……………………………………………….

………………………………………………….
வலைத்தளத்தில் திரு.ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு அரசியல் கட்டுரையை பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்ததால், எழுதியவருக்கு நன்றி சொல்லிகொண்டு, கீழே பதிப்பிக்கிறேன்.
………………………………………………………………………………………..
திமுகவின் தூண்கள் நான்கு :
1. பிராமண எதிர்ப்பு
2. ஜாதி அரசியல்
3. கூட்டணி கட்சிகள்
4. மைனாரிட்டி வாக்குகள்.
இந்த நான்கு தூண்களையும் ‘ண்ணா உடைத்து விட்டார்.
நேரடியாக ஹிந்து மத எதிர்ப்பு செய்தால் ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்கிற கணக்கில் தான்
ஹிந்து என்றால் பார்ப்பான்….
சனாதனம் என்றால் பார்ப்பான் …
சம்ஸ்கிருதம் என்றால் பார்ப்பான் …
என்று உருட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு வேளை தீம்கா வெற்றி பெற்று ஒலக்கை போன்றவர்களுக்கு சீட்டு கொடுத்து வெற்றி பெற்று அவர்கள் அமைச்சரானால் கூட பிராமணர்களுக்கு எதுவும் நன்மை செய்யப்போவதில்லை. கெடுதல் தான் செய்வார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு கூட சீட் கொடுக்க கூடாது என்கிற அளவிற்கு தீண்டாமையை கடைப்பிடித்த இயக்கம் தான் தீம்கா.
இதில் அதீம்காவும் சளைத்ததில்லை. எஸ்.வி.சேகர், மைத்ரேயன் போன்ற பிராமணர்களை எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆக்குவார்களே தவிர அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் ஜெ அம்மையாரை இயக்கிய நட்டு, கட்டுமர குடும்பத்தின் பிஸினஸ் பார்ட்னர்….
இந்த கணக்கில் தான் 2021 தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒரே ஒரு பார்ப்பான் கூட இல்லாத சட்டமன்றம் அமைந்திருக்கிறது என்று விட்டது தீம்கா.
இப்போது இரண்டு பார்ப்பான்கள் வெற்றி பெற்றதோடு இல்லாமல் மந்திரிகளாகவும் ஆன பிறகு அல்லக்கை இனமான காவலர் கி. ஓஷி ரைஸை விட்டு குலைக்க வைக்கிறார்கள்.
இது நிச்சயமாக திராவிட வேரில் ஆசிட் ஊற்றப்பட்ட நிகழ்வு. இனி பார்ப்பான் என்கிற வார்த்தையை உபயோகித்தால் தீம்காவிற்கு ஓட்டு போடும், நட்டநடு சென்டர்கள் கூட காறி துப்புவார்கள்.
அடுத்ததாக பெரியார் தான் ஜாதியை ஒழித்தார் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதி அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு சீட்டு கொடுப்பார்கள்.
அது தவிர வைட்டமினை தண்ணீராக இறைக்கும் கேடு கெட்ட அரசியல். அந்த அரசியலை தான் இந்த தேர்தலில் தவேக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
வேட்பாளரின் ஜாதி, மதம் எதுவும் தெரியாமல் தீம்கா கொடுத்த பணத்தை முழுமையாக வாங்கி கொண்டு விசிலுக்கு ஓட்டு போட்டதன் மூலம் தீம்காவின் இன்னொரு ஆணி வேரான ஜாதி அரசியலை துவம்சம் செய்திருக்கிறது தவேக.
இனி இரு திராவிட கட்சிகளிலும் இருக்கும் மிச்ச சொச்ச இளைஞர்கள் ஜாதிகளை கடந்து சீட்டு கேட்பார்கள்.
தீம்காவின் மூன்றாவது தூணாக இருப்பது கூட்டணி கட்சிகள் தான். அதனால் தான் ஒரே ஒரு தேர்தலில் கூட கூட்டணியில்லாமல் அவர்கள் போட்டியிட்டதில்லை.
இப்போது பிரேமலதா, பெட்டி கோவாலு தவிர்த்து அனைவரும் அந்த பக்கம் போய் விட்டார்கள். அடுத்த தேர்தலுக்கு அவர்கள் திரும்பி வந்தாலும் கணிசமான சீட்டுகளும் மந்திரிசபையில் இடமும் கேட்பார்கள். இதன் மூலம் அவர்களை சேர்த்து கொண்டாலும் ஆப்பு -சேர்த்து கொள்ளாவிட்டாலும் ஆப்பு.
தீம்காவின் நான்காவது தூணாக இருப்பது லவ்வு மார்க்கம் அன் பீசு மார்க்கம். பீசு மார்க்கத்திலேயே கணிசமான இளைஞர்கள் விசிலுக்கு குத்தியிருக்கிறார்கள். சூரியனுக்கு குத்தியவர்கள் கூட விசிலுக்கு குத்தினால் பாஜக உள்ள வந்துடும் என்கிற கணக்கில் தான் குத்தியிருந்தார்கள்.
இப்போது தீம்கா வலுவிழந்து விட்டால் அடுத்த தேர்தலில் ஆட்டோமேடிக்காக விசில் பக்கம் சாய்ந்து விடுவார்கள். லவ்வு மார்க்கத்தை பொறுத்தவரை தங்கள் ஆள் ஒருவர் முதல்வரான பிறகு திராவிடம் எதற்கு அவர்களுக்கு….?
ஆக அதிமுகவால், பாஜகவால், காங்கிரசால் – சாதிக்க முடியாததை அரசியல் கத்துக்குட்டி நடிகர் சாதித்து விட்டார்.
அவரை ஜாதி ரீதியாகவும் திட்ட முடியாது. மதரீதியாகவும் திட்ட முடியாது. அதனால் தான் கண்ணகி, பத்தினி என்று பொத்தாம் பொதுவாக எதிர்மறை அர்த்தத்தில் திட்டி வருகிறார்கள். தீயசக்தியின் முடிவுரையை கூடிய விரைவில் ‘ண்ணா எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.
………………………………………………………………………………………………………………………………



https://tnrd.tn.gov.in/project/go_files/3_753_2024_2890_SGS_2_2_2024_1_en.pdf