…
…

…
டெல்லியில் நடந்த பாஜக பேரணியில்
பேசிய “பெருமகனார்” –
“போர்க்கப்பலில் சுற்றுலா சென்ற குடும்பத்தை பற்றி
நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
இதுகுறித்து அதிர்ச்சியடைய வேண்டாம். ஏனென்றால்,
இது நம்முடைய நாட்டிலேயே நடந்துள்ளது. இந்நாட்டின்
பெருமையான ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை ராஜீவ் காந்தி,
அவரது சொந்த டாக்ஸி போல பயன்படுத்தியுள்ளார்….
அச்சமயத்தில் ஐ.என்.எஸ் விராட் கடல்சார் எல்லைப் பகுதிகளை
பாதுகாத்துக்கொண்டிருந்தது. ஆனால் சுற்றுலா சென்றிருந்த
காந்தி குடும்பத்தை அழைத்து வருவதற்காக அக்கப்பல்
அனுப்பப்பட்டது. இதனால் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில்
தள்ளப்பட்டுள்ளதா இல்லையா?” என்று கேள்வியெழுப்பினார்….
அப்போது கூட்டத்தில் கூடியிருந்த பாஜகவினர் ஆர்ப்பரித்தனர்.
————————
குறிப்பிடப்படும் காலத்தில், கப்பற்படையில் vice admiral
அந்தஸ்தில், INS VIRAAT உட்பட அந்த பிராந்தியத்தில் இருந்த
அனைத்து கப்பற்படை கப்பல்களுக்கும் பொறுப்பாளராகவும்,
பிற்பாடு, இந்திய கடற்படையின் கமாண்டராகவும்
இருந்து ரிடையரான அட்மிரல் ராம்தாஸ் அவர்கள்
மேற்படி குற்றச்சாட்டிற்கு பதிலளித்திருக்கிறார்…
” அப்பட்டமான பொய்யான, அரசியல் காரணங்களுக்கான
தரந்தாழ்ந்த குற்றச்சாட்டு”
– என்று நேரடியாகச் சொல்லாமல் – அவரால் சொல்ல முடிந்த
அளவிற்கு ஆங்கிலத்தை பயன்படுத்தி சொல்கிறார்….
இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள
பத்திரிகைச் செய்தி கீழே –
………

?????????????????????????????????????????????????????????
…

————-
இதன் பிறகு டெல்லியிலிருந்து இயங்கும் ஆங்கில
தொலைக்காட்சியான MIRROR NOW TV-க்கு
அவர் அளித்த பேட்டி கீழே…..
இந்த நாட்டின் இந்த தரம் தாழ்ந்த அரசியலுக்கு
எப்போது விடிவு பிறக்குமோ….???
….
….
.
————————————————————————————————————————-



மிகக் கீழ் தரமான குற்றச்சாட்டு! ராஜீவ் போய் இதுவரை ஆறு தேர்தல்கள் வந்திருக்கின்றன. இதிலெல்லாம் வராத இப்படி ஒரு குற்றச்சாட்டு, ஆதாரம் இல்லாமல் இப்போது சொல்வதற்கு என்ன காரணம்? பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் வெறுப்பை தூண்டத்தானே?
கடுமையாக கண்டிக்கப் பட வேண்டியது இது!
ராகுல் காண்டி பிரதமரை திருடன் என்று சொல்லும் போது எந்த கிரகத்தில் இருந்தீர்கள் ?
// ராகுல் காண்டி பிரதமரை திருடன் என்று சொல்லும் போது எந்த கிரகத்தில் இருந்தீர்கள் ? //
ஆக, அடுத்தவர் சாணியை எறிந்தால், பதிலுக்கு சாக்கடையில் இறங்குபவர் தான் உங்கள் தலைவரா ?
அந்த கமெண்ட் இந்த பதிவாளருக்கானது
மோடிக்கோ அல்லது ராகுலுக்கோ அல்ல
அறிவழகன்,
உங்கள் தலைவர் ஜென்டில்மேனாக இருந்தால் –
மன்னிக்கவும் ஒருவேளை
இருந்திருந்தால் –
பதிலுக்கு ராஹூல் காந்தியை திருடன் என்றோ,
வழக்கம் போல் வாய்க்கு வந்த
வேறு எதாவதோ சொல்லி திட்ட வேண்டியது தானே ?
28 ஆண்டுகளுக்கு முன்னால் குண்டுவெடிப்பில்
இளம் வயதில் இறந்துபோன அவரது தந்தையை
அவமானப்படுத்துவானேன்.
தோற்கிற பயம் அவர் முகத்தில்
தெளிவாகத் தெரிகிறது. செயலில் நன்றாகப் புரிகிறது.
ரிசல்ட் வருகிற அன்றைக்கு இவர் முகத்தை அவசியம் பார்க்க வேண்டும்.
காட்டு வாரா ?
சர்ச்சிக்குள்ளானவர் ராகுல் காண்டியின் அப்பா மட்டுமல்ல
முன்னாள் காங்கிரஸ் தலைவர் , பிரதமர்
இறந்த ஒரே காரணத்துக்காக அவர் புனிதர் ஆக முடியாது
கீழே புதியவன் மேலும் பல தகவல்களை தந்துள்ளார்
மோடி சொல்வது பொய் என்றால் ராகுல் காண்டி வழக்கு தொடரலாம்
Commander VK Jaitly
@vkjaitly
Rajiv and Sonia Gandhi used INS Viraat for travel to celebrate their holidays at Bangaram island. Indian Navy resources were used extensively. I am a witness. I was posted on INS Viraat that time. Commander VK Jaitly
Shiva,
ஆக Commander in Chief ஆக இருந்த அட்மிரல் ராம்தாஸ்
சொல்வதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
ஆனால், ஒரு பாஜக ஜால்ராவான கமாண்டர் வி.கே.ஜெட்லி
என்னும் அட்ரஸ் இல்லாத ஆசாமி சொல்வதை நம்புவீர்கள்.
ஒருவர் நான் ஜால்ரா’வைத்தான் நம்புவேன் என்றால்,
அவரை என்னால் கன்வின்ஸ் செய்ய முடியாது.
Have a Nice Day.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Shiva,
உங்களிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டுமென்று தோன்றியதால் இந்த
தொடர்ச்சி…..
Retired -Chief of the Naval Staff,
Holder of PVSM – ஆகிய தகுதிகளுடன்
அட்மிரல் ராம்தாஸ் அவர்கள் பத்திரிகைச்செய்தி
Press Statement மூலம் தரும் தகவலையும் –
16 நிமிட Mirror now tv நிகழ்ச்சியில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமாகச்
சொன்ன பதில்களின் மூலம் கிடைக்கின்ற
தகவல்களையும் –
உங்கள் மனம் நம்பவில்லையா…? ஏன்…?
அப்புறம் அந்த அட்ரஸ் இல்லாத,
இதற்கு முன்னர் கேள்வியே படாத
அந்த வி.கே.ஜெட்லி என்பவர் சொன்னதை
மட்டும் அப்படியே நம்புகிறீர்களே..? ஏன்…?
எதை வைத்து….?
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உங்கள் உள்மனம் விரும்பும் செய்தியை அட்மிரல் ராம்தாஸ்
தரவில்லை; அட்ரஸ் இல்லாத ஜெட்லி தருகிறார்.
———-
—
நன்கு படித்தவர்களும், சுயமாக யோசிக்கும் திறன்
உடையவர்களும் கூட – இப்படி சில பிற்போக்கான சிந்தனைகளுக்குள் –
கட்சி வலைகளுக்குள் – சிக்கி இருப்பது ஏன்…?
எதையும் சுதந்திரமாக யோசித்துப் பாருங்களேன்…!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மோடி அவர்களை ‘சுப்ரீம் கோர்ட் திருடன்’ என்று சொல்லியிருக்கிறது எனப் பிரச்சாரம் செய்து, பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு, தரம் தாழ்ந்ததில்தால் பழைய விஷயங்களை அரசியலுக்காக எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் சீக்கியமக்களைக் கொலை செய்தது போன்ற விஷயங்கள் மக்கள் மனதில் வந்தால் அதனால் காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை வராதா என்று பாஜக எதிர்பார்த்திருக்கிறது.
இருந்தாலும், குற்றச்சாட்டு பொய் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. உண்மை, பொய் இரண்டுக்கும் ஆதாரம் உண்டு என்று செய்திகள் வருகின்றன (ஒவ்வொருத்தர் சொல்லி). அப்போது அமிதாப்பச்சன் குடும்பமும் ஹெலிகாப்டரில் ரகசியமாக அந்தமான் சென்று அரசியல்/குடும்பம் விஷயமாகச் சந்தித்ததாகவும், பிறகு அமிதாப்பச்சன் மட்டும் கேரளா திரும்பும்போது பத்திரிகையாளர் கண்ணில் பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் படித்தேன்.
என்னைப் பொறுத்தவரையில் எது பொய் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காத்திருக்கணும். அதே சமயம் ‘ராகுல் காந்தி’ மற்றும் ‘மோடி’ இருவரும் தங்கள் பிரச்சார லெவலை கீழ்த்தரமாகக் கொண்டுசெல்கின்றனர் என்றும் தோன்றுகிறது. இப்போதே இப்படீன்னா, இன்னும் வளர்ந்தால் ராகுல் காண்டி எப்படி இருப்பாரோ..
புதியவன்,
இங்கே உங்கள் சாயம் வெளுக்கிறதே…
// ‘ராகுல் காந்தி’ மற்றும் ‘மோடி’ இருவரும்
தங்கள் பிரச்சார லெவலை கீழ்த்தரமாகக்
கொண்டுசெல்கின்றனர் என்றும் தோன்றுகிறது.
இப்போதே இப்படீன்னா, இன்னும் வளர்ந்தால்
ராகுல் காண்டி எப்படி இருப்பாரோ..//
ஏன் “வளர்ந்த” மோடிஜியை (-யும்…!!!) கண்டிக்கத் தோன்றவில்லை…?
-“எங்கிருந்தாலும்” வாழ்க,
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கோதாரி மைந்தன் கும்பல் கதறுவதை பார்க்கும் போது அடி பலம் போல
கதறுங்க
கதறுங்க
கதறுங்க
ஹஹஹஹஹ
Prabhu Kalidas
உங்கள் பெயரின் தலைப்பெழுத்தை எழுத மறந்து விட்டீர்கள்
போலிருக்கிறதே ;
அதான் “chowkidar’ – ஐத்தான் சொல்கிறேன்.
விசுவாசத்தை வெளிப்பட காட்டிக்கொள்வது
ரொம்ப முக்கியம் சௌகிதார் பிரபு காளிதாஸ்.
சாயமெல்லாம் எப்போதோ வெளுத்து போய் விட்டது ஐயா.
அட்மிரல் ராம்தாஸ் அவர்கள், “டின்னர் பார்ட்டியின் போட்டோ ஆதாரம் உள்ளதாக” சொல்கிறார்.
ஆனாலும், குற்றச்சாட்டு பொய் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது என்றால்…
பொய்யர்களுக்கு பொய்யர்களே ஆதரவாளர்கள்.