூபாக்ஷ குகையில் இருக்கும்போது வெயில் காலத்தில் தண்ணீர் வசதி இல்லாததினால் மாமரத்துக் குகையில் போய்த் தூங்குவோம். பெரிய பெரிய புல்லுக்கட்டுகளைத் தலைமேல் வைத்துக் கொண்டு ஹரிஜன ஸ்த்ரீகள் சில பேர்கள் களைத்துப் போய்த் தண்ணீருக்காக வருவார்கள்.
பாவம்… காலையில் கஞ்சிகுடித்து விட்டு மலையேறினால் நடுப்பகல் வரை அவ்வளவு புல்தான் சேரும். வந்ததுமே புல்கட்டுகளைக் கீழே போட்டு விட்டுக் குனிந்துகொண்டு ‘சாமி , சாமி முதல்லே இந்த முதுகுலே சொம்புத் தண்ணீ கொட்டுங்க ’ என்பார்கள். நான் அங்கு திண்ணைமேல் நின்று கொண்டு ஒவ்வொருவர் முதுகிலேயும் ஓரோர் சொம்புத் தண்ணீர் கொட்டினால் ’ அம்மாடி , எத்தினி சுகமா இருக்கு சாமி? ’ என்று களைப்பாற்றிக் கொண்டு , இரண்டு கைகளையும் ஏந்தி வயிறு நிறையத் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு செடியின் நிழலில் கொஞ்சநேரம் உட்கார்ந்து விட்டுப் போவார்கள். அந்தச் சுகம் அவர்களுக்குத் தான் தெரியும். வெயிலிலிருந்து வந்தவர்களுக்குத்தான் நிழலின் குளுமை தெரியும். ”
“பகவானேயா தண்ணீர் கொட்டினது ? ’’ என்றேன்.
“ஆம் , நான்தான்… அவர்கள் வருவார்களென்று அந்த வேளைக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருப்பேன். என்ன பண்ண முடியும்? ” என்று சொல்லும்போதே பகவான் குரல் தழுதழுத்தது. கருணை பொங்கும் குரலில் , “ அவர்கள் மலைமேலுள்ள முலைப்பால் தீர்த்தத்தைத் தொடக்கூடாது. மலைமேல் வேறெங்கும் தண்ணீர் கிடையாது.
பதைபதைக்கும் வெயில். புல்லை விற்றால்தான் கஞ்சி கிடைக்கும். அவர்கள் குழந்தை குட்டிக்காரர்கள். அவசரமாக வீடுபோய்ச் சேரணும். என்ன பண்ணுவார்கள் பாவம் ? ‘ குகைக்குப் போனால் அந்த சுவாமி தண்ணீர் ஊற்றுவார் ’ என்னும் நம்பிக்கையில் வருவார்கள். எங்களுக்கு அப்போதெல்லாம் சமையல் கிடையாது. அப்படி எப்போதாவது சாதம் வடித்தோமென்றால் நிறையத் தண்ணீர் விட்டுக் கஞ்சி வடிப்போம். அந்தக் கஞ்சியை ஒரு பானையில் விட்டுத் தாராளமாகத் தண்ணீர் கலந்து உப்புப் போட்டு வைப்பேன். சுக்கு இருந்தால் போடுவேன். அவர்கள் வரும்போது அந்தக் கஞ்சி தண்ணீர் குளிர்ந்து இருக்கும். ஒவ்வொருவருக்கும் குவளை விட்டால் கையேந்தி அம்ருதம்போல் குடித்துவிட்டுப் போவார்கள். அந்தக் கஞ்சி ருசி , அந்தத் தண்ணீர் அருமை அவர்களுக்குத்தான் தெரியும் ” என்று சொல்லி மேலே சொற்கள் வராமல் மௌனம் ஆகிவிட்டார் பகவான்.
நானும் அந்தக் கருணாமூர்த்தியைப் பார்த்துக் கொண்டே கொஞ்ச நேரம் அப்படியே பேச்சற்று இருந்து விட்டேன். பிறகு இந்த விஷயம் சரித்திரத்தில் இல்லையே என்றேன். “ இல்லை , எதற்கென்று நான்தான் சொல்லவில்லை ” என்றார் பகவான். ‘ இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றனவோ ? ’ என்றேன்.
“ உம் , உம் ” என்று மௌனமாக யிருந்தார் பகவான்.
……………………………………………………..

…………………………………………………………
கடைசி நாள் …..
ரமண மகரிஷி இறந்து கொண்டிருந்தார்…
ஏப்ரல் 14, 1950 –
நுரையீரலில் உள்ள நெரிசலைப் போக்க,
ஒரு மருத்துவர் ரமண மகரிஷிக்கு ஒரு நோய்த்தடுப்பு மருந்தைக் கொண்டு வந்தார்…
ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்…
அது இனிமேல் தேவையில்லை…. இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் கூறினார்…
அடுத்த நாள் அவர் இறந்தார்…
சூரியன் மறையும் நேரத்தில், மகரிஷி தன்னை, உட்கார வைக்கச் சொன்னார்…
ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு தொடுதலும் வலியுடையது என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர்….
ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர் அவர்களிடம் கூறினார்….
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்….
மிகவும் வேதனையாக இருந்தது….
தண்ணீர் குடிப்பது கூட சாத்தியமற்றது….
எதையும் சாப்பிடுவது சாத்தியமில்லை…. தலையை கூட அசைக்க முடியாது….
ஒரு சில வார்த்தைகள் சொல்வது கூட
மிகவும் கடினமாக இருந்தது….
அடியவர்களில் ஒருவர் அவர் தலயைத் தாங்கி அமர்ந்திருந்தார்….
ஒரு மருத்துவர் அவருக்கு ஆக்ஸிஜனைக் கொடுக்கத் தொடங்கினார்….
ஆனால் அவர் வலது கையை அசைத்து –
அவரை நகரும்படி கையை அசைத்தார்….
எதிர்பாராத விதமாக, மண்டபத்திற்கு வெளியே உள்ள வராண்டாவில் அமர்ந்திருந்த பக்தர்கள் குழு, அருணாசல சிவா என்ற ரமண மகரிஷிக்கு மிகவும் பிடித்த பஜனைப் பாடலை பாடத் தொடங்கியது….
அவருக்கு அந்த இடம்,
அருணாச்சலத்தை – மிகவும் பிடித்திருந்தது….
அவர் வாழ்ந்த மலைக்கு ‘அருணாசலம்’ என்று பெயர்….
பஜனை நடந்தது…. பஜனைக்கு ஒரு துதி,
மலைக்கு ஒரு துதி….
அதைக் கேட்ட மகரிஷியின் கண்கள் திறந்து பிரகாசித்தன….
அவர் விவரிக்க முடியாத மென்மையுடன் ஒரு சுருக்கமான புன்னகையை வழங்கினார்…..
அவர் கண்களின் வெளி ஓரங்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது….
யாரோ அவரிடம், “மகரிஷி, நீங்கள் உண்மையிலேயே எங்களை விட்டுப் பிரிந்து செல்கிறீர்களா?” என்று கேட்டார்கள்….
அப்போது பதில் சொல்வது அவருக்கு – கடினமாக இருந்தது….
ஆனால் அவர் இதை சொல்லியிருந்தார்…
“நான் எங்கும் போகவில்லை….
நான் எங்கு செல்ல முடியும்?
நான் எப்போதும் இங்கேயே இருக்கிறேன்”….
இன்னும் ஒரு மூச்சுதான்…. அதற்கு மேல் இல்லை….
எந்த போராட்டமும் இல்லை…. எந்த பிடிப்பும் இல்லை….
மரணத்தின் வேறு எந்த அறிகுறியும் இல்லை….
அடுத்த மூச்சு வரவில்லை……!!!
அவர் பரிநிர்வாணம் அடைந்தார்…
அனைவரும் காண ஜோதியாய் அருணையில் கலந்தார்……
( உதவி – வலைத்தளம் -பல இடங்கள் ..…!!! )
……………………………………………………………………………………………………………………………



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…