எம்ஜியார் பார்த்த – உத்தம புத்திரன்… பகுதி-16 – இன்றைய சுவாரஸ்யம்…



நாடோடி மன்னன் இடுகையை முழுமையாக்காமல் இடைவேளையில் வெவ்வெறு தலைப்புகளை கொண்டு வந்து விட்டதற்கு நண்பர்கள் மன்னிக்க வேண்டும்…. இதோ அடுத்த பகுதி …!!!

—————-

எம்ஜியாரின் அரசியல் வாழ்வு பற்றி மக்களுக்கு தெரியும்..
திரைப்படங்களில் அவர் நடித்ததையும் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த திரைப்படங்கள் உருவாகிற நேரத்தில், திரைக்குப்
பின்னால், அந்த படங்களை உருவாக்குவதில் அவரது பங்கு, ஒரு
திரைப்படத்தின் ஒவ்வொரு பகுதியையும் செதுக்கி செதுக்கி
உருவாக்குவதில்அவர் கொண்டிருந்த ஆர்வம்…
பணச்செலவைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத தன்மை…
ஆகியவை பற்றி சாதாரண பொதுமக்களுக்கு தெரியாது.

அந்த காலகட்டத்தில் – முன்னணி நட்சத்திரங்களால், ஒரே சமயத்தில் பல
படங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன… குறித்த காலத்தில் படப்பிடிப்பை
நடத்தி முடிக்க முடியாமல், பல படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்றே
தெரியாமல் தயாரிப்பாளர்கள் தவித்த நிலை – ஆகியவற்றை
ஆர்எம்வி – எம்ஜியாரை வைத்துக்கொண்டு தான் பட்டபாட்டை
நன்றாகவே சொல்லி இருக்கிறார்….

நாடோடி மன்னனின் மாபெரும் வெற்றி – இவை அனைத்தையும்
ஈடு செய்து விட்டது.

முந்தைய இடுகையின் (பகுதி-15) தொடர்ச்சி கீழே –

—————————————

.
—————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எம்ஜியார் பார்த்த – உத்தம புத்திரன்… பகுதி-16 – இன்றைய சுவாரஸ்யம்…

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அற்புதமாக திட்டமிட்டு, மிகச்சிறப்பாக செயல்பட்ட
    நமது விமானப்படை வீரர்களை, தனியே ஒரு இடுகை
    பதிவிட்டு, வாய் நிறைய பாராட்ட வேண்டுமென்று
    தோன்றுகிறது.

    ஆனால் – கூடவே, நிறைய விஷயங்களையும்
    மனம் திறந்து பேச வேண்டியிருக்கும்…
    அதெல்லாம் இப்போது வேண்டாமே என்று
    தோன்றுகிறது….

    எனவே, விமரிசனம் வலைத்தள நண்பர்கள் சார்பாக –
    நமது வீரர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுதல்களை
    இங்கே தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்வோம்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நம் விமான படைக்கு.

      காமை ஐயா சொன்னது போல் பல விஷயங்கள் இருக்கு. ஆனால் ஒன்றை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

      ராஜஸ்தானில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட மரியாதைக்குறிய மோடி அவர்கள் பிரச்சார மேடையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இறந்த 40 CRPF வீரர்களின் புகைப்படங்களை வைத்து இருந்திருக்கிறார்.

      இது என்ன வகையான கீழ்த்தரமான போக்கு. இவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன் படுத்திக்கொள்வதற்காகவா அந்த வீரர்கள் உயிரை விட்டார்கள்.

      நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! பாகிஸ்தானுக்கு நம்மைப்பற்றி நன்றாகவே தெரியும் — இருந்தாலும் அவ்வப்போது — இதுபோன்ற சில்லுண்டி வேலைகளை செய்து வாங்கி காட்டிக்கொள்வது வாடிக்கை — வாழ்த்துக்கள் நம் ராணுவத்திற்கு …!!
    யுத்தம் பற்றிய ஒரு கவிதை : ” யுத்தம் ”

    ‘டாங்கிகள் முன்னால் சென்றாலும் சரி,
    பின்னால் சென்றாலும் சரி,
    அவை விட்டுச் செல்வது தரிசு நிலத்தையே
    வெற்றியோ தோல்வியோ அது போரின் முடிவு.
    ஆனால் எப்போதும் தோற்பது பூமியே
    அழுகுரல் ஒன்றே போரின் எச்சம்
    யுத்தமில்லா உலகம் நன்றே
    யுத்த பூமியில் சிதைகள் எரிவதைவிட
    வீட்டில் அடுப்புகள் எரிவதே
    இரு தரப்புக்கும் நன்று’

    என்று 2017 ல் ஒரு கட்டுரை பி பி சி யில் அரிய புகைப்படங்களோடு வெளிவந்தது — அந்த கட்டுரையின் இறுதியில் உள்ளதுதான் மேலே உள்ள கவிதை https://www.bbc.com/tamil/global-41180744 — வெற்றி நமதே …!!!

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபினந்தன் பிடிபட்டுள்ளது மிகவும் வருத்தமான செய்தி. அவர் நல்லவிதமாக நாடு திரும்ப‌னும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.