…
…

…

…

…
5 ஆண்டு, 10 ஆண்டு காண்டிராக்டுகள் எல்லாம்
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் – இது
50 ஆண்டுகள் காண்டிராக்டு… ஆட்சிகள் மாறினாலும்,
அசைக்க முடியாத, தொடர்ந்த வருமானம்…!!!
நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் –
அனைத்தும் படிப்படியாக
தனியார் வசம் போய்க்கொண்டிருக்கின்றன.
நாட்டில் – கிழக்கிலும், மேற்கிலும் உள்ள
ஏகப்பட்ட துறைமுகங்கள் ஏற்கெனவே
அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டன….
லேட்டஸ்டாக, விமான நிலையங்களின்
தரத்தை உயர்த்துவது என்கிற காரணத்தைச் சொல்லி –
விமான நிலையங்களை நிர்வகிக்க, தனியார் நிறுவனங்களையும்
சேர்த்துக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்தது.
இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட 6 விமான நிலையங்களை நிர்வகிக்க டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது. அதில் 5-க்கான டெண்டர்கள் மீது 2 நாட்கள் முன் முடிவெடுக்கப்பட்டது.
பல தனியார் நிறுவனங்கள், இந்த ஏலத்தில் கலந்துகொண்டாலும்,
திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னோ, மங்களூர் மற்றும் ஜெய்ப்பூர்
ஆகிய – ஐந்து விமான நிலையங்களையும் –
ஒரே கம்பெனியான அதானி குழுமம் பெற்றுள்ளது.
டெண்டரில் – மற்ற கம்பெனிகளை விட அதிக ரேட் தருவதாக கூறியதால் தான் அதானி கம்பெனிக்கு ஏலம் கிடைத்தது என்றாலும் கூட –
இதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் எதுவும் இருக்குமோ….?
இதுவரை, விமான நிலைய பராமரிப்பு விஷயங்களில்
முன் அனுபவம் உள்ள கம்பெனிகள் மட்டும் தான்
ஏலம் எடுக்க அனுமதிக்கப்பட்டன.
அதானி கம்பெனிக்கு அந்த அனுபவம் இல்லாததால்,
இதற்கு முன்னதாக நடந்த ஏலங்களில் அந்த கம்பெனியால் கலந்து
கொள்ள முடியவில்லை….
அதனாலென்ன… அரசாங்கத்தில்
அதானிக்கு இல்லாத நண்பர்களா…?
இந்த தடவை, ஏலத்தில் கலந்து கொள்ளும் கம்பெனிகளுக்கு
முன் அனுபவம் தேவையில்லை (….??? ) –
என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது போய் ஒரு காரணமாக
இருக்க முடியுமா என்ன …!!!
அதனால் தான், அதானி கம்பெனியால் ஏலத்தில் கலந்து கொள்வதும்,
5 விமான நிலையங்களை அள்ளுவதும் சாத்தியமாகி இருக்கிறது
என்றெல்லாம் கூறி விட முடியுமா என்ன….?
தகுதி உடையவர்களுக்கு,
டெண்டரில் அதிக தொகையை
குறிப்பிட்டவர்களுக்கு காண்டிராக்டு கிடைத்திருக்கிறது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையம்
அதானி குழுமத்தின் கையில் போவது குறித்து
வருந்துகிறார் கேரள முதலமைச்சா் பினராயி விஜயன் –
“அதானி குழுமத்திற்கு விமானத்துறையில் அறிமுகமே இல்லை,
ஆனால் பிரதமா் மோடியுடன் அறிமுகம் உள்ளது, எனவேதான் அவருக்கு இந்த ஏலம் கிடைத்துள்ளது” என கூறி இருக்கிறார்…
( திருவனந்தபுரம் விமான நிலையத்தை
கேரள அரசே எடுத்து நடத்த தயாராக இருந்தது…
முடியவில்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு … )
இந்த நாட்டில் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் போக,
மிச்சம் தானே மற்றவர்களுக்கு….!!!!
பாவம் இதை ஜீரணிக்க முடியாமல் பேசுகிறார்
திரு.பினாராய் விஜயன்…!!!
பாவம், அவர் வருத்தம் அவருக்கு…
நமக்கு இது புதுசா என்ன…?-
வழக்கம் போல் செய்தியை படித்து விட்டு
போய்க்கொண்டே இருப்போம்…
.
————————————————————————————————————–



// 50 ஆண்டுகள் காண்டிராக்டு… ஆட்சிகள் மாறினாலும்,
அசைக்க முடியாத, தொடர்ந்த வருமானம்…!!! //
பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள்.
//நமக்கு இது புதுசா என்ன…?-
வழக்கம் போல் செய்தியை படித்து விட்டு
போய்க்கொண்டே இருப்போம்…//
மே 2019 வரையில் 🙂
நமக்கெல்லாம் ஒரு காண்டிராக்ட் கிடைச்சால் எவ்வளவு பணம் வரும் என்றெல்லாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். கல்ஃப் வார் நடந்தபோது, ஒரு மலையாளி கம்பெனி, வெறும், ‘தண்ணீர்’ பாட்டில் சப்ளை (அமெரிக்க ஆர்மிக்கு) செய்யக் கிடைத்த காண்டிராக்டில் கோடிகளைச் சம்பாதித்தார்கள். ம்ம் வலிமையுள்ளவனுக்கு காசு சேருது. அரசாங்கத்துக்கு நண்பனாக இருந்தால் (அதாவது கொடுக்கல் வாங்கலில்) எத்தனையோ சம்பாதிக்கலாம் போல.
Apart from this, தனியார்கள் விமானநிலையத்தை நன்றாகவே மெயிண்டெயின் செய்வார்கள் (நான் அதானி மாதிரி புது ஆட்களைச் சொல்லலை). சென்னை ஏர்போர்ட் எப்படிக் கட்டினாங்க என்பதெல்லாம் நாம பார்த்தோமே…
சென்னை ஏர்போர்ட்டை காண்டிராக்டர்கள் தானே கட்டினார்கள் ?
அதிலும் குறைகள் தானே ?
அய்யா … ! அதானி குழுமம் { கும்பல் } // ஏற்கனவே சோலார் மின் உற்பத்தி மற்றும் விநியோகம், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுக பராமரிப்பு போன்ற துறைகளில் நுழைந்துவிட்டது. தற்போது விமான நிலைய பராமரிப்பிலும் காலடி எடுத்துவைத்துள்ளது // … 50 ஆண்டுகள் என்ன அதற்கும் மேலே கூட கொடுக்கலாம் — என்ன பெரிய பராமரிப்பு – விமான நிலைய தரையை துடைப்பதும் — லக்கேஜ் டிராலிகளை தள்ளுவதும் — டாய்லெட்களை கழுவதும் தானே – இதற்கு எதற்கு முன் அனுபவம் தேவை என்று கேட்டுக்கொண்டு சிலதுகள் ஓடி வந்தாலும் ஆச்சர்யமில்லை …! ஆறில் ஐந்தை திறந்தாகிவிட்டது –குவகாத்தி விமான நிலையத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.– அதற்குள் ராகுகாலம் வந்துவிட்டதோ — என்னவோ …? ஆட்சிகள் மாறினால் மட்டும் என்ன நடந்து விட போகிறது ? — ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆட்சி மாறினால் என்கிற எண்ணத்தில் தான் –ஹூம் .. என்ன நடந்தது — உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா என்கிற சொலவடைதான் மிஞ்சியது …!!!
கௌஹாத்தி டெண்டரும் இன்று முடிவு செய்து விட்டார்கள்…
அதுவும் அதானி அய்யாவுக்கே கிடைத்து விட்டது… !
quote –
” தொழிலதிபர்களுடன் நட்பு பாராட்டுவதில் எனக்கு வெட்கமோ, தயக்கமோ எதுவுமில்லை… அவர்கள் இல்லையென்றால் இந்த நாடு எப்படி வளர்ச்சி பெறும்…? ”
unquote –
– நண்பர்கள் இல்லையேல் ஆட்சி ஏது ….?
அய்யா …! நமது இந்திய வரைபடத்தில் அதானி குழும துறைமுகங்களையும் — இந்த ஆறு விமான நிலைய பராமரிப்பு இடங்களையும் — சும்மா புள்ளி வைத்து கோடுபோட்டு பார்த்தல் –?
தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபினந்தன் பிடிபட்டுள்ளது மிகவும் வருத்தமான செய்தி. அவர் நல்லவிதமாக நாடு திரும்பனும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
அய்யா .. புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? என்பதைப்போல விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களின் தந்தை ” ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான்.” அவர்களைப்பற்றிய செய்தி ஒன்று : // நிழல் நிஜமானது.. மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை! //
Read more at: https://tamil.filmibeat.com/news/wg-cdr-abhinandan-varthaman-father-was-consultant-kaatru-veliyidai-058494.html
விங் கமாண்டர் அபிநந்தன் – நாட்டுப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மிகச்சிறப்பாக பணியாற்றிய அதே ஆகாயவிமானப்படையில் விரும்பி, தானும் அதில் சேர்ந்து பணியாற்றும் ஒரு அற்புதமான ஆற்றலுள்ள ராணுவ வீரர்.
எந்தவித சோதனையையும் எதிர்கொள்ளும் திடமான உள்ளத்தையும், உடல் உறுதியையும் இந்திய ராணுவம் அவருக்கு பயிற்சி மூலமும் அளித்திருக்கிறது…
எனவே, அவரது நிலை பற்றி எந்தவித அச்சமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
It is question of Time… உரிய நேரத்தில் அவர் -மிகுந்த புகழுடனும், பெருமிதத்துடனும் மீண்டும் தாய்நாடு திரும்புவார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் – உற்சாகமூட்டும் விதத்தில் இந்த நாட்டு மக்கள்
செயல்படுவார்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தை ஏர் மார்ஷல்(ஓய்வு) சிம்மக்குட்டி வர்த்தமான்
அவர்கள் சற்று முன்னர் – ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்….
இந்த கம்பீரமான தந்தைக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும்.
—————–
Abhi is Alive, Not Injured,
We Are So Proud of Him: Air Marshal (Retd) S Varthaman –
A day after India confirmed that “missing Indian Air Force (IAF) pilot” Abhinandan was under Pakistan custody, his father Air Marshal (Retd) Varthaman said his son was alive, not injured and that he was “proud of him.”
“Thank you my friends for your concern and wishes. I thank God for his blessings, Abhi is alive, not injured, sound in mind, just look at the way he talked so bravely…a true soldier…we are so proud of him. I am sure all your hands n blessings are on his head, prayers for his safe return, I pray that he does not get tortured, and comes home safe n sound in body and mind. Thank you all for being with us in this hour of need . We draw our strengths from your support and energy (sic).”
————————
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//உரிய நேரத்தில் அவர் -மிகுந்த புகழுடனும், பெருமிதத்துடனும் மீண்டும் தாய்நாடு திரும்புவார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் – உற்சாகமூட்டும் விதத்தில் இந்த நாட்டு மக்கள்
செயல்படுவார்கள்./// உண்மை … தாய்நாடு திரும்புகிறார் // அபிநந்தன் விடுதலை: பாகிஸ்தான் அறிவிப்பு! // https://www.minnambalam.com/k/2019/02/28/101