……………………………………………………

……………………………………………………
வித்தியாசமான விஷயம் ஒன்று கிடைத்தது ….. கீழே –
………………………………..
15,16ம் நூற்றாண்டுகளில் மாதக்கணக்கிலான கடல் பயணங்களுக்கு எப்படி உணவை கொண்டுபோவார்கள் என படித்தேன்…
மரபீப்பாய் தான் அன்றைய பிளாஸ்டிக் பாட்டில். அதில் வெடிமருந்து, தண்ணீர், உணவு எல்லாம் கொண்டுபோவார்கள்.
ஒரு மரபீப்பாயில் கீழே ஏராளாமான உப்பை இடுவார்கள்.
அதன்பின் 440 கிராம் பிரஷ் ஆன பன்றிக்கறியின் மேல் ஏராளமான உப்பை தடவி, அந்த பீப்பாயினுள் இடுவார்கள். அதன்மேல் வரிசையாக உப்பிட்ட பச்சை பன்றிக்கறி துண்டுகளை அடுக்கிக்கொண்டே வருவார்கள்
கடைசியாக காற்றுபுகாமல் மூடி, ஒரு சின்ன ஓட்டை வழியே நிறைய உப்புகலந்த நீரை ஊற்றி பீப்பாயில் காற்றே இல்லாமல் நிரப்புவார்கள். அதன்பின் கப்பலின் ஸ்டோரேஜ் அறையில் வைத்துவிட்டால் மாதக்கணக்கில் தாங்கும்
இத்துடன் கோதுமையில் சுட்ட பிஸ்கட்டுகள் ஏராளமாக வழங்கப்படும். அதனுடன் பட்டாணிகளும் வழங்கப்படும்.
கப்பலில் இவற்றை உண்ணவேண்டுமெனில் முதலில் ஒரு பீப்பாயை திறந்து உப்பிட்ட போர்க்கை எடுக்கவேண்டும். அதை மஸ்லின் துணியில் கட்டி கடலுக்குள் கயிற்றை கட்டி போடுவார்கள். அதில் இருக்கும் உப்பு எல்லாம் அகன்றபின்னர் அதை நீரில் பட்டாணியுடன் போட்டு சூப் தயாரிப்பர்கள்
உப்பு, பட்டாணி, போர்க் போட்ட சூப் பிஸ்கட்டுடன் தினமும்.
இதை சாப்பிட்டுதான் ஐரோப்பிய மாலுமிகள் ஒட்டுமொத்த உலகையும் வலம் வந்து பிடித்தார்கள்
ஆனால் இதில் வைட்டமின் சி இல்லை என்பதால் ஸ்கர்வி எனும் வியாதி வந்து பல்லாயிரம் மாலுமிகள் நீண்ட கடற்பயணங்களில் உயிரிழந்தார்கள்
ஆனால், இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ஸ்கர்வி வராமல் தடுக்கும் ஆற்றல் நார்த்தங்காய் மற்ற்ம் எலுமிச்சம்பழ ஊறுகாய்க்கு உள்ளதை கண்டுபிடித்திருந்தார்கள்.
குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்ற சோழர் கால நாவாய்களில் “காய்கறிச் சாடிகள்” இருந்தன. இதில் இருந்த எலுமிச்சம்பழம் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய்கள் கடலில் வரும் தலைசுற்றல் மற்றும் ஸ்கர்வி ஆகியவற்றை தடுத்தன. கல்வெட்டுகளில் பயண உணவாக “நார்த்தங்காய் இட்ட சோறு” அல்லது ஊறுகாய் பற்றிய மறைமுகக் குறிப்புகள் உண்டு.
சிறுபாணாற்றுப்படை பயணிகளின் உணவாக அவல் மற்றும் பருப்பு வகைகள் இருந்ததைச் சொல்கிறது. பட்டினப்பாலை மற்றும் மதுரைக்காஞ்சி ஆகியவை புகார் (பூம்புகார்) போன்ற துறைமுக நகரங்களில் மாலுமிகள் உண்ட உணவுகள் பற்றி விவரிக்கின்றன. கடலோரப் பகுதிகளில் கருவாடு மற்றும் உப்பிட்ட இறைச்சி பயன்பாடு இருந்ததை இவை உறுதிப்படுத்துகின்றன
கப்பல்களில் உணவைப் பதப்படுத்த புளி அதிகம் பயன்படுத்தப்பட்டது. இது ஐரோப்பியர்களின் “வினிகர்” முறைக்கு நிகரானது, ஆனால் அதிக சுவையானது.
எலுமிச்சம்பழ ஜூஸை குடித்தால் ஸ்கர்வி குணமாகும் என்பதை கண்டறிய ஐரோப்பியர்களுக்கு 18ம் நூற்றாண்டு ஆனது. அதற்குள் இந்தியாவையே அவர்கள் பிடித்து இருந்தார்கள். ஆனாலும் தான் பிடித்த மண்ணின் அறிவியலை அவர்கள் சரியாக கற்றுக்கொள்ளாததால் உயிரிழப்புகள் தொடர்ந்தன… ( நன்றி – நியாண்டர் செல்வன்… )
……………………………………………………………………………………………………………………………………………………



https://tnrd.tn.gov.in/project/go_files/3_753_2024_2890_SGS_2_2_2024_1_en.pdf