திருமதி தமிழிசை மற்றும் திரு.அன்புமணி – “யார் அறிவாளி” – போட்டி…!!!


கீழே ஒரு காணொளி –
திருமதி தமிழிசை மற்றும் திரு.அன்புமணி
ஆகியோர் சம்பந்தப்பட்டது….

சில சமயங்களில்
சில பழைய வீடியோக்களுக்கு
திடீரென்று மவுசு ஏற்பட்டு விடுகிறது…
குறிப்பாக தேர்தல் – கூட்டணி – நேரங்களில்….

முதலில் காணொளியை கண்டு விடுவோம்…

வீடியோவில் சவால் விடப்பட்டது வேறு காரணங்களுக்காக…

ஆனால், அதை தற்போதைய சூழ்நிலைக்கு
பொருத்திப் பார்த்தால் –

“அகில இந்திய கட்சி” – “NDA தலைமையிலான கூட்டணி”
என்று சொல்லி விட்டு, இப்போது 5 சீட்டுகளை பெற்றுக் கொண்டு,
அதிமுக தலைமையிலான கூட்டணி என்கிற வர்ணனையை
ஏற்கும் பாஜகவின் திருமதி தமிழிசையா ..

அல்லது –

தாங்கள் தொடர்ந்து தாக்கி வந்த
அதிமுக தலைமையை ஏற்று, கூட்டணி சேர்ந்து –
எதிர்பார்த்ததை விட அதிகமாக 7 + 1 சீட்டுகளை பெற்று,
சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருப்பதே
புத்திசாலித்தனம் என்று சொல்லும் –
பாமக-வின் திரு.அன்புமணியா….

இவர்கள் இரண்டு பேரில் (இப்போதைக்கு…!!!) –

-யார் அறிவாளி….? 🙂 :- 🙂

( முடிந்தால் சொல்லுங்களேன்…!!! )

.
—————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திருமதி தமிழிசை மற்றும் திரு.அன்புமணி – “யார் அறிவாளி” – போட்டி…!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    [ பதவி ] ஆசைக்கு வெட்கம் கிடையாது என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ, அது தேர்தல் அரசியலுக்கு மிக நன்றாகப் பொருந்தும்.என்பது தான் … ! அரசியல் என்று வந்துவிட்டால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது, நேற்றுவரை நீங்கள் எதை எதை ” பொய் — ஊழல் — கொள்ளை ” என்று மக்கள் நம்பும்படி சொன்னீர்களோ, அதையே இன்று ” உண்மை — நேர்மை –கொள்கை ” என்று அதே ஏமாளி மக்களை நம்புமாறு சொல்ல வேண்டும். .. !

    அரசியல் களத்தில் உள்ள கட்சியினர் தங்களை போன்றவர்களை யாரையும் – பச்சோந்திகள் — பிழைக்க தெரிந்தவர் — என்றெல்லாம் எப்பொழுதும் பொருள் கொள்ள மாட்டார்கள் … வெளியே மக்களை உசுப்ப கடும் எதிர்ப்பு காட்டுவது போல வாய் சவடால் மட்டுமே உதிர்ப்பார்கள் …!! அதையும் அனைவரும் நம்பும்படி மிகவும் — அறிவுபூர்வமாக — நாகரிகமாக ” அரசியல் சாணக்கியத்தனம் ” என்றே அழைப்பார்கள்…. இந்த பாவப்பட்ட – ஏமாளி மக்களும் கூட அப்படி சொல்லத்தான், நினைக்கத்தான் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள்…

    நம் அரசியல் கட்சித் தலைவர்கள் எப்போதுமே தங்களின் மாறுபட்ட கூட்டணி அரசியல் பச்சோந்தித்தனத்திற்காக வெட்கப்படுபவது — வெட்கப்பட்டது கிடையாது.என்பதுதான் உண்மையான நடைமுறை … அதனால்தான் அவர்களால் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கு பேரம் படிகின்றதோ, அந்த இடத்தில் நின்று கொண்டு காலத்திக்கேற்றவாறு பிழைப்பை ஓட்ட — பதவியை பிடிக்க விசுவாசமாக வாலாட்ட முடிகின்றது….
    தேர்தல் கால போக்கை கண்டுபிடித்து புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டவர்களால் மட்டுமே ஜனநாயகத்தில் தேர்தல் பாதையில் நின்று வெற்றி பெற முடிகின்றது என்றும் — அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் கூறி பசப்புவார்கள் …

    இவ்வாறான அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்ட மனம், வெட்கம் மானம் [ தங்களிடம் வரவில்லையென்றால் சுடு சொரணை இல்லையென்றும் — வந்திருந்தால் இருக்கிறது என்றும் வாய் கூசாமல் கூறுவார்கள் ] எல்லாம் பார்ப்பதில்லை என்பதால் நாமும் அதை நினைத்து துயரப்படாமல் வழக்கம் போல — யார் நல்லவர் — முழுசா சாப்பிடறவனை விட — கொஞ்சம் குறைத்து சாப்பிடறவன் யார் என்றும் — அய்யா கேட்டுள்ளபடி : யார் அறிவாளி …? என்றும் மனதில் நினைத்துக் கொண்டே விரல்களில் ” மை ” வைத்துக் கொள்வோம் — வரும் தேர்தல்களில் …?.

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    தேர்தல் ரிசல்ட் வரும் அன்றைக்கு பார்க்க வேண்டும் இவர்கள் முகத்தை –
    கேட்க வேண்டும் இந்த கேள்வியை !

  3. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    செல்வராஜன்

    நான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தங்கியுள்ளேன்.
    அங்குள்ள மக்களிடம் லோக்கல் அரசியல் பேசுவது எனக்கு பிடித்தமான ஓன்று. அனைத்து மாநில மக்களிடம் பேசியதில் இருந்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களைப்போல் அடிமை மனநிலை கொண்டவர்களை எங்கும் பார்த்தது இல்லை. அரசியல் தலைவர்களை நாம் கடவுளுக்கு நிகராக பார்க்கிறோம். கருணாநிதி குடும்பம் அயோக்கியத்தனமான குடும்பம்.

    அது சாரி

    இந்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் போன்ற சுயநல அடிமைகளை பற்றி எப்போதாவது பேசியிருக்கிறோமா ?கருணாநிதியை விட இந்த அடிமைகள் எந்தவிதத்தில் உயர்ந்தவர்கள் ?

    என்றைக்காவது இந்த இரண்டு சனியன்களையