…
…

…
தனது இன்னுயிரை விட இந்த தேசத்தின் ராணுவ ரகசியத்தை காப்பாற்றுவது முக்கியம் என்று ஆபத்தான நேரத்திலும் துணிந்து செயல்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் வீரத்தைப் பற்றி BBC செய்தி சொல்வதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…
இப்படிப்பட்ட ராணுவ வீரர்களின் தியாகத்தையும், சாகசச் செயல்களையும், தங்களது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் கேடுகெட்ட அரசியல்வாதிகளை இந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்….
——————————
அபிநந்தன் பிடிபட்டது எப்படி?
பாகிஸ்தானில் நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
இலியாஸ் கான்
பிபிசி
( https://www.bbc.com/tamil/india-47399786 )
——————————
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அவர் எவ்வாறு பாகிஸ்தானில் தரையிறங்கினார், எப்படி அவர் இந்தியர் என்று அவர்களுக்குத்தெரிய வந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரிக்கிறார், பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில் உள்ள ஹொரன் கிராமத்தை சேர்ந்த மொஹமத் ரசாக் சௌத்ரி. இவருக்கு வயது 58.
அவரது வார்த்தைகளில்…
“விமானி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்றுதான் நான் தனிப்பட்ட
முறையில் எண்ணினேன். அவரது பாராசூட்டில் இந்தியக் கொடி இருந்ததை வைத்து, அவர் இந்தியர் என்பது தெரிய வந்தது. அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து, அவர் பறந்து நிலத்தை அடைவதை நான் பார்த்தேன். அவரைப் பார்த்து அங்கு விரைந்த உள்ளூர் மக்கள், அவரைத் தாக்கி விடுவார்களோ என்று அஞ்சினேன்.
அவர் தரையிரங்கிய இடத்தில் ஏற்கனவே சில இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் தான் இந்தியாவில் இருக்கிறேனா என்று அபிநன்தன் கேட்டுள்ளார். அவர்கள் பதில் கூறியவுடன், பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக முழக்கம் எழுப்பினார். அதற்கு எதிராக லாங் லிவ் பாகிஸ்தான் என்று அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்களை பயமுறுத்த, தன் துப்பாக்கியை எடுத்து வானத்தை பார்த்து சுட்டார் அபிநந்தன். ஆனால், அந்த இளைஞர்கள் கோபமடைந்து கல்லைத் தூக்கி எறிய ஆரம்பித்தனர். அதனால், வானத்தை பார்த்து சுட்டுக் கொண்டே அவர் ஓடத் தொடங்கினார்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓர் ஓடையில் குதித்தார். அப்போது எனது மைத்துனர்களில் ஒருவர், அவரது காலில் சுட்டார். அபிநந்தனை பார்த்து அவரது துப்பாக்கியை கீழே போடும்படி அவர் சொல்ல, அபிநந்தனும் அதை செய்தார்.
அப்போது ஓர் இளைஞர், அபிநந்தனை பிடித்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த சில காகிதங்களை எடுத்து அபிநந்தன் கிழித்ததோடு, சிலவற்றை அவரது வாய்க்குள் அடைத்துக் கொண்டார். ஆனால், அந்த இளைஞர்கள், சில காகிதங்களை அவரிடம் இருந்து பறித்து, பின்பு அதனை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
எங்கள் இளைஞர்கள் கோபமாக இருந்தனர். அவரை அடித்தும், அறையவும் அவர் அருகில் சென்றனர். சிலர் அதனை தடுக்க முயன்றனர். நானும், அவரை தாக்க வேண்டாம் என்றும் ராணுவம் வரும்வரை அவரை தனியாக வைக்கவும் கூறினேன்” என்றார்.
.
—————————————————————————————————————
மேலே உள்ளவற்றை பதிப்பித்த பின் வேறு ஒரு செய்தி கிடைத்தது …
அது இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட,
அபிநந்தனின் மிகச்சிறப்பான செயலாற்றலை
விளக்கும் வண்ணம் இருக்கிறது.
