…
…

…
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ்
– சில நாட்களுக்கு முன் அளித்த
தொலைக்காட்சி பேட்டி ஒன்று கீழே –
…
…
இந்த லட்சணத்தில் ஒரு கூட்டணியை
வைத்துக்கொண்டு தான்
பாஜகவின் தேசியத் தலைவர் அமீத்ஜி,
4 நாட்களுக்கு முன்னர் மதுரையில் –
அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் இனி தமிழகத்தில்
நடத்தப்படும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் –
“NDA கூட்டணி” என்று சொல்லித் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும்
என்று உத்திரவு வேறு போட்டு விட்டு சென்றிருக்கிறார்…!!!
தங்களுடன் கூட்டணி வைக்கச்சொல்லி வற்புறுத்தி,
ஒரு கட்டாயக்கூட்டணியை உருவாக்கிய பாஜகவை –
அதிமுகவும், பாமகவும் – வரவிருக்கும் தேர்தலில்
எந்த விதத்தில் “கவனிக்கும்” என்பது நமக்கு
ஓரளவு புரிகிறது…
ஆனால் அமீத்ஜீக்கு …???
.
—————————————————————————————————————-



அமீத்ஜீக்கு கவலையே வேண்டாம்.
அஞ்சுக்கு அஞ்சும் நிச்சயம் காலி.
மௌனசாமியும், டாக்டரும் சேர்ந்தே செஞ்சுடுவாங்க. 🙂
அய்யா … ! மதிப்பெண் சைபருக்கும் கீழே எதைப்போடுவது — நூத்துக்கு – இரநூறு — ? என்று கூறிய மருத்துவர் — இன்று …! — இதற்கு பெயர்தான் தேர்தல் அரசியல் …? தேர்தல் நேர கூட்டணி என்பது கொள்கைகளை அடிப்படையாக கொண்டதல்ல என்பதை மக்களும் நன்கு தெரிந்து வைத்து இருப்பதால் … இவர்கள் ” குடிகாரன் பேச்சு — விடிஞ்சால் போச்சு ” என்பதை எளிதாக கைக்கொள்ள முடிகிறது — அதற்கு இந்த காணொளியே சாட்சி …! அதனால் தான் நம் அரசியல் கட்சித் தலைவர்கள் எப்போதுமே தங்களின் அரசியல் பச்சோந்தித்தனத்திற்காக வெட்கப்படுபவது கிடையாது….
பிஜேபி அதிமுகவை ஊழல் கட்சி என்று ஷா சொன்னதைப் பற்றியோ — எடப்பாடி மற்றும் சகாக்களை டயர் நக்கி என்று அன்புமணி சொன்னதைப் பற்றியோ இன்று யாராவது கவலைப்பட்டால் — அவர்கள் … இவர்களின் ” யோக்கியதையை ” தேடுகின்ற பத்தாம்பசலிகள் தானே …? இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு — தங்களை ” அரசியல் விஞ்ஞானிகள் ” என்று கூறிக்கொண்டு காசுபார்க்கும் கூட்டம் “அந்த கூட்டணியை ” மக்களுக்கான கூட்டணி என்று உயர்த்தி பிடித்து தாங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான் …!
இவர்களின் ஆசை வெட்கம் அறியாது என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அது தேர்தல் நேர அரசியல் கூட்டணிக்கு மிக நன்றாகப் பொருந்துகிறது …? ” இதான் இந்தியா ” மருத்துவர் கூறியது இதைத்தானோ …?
அமீத் ஜீ அவர்களுக்கு போக– போக புரியாததெல்லாம் புரியும் … அப்படித்தானே …?
//அமீத் ஜீ அவர்களுக்கு போக– போக புரியாததெல்லாம் புரியும் …
அப்படித்தானே …? //
புரிந்தாலும் வாயைத்திறக்க மாட்டார்; ஊமையன் கனா கண்டது போல. 🙂