தோப்புக்கரணத்தை பார்க்க மிகவும் ஆசை … ஆனால், இந்த மாதிரி சவால் “உரை” கள் … அவருக்கு “உறை” க்குமா….


நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால்
100 தோப்புக்கரணம் போட தயாரா?
மோடிக்கு மம்தா சவால்!

——-

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்
பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான
நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர் மோசமான
முறையில் தவறாக சம்பாதித்து வருகின்றனர் என குற்றம்
சாட்டினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி
இருக்கும் 42 வேட்பாளர்களும் நிலக்கரி சுரங்க மாபியாக்கள்தான்
என்றும், இந்த தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் ஆட்சி கவிந்து
திரிணாமுல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்கள் என்று
மோடி கூறினார்.

இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள
மம்தா பானர்ஜி, திரிணாமுல் வேட்பாளர்கள் மீது மோடி
ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் மோடி எங்கள் வேட்பாளர்கள் 42 பேரை குற்றவாளி என்று
நிரூபித்தால் நான் அவர்கள் 42 பேரின் வேட்புமனுக்களை வாபஸ்
வாங்கிக் கொள்கிறேன்,

ஆனால் அப்படி நிரூபிக்கவில்லை என்றால்
மோடி மேற்கு வங்க மக்கள் முன்பு காதில் கை வைத்து
100 தோப்புக்கரணம் போட வேண்டும்
என சவால் விட்டுள்ளார்.

பாராளுமன்ற அறிக்கையின்படி மேற்கு வங்கத்தில் நாங்கள்
40% வேலையின்மையை குறைத்திருக்கும் நிலையில்,
உங்களால் அதை ஏன் செய்ய முடியவில்லை என்றும்
மம்தா பேனர்ஜி வினவியுள்ளார்.

மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 10 கோடி பேருக்கு வேலை
கொடுப்பதாக கூறினீர்கள், ஆனால்
அந்த வேலைகள் எங்கே என்றும்,

இந்திய வரலாறு குறித்து உங்களால் பேச முடியுமா,
உங்களால் முதலில் பேப்பர், டெலிபிராம்ப்டர் இல்லாமல்
பேச முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இவைகள் குறித்து என்னுடன் நீங்கள் விவாதம்
நடத்த தயாரா என்று பிரதமர் மோடிக்கு,
மம்தா பேனர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Link – http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=494085

———————————————

மேற்கு வங்கத்தில் போட்டியே இல்லாமல் 42 பாஜக
எம்.பி.க்களை பெற இது ஒரு அருமையான சந்தர்ப்பம்…
எனவே, மோடிஜி இந்த சவாலை ஏற்க வேண்டும் என்று
பாஜகவின் இதர தலைவர்கள் (…???)
மற்றும் தொண்டர்கள் வலியுறுத்துவார்கள் என்று
நம்புகிறோம்.

பாஜக பிரதமர் வேட்பாளர் – ” இந்த சவாலை
நான் ஏற்கிறேன் ” என்று அறிவிப்பதையும் –
அதன் விளைவுகளையும் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்…!

வென்றால் பாஜகவின் தேவை நிறைவேறும்…
தோற்றால் – நமக்கு ஒரு
அரிய காட்சி காணக் கிடைக்கும்… 🙂 🙂 🙂

.
——————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தோப்புக்கரணத்தை பார்க்க மிகவும் ஆசை … ஆனால், இந்த மாதிரி சவால் “உரை” கள் … அவருக்கு “உறை” க்குமா….

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    சப்பாஷ் சரியான போட்டி.

    அப்படியே ரஃபேல் சம்பந்தமாக ராகுல் விட்ட சவாலையும் பெரியவருக்கு ஞாபகப்படுத்த வேண்டும். 😁😁😁

    ஏற்பாரா…?

    பாருங்கள் வேறு யாராவது வந்து குண்டக்க மண்டக்க எதையாவது உளரிவிட்டு பதில் சொல்லி விட்டோம் என்பார்கள்.

    ஆனால், தேர்தல் காலம். பார்க்கலாம்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    என்னங்க — நாங்க விராத் கோலியின் ” பிட்னெஸ் சேலஞ் ” என்பதையே — சும்மா ஊதி தள்ளி வீடியோ எடுத்து உலகம் முழுக்க பரப்பன ஆளுங்க — எங்ககிட்டேயே சவாலா …? துக்கடா
    100 தோப்புக்கரணம் என்ன 108 ட்டே போட்டு அசத்திடுவோம்ல்லே — நமக்கு ஒரு
    அரிய { வீடியோ } காட்சி காணக் கிடைக்குமா ….?

  3. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    முறைகேடான நடவடிக்கைகளை தடுத்துநிறுத்த வேண்டிய சௌக்கித்தாரே முறைகேடு நடுக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதை பார்க்கும்போது இந்த சௌக்கிதார் எதற்குமே லாயக்கு இல்லை என்பது புரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.