பாகிஸ்தானின் செய்தித்தாள் “டான்” (Dawn) தந்திருக்கும் செய்தி அது…
ஒரு பாகிஸ்தான் நாளேடே இத்தகைய ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது
என்பதை பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது.
——————
Injured Abhinandan fought captors, fired into air, swallowed imp documents
before being captured: Pak media
Pakistani media reports how in the face of grave danger,
our fighter pilot didn’t panic or lose his mind.
——————-
As the country prays for the safe return of IAF braveheart Abhinandan
Varthaman, Pakistani media reports how in the face of grave danger,
our fighter pilot didn’t panic or lose his mind.
Instead, he fought his captors, fired into the air and swallowed important
documents (which should not have been in enemy hands), before he was
outnumbered and captured.
All this, while he was bleeding profusely after the crash.
PAKISTANI NEWSPAPER DAWN REPORTS –
The pilot, who was equipped with a pistol,
asked the youngsters whether it was India or Pakistan. On this, one of them
intelligently responded that it was India. The pilot, later identified as Wing
Commander Abhi Nandan, shouted some slogans and asked
which place exactly it was in India. To this, the same boy responded
that it was Qilla’n.
The pilot told them that his “back was broken” and he needed water to drink.
Some emotional youth, who could not digest the slogans,
shouted Pakistan army zindabad. On this,
Abhinandan shot a fire in the air while the boys picked up
stones in their hands.
According to Mr Razzaq (an eyewitness),
the Indian pilot ran a distance of half a kilometre
in backward direction
while pointing his pistol towards the boys who
were chasing him.
During this brisk movement, he fired some more
gunshots in the air to frighten them but to no avail, he said.
Then he jumped into a small pond
where he took out some documents and maps
from his pockets,
some of which he tried to swallow
and soaked others in water.
The boys kept on asking him to drop his weapon and in the
meanwhile one boy shot at his leg, Mr Razzaq said.
Even while catering to Pakistani readership that would
perhaps not want to read about the bravery of
an Indian fighter pilot inside their territory, Dawn reports that –
Abhinandan said his back was broken while he displayed such valour.
The fact that Abhinandan was perhaps severely injured
when his fighter jet crashed could be seen from the
videos circulated on social media.
In one, a profusely bleeding Abhinandan is seen trying to get up as men in
uniform pull him up and locals hit him and shout slogans.
“The boys got hold of him from both arms.
Some of them roughed him up, in a fit of rage,
while others kept on stopping them.
In the meanwhile, army personnel
arrived there and took him into their custody
and saved him from the wrath of the youths, he said.
Thanks God, none of the furious boys shot him dead because he
had given them quite a tough time,” Dawn reports.
.
——————————————————————————



விங் கமாண்டர் அபிநந்தன் சாகசத்தைப் படித்த பிறகு,
இந்த தரங்கெட்ட அரசியல்வாதிகளை நினைத்தால் – ???
ஐயா,
WhatsApp forwaded message. இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொன்றும் இருக்கு அதை அடுத்து தருகிறேன்.
——–
xxxxxxxxxx
அறிவழகு,
மன்னிக்கவும்.. உங்கள் whatsAPP, Facebook forward message கள் – ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் எனக்கு ஏற்புடையவை அல்ல. எனவே, இங்கே வேண்டாமென்று நினைக்கிறேன்.
விலக்கி விட்டேன்.
-காவிரிமைந்தன்
ஐயா,
தாங்கள் விரும்பாத சொற்களை தவிர்த்து முறைப்படுத்தி தருகிறேன்.
ஏனென்றால், சில நாட்களாக இவர்கள் எங்கோ AC அறையில் உட்கார்ந்துகொண்டு போர் போர் என்று கூக்குரல் இடுவது கண்டு சகிக்க முடியவில்லை. அவ்வளவுக்கு Twitter, Facebook இன்னபிற Social Media-க்களில் கூக்குரல் இடும் இந்த மகாவீரர்கள் நேரில் செல்வதை யார் தடுத்தா. இன்னும், Paid Media-க்கள் இடும் கூக்குரலை கேட்க நம் செவிப்பறை தான் கிழியுது. என் மனதில் தோன்றியதை C.T.Ravi chandran என்பவர் வெளிப்படுத்தியதால் இங்கு பதிவிடுகிறேன்.
/// பாகிஸ்தான் நேரடியாக மோதாமல் தீவிரவாத அமைப்புகளை அனுப்பி அல்லது ஆதரித்து இந்தியாவைத் தாக்குவதைப் போல் நாமும் நமது நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகளான RSS, VHP, பஜ்ரங்கதள் இன்ன பிற ‘சேனா’க்கள் மற்றும் முன்னணிகளையெல்லாம் போர் முனைக்கு அனுப்ப வேண்டும். போர் மீது பேரன்பு கொண்டிருக்கும் அவர்களுக்கும் இது விருப்பமானதாகவே இருக்கும்.
இதில் நிறைய பலன்கள் உண்டு.
1. இந்திய ராணுவம் நேரடியாக போரில் ஈடுபட்டால் ஏற்படப்போகும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சரிவைத் தவிர்க்கலாம்.
2. தீவிரவதாம் vs தீவிரவாதம் என்கிற அளவில் இது முடிந்துவிடும். இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்து இந்திய அரசு உலக நாடுகளின் மத்தியில் நற்பெயர் எடுக்கலாம்.
3. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு ஆணியும் பிடுங்கவில்லை என்கிற களங்கத்தை துடைத்துக் கொள்ள RSS போன்ற அமைப்புகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
C.T.Ravi chandran commented in Narain Rajagopalan’s f b post👆🏻 ///
// ”நாட்டுக்காக போரிட ஆர்.எஸ்.எஸ். மூன்றே நாட்களில் ராணுவத்தை உருவாக்கும்”: மோகன் பாகவத் அதிரடி // https://tamil.indianexpress.com/india/rss-can-prepare-an-army-within-3-days-says-chief-mohan-bhagwat/ இந்த செய்தியில் மேலும் திரு பாகவத கூறுகிறார் // ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக்காக மகிழ்ச்சியுடன் உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராக இருப்பதாக மோகன் பாகவத் தெரிவித்தார்.//
இந்த செய்தியில் இந்திய ராணுவத்திற்கு தயாராக 6 –7 மாதங்கள் ஆகும் ஆனால் ஆர்.எஸ்.எஸ்.மூன்றே நாட்களில் தயாராகிவிடும் என்று கூறியதற்கு எதிர்ப்புகள் வந்தவுடன் வழக்கம் போல அவர்கள் பாணியில் தவறாக செய்தி வந்துவிட்டது என்று அந்தர் பல்டி அடித்ததும் செய்திகளாக வந்தவை தான் — அவர்கள் எப்பவும் தயாராகத்தான் இருப்பார்கள் — என்று நம்பிக்கை வையுங்கள் நண்பர் அறிவழக்கு
ஆக மொத்தம் இந்த செய்தி நம் மக்களுக்கு முக்கியவ துவம் வாய்ந்ததாக இல்லை. இங்கு comment செய்திருப்பவர்களின் தேச பற்று ஏனோ என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
எதையும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் சிந்திப்பதால் வரும் வினை இது. தேசம் என்ற அக்கறை இல்லாததால் ஏற்படும் விளைவு இது.
மும்பை மற்றும் பல இடங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தாக்கப்பட்டபோது காங்கிரஸ்/திமுக அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது, இப்போது மோடி அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை எண்ண யாருக்கும் விருப்பமில்லை. இதற்கு முன்பு உள்ளூரில் கோவை பயங்கரவாதத்துக்கு என்ன மாதிரியான நடவடிக்கை மாநில மத்திய அரசால் எடுக்கப்பட்டது என்று யாரும் எண்ணுவதில்லை.
Mr. Puthiyavan please read this article .BJP is doing many fraud things.
https://minnambalam.com/k/2019/03/01/52
இதுல பெரிய விஷயமில்லை ஷர்ரோன். நீங்க thatstamil ல் பார்த்தீங்கன்ன எவ்வளவு செய்திகள் திமுக paid news என்பதைக் கண்டுபிடிக்கலாம். விகடன்லயும் இந்த மாதிரி செய்திகள் நிறைய வரும். எல்லோரும் பிஸினெஸ் பண்ணறாங்க. அதுக்கு ஏத்தபடி நடந்துக்கறாங்கன்னுதான் நாம புரிஞ்சுக்கணும். தேர்தல் காலத்துல இந்த மாதிரி நிறைய விஷயங்கள் சகஜம்தான்.
Also Sharron, please read below article.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2224160
புதியவன்,
இந்த கட்டுரை உருவாகியது எப்படி…?
சொந்தக்காரர் யார்….? தெரிகிறதா…?
.
-காவிரிமைந்தன்
அய்யா ,
தாங்கள் இதில் என்ன விஷத்தை கண்டுள்ளீர்கள் என்றே புரியவில்லை. எல்ல கட்சிகளும் விளம்பரத்தில் குறியாக இருக்கும்.தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது நடப்பது தானே.காங்கிரஸும் இதையே தானே செய்ய முயலும்.
நான் கேட்பது ஏன் எல்லாரும் தேச ஒற்றுமையை மறந்து விட்டு கட்சி விரோதம் என்ற போர்வையில் ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறோம்.
தேவையே இல்லாமல் பி.ஜெ.பி க்கு விளம்பரங்களாக வாரி வழங்கி கொண்டிருக்கிறோமோ என்றே தோணுகிறது. பி.ஜெ.பி எதிர்ப்பு என்ற போரவையில் அவர்களுக்கு இலவச விளம்பரமாக பட்டி, தொட்டி வரை அவர்களின் பெயரை கொண்டு சேர்கிறோமோ?
இதையே தான் போன தேர்தலில் மனிஷ் திவாரி அவர்கள் செய்து, மோடியின் பெயரை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்த புண்ணியத்தை கட்டி கொண்டார்.
நடப்பது தானே நடக்கும்
பாஜக-காரர்கள் இந்த மின்னம்பலம் செய்தியை பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.
https://minnambalam.com/k/2019/03/01/70
///தேர்தலுக்கு முன் போர்: பாஜக அன்றே சொன்னதா?
தேர்தலுக்கு முன்பு போர் வருமென்று பாஜக 2 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதாக நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.//
/// Pawan Kalyan: BJP told me of the war before LS polls.
ttps://www.nationalheraldindia.com/national/pawan-kalyan-bjp-told-me-of-the-war-before-ls-polls///
இந்த செய்தி வந்து ஒரு நாள் ஆகின்றது. பாஜகவில் இருந்தோ அல்லது சம்பந்தபட்ட வேறு யாருமோ இதுவரை மறுப்பு சொல்லவில்லை.
இதில் எங்கோ உண்மை மறைந்து இருக்கிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாத்தையும் பார்க்கும் போது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எல்லாம் இறைவனுக்கு தான் வெளிச்சம்.
// பாகிஸ்தானில் இந்திய வான் தாக்குதல் நடத்தியதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்கின்றனவா? #BBCFactCheck //
https://www.bbc.com/tamil/india-47407785 …..ஆனாலும் பல புள்ளிகளில் சிந்தித்து — தேசம் என்கிற அக்கறையினால் — வெளியிடப்பட்ட புகைப்படங்களின் — வண்டவாளம் இது தான் …? என்னே இவர்களின் தேச அக்கறை …?
ஒருவர் போர் திட்டமிடப்பட்டு பி.ஜெ.பி யினால் நடத்த பட்டதுஎன்று ஆர்பரிக்கிறார்.இன்னொருவர் போரே நடக்க வில்லை. எல்லாமே விளம்பரம் என்று புலம்புகிறார்.
முதலில் நமக்குள் ஒற்றுமையை வளர்த்து கொள்வோம்.பிறகு பி.ஜெ.பி யை குறை சொல்லி மக்களிடம் புலம்புவோம்.நாமே இப்படி முன்னுக்கு பின் முரணாக உளறி கொட்டி கொண்டிருந்தால் மக்கள் கை கொட்டி சிரிப்பார்கள்.
பி.ஜெ.பி யின் விளம்பர தூதுவர்களாக மாறி விட்டோம்.
அது இல்லை saveindiaa,
போர் நடத்திவிடனும் என்று முயற்சிக்கப் பட்டது.
இறைவன் அபிநந்தனை கொண்டு அந்த முயற்சியை முறியடித்து விட்டான்.
ஒருவர் அந்த முயற்சி சதியாக இருக்குமோ என்று சந்தேகம் கிளப்புகிறார்.
மற்றொருவர் நடந்த முயற்சியில் சொல்லப்படுகின்ற பொய்களை கேள்வி கேட்கிறார்.
இரண்டும் பாஜகவுக்கு பேர் தான் வாங்கி கொடுக்கும் என்றால்…..!
நான் என்னத்த சொல்ல…!
Somehow, I have a thinking in my mind, Mr.Abinandan will not have a relaxed time in the name
of enquiry with the army and the Govt.higher officials and political rulers.He will suffer a psychological warfare for a long time. He will be seen with suspicion always by the Govt agencies.
It will be very difficult for him to overcome from this trauma for a very long time.
Since you served in the Defence Ministry for a very long time, I would like to hear your view
on this.
R.Gopalakrishnan,
அவருக்கு எல்லையின் அந்தப்பக்கம் நிகழ்ந்த சில கொடுமைகளை காட்டும் சில வீடியோக்களை நான்
பார்த்தேன்… மனதளவில் அவருக்கு தற்காலிகமான உளைச்சல்கள் இருக்கும். ஆனால், நிச்சயம்
இதையெல்லாம் எளிதில் தாண்டி வெளிவரக்கூடிய பக்குவம் அவருக்கு இருப்பதாகவே தெரிகிறது.
மேலும், அவர் பாகிஸ்தானில் பிடிபட்ட செய்தி கிடைத்ததிலிருந்து, திரும்ப வந்து சேரும் வரை
இந்திய மக்கள் அவருக்காக எவ்வளவு கவலைப்பட்டார்கள் என்கிற விவரங்களையெல்லாம்
காணொளிகளில் பார்த்தபிறகு ( அவரது வீட்டார் நிச்சயம் பதிவு செய்து வைத்திருப்பார்கள்…)
அவர் சுலபமாக இந்த பிரச்சினையிலிருந்து வெளிவந்து விடுவார் என்றே நினைக்கிறேன்.
இலாகா ரீதியாக அவருக்கு துன்பங்கள் இருக்க வாய்ப்பில்லை…
மாறாக, அவரை உதாரணமாக காட்டி, மற்ற வீரர்களையும் மன உரமுள்ளவர்களாக ஆக்கவே
அவரது இலாகா முயற்சிக்கும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
What happened to the comment I sent. I don’t see it in the comments section. Nanda
nanda kumar,
நீங்கள் அனுப்புவது எல்லாவற்றையும் இங்கே பிரசுரம் செய்வதற்கில்லை..
உங்களுக்கு என்று எதாவது கருத்து சொல்ல விரும்பினால் சொல்லலாம்.
மற்ற தளங்களில் வெளியாவதை இங்கே அனுமதிப்பதா வேண்டாமா என்பதை
நான் தான் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அனுப்பியுள்ள லிங்க்
இங்கே பிரசுரம் செய்ய தகுதியற்றது என்பது என் மதிப்பீடு.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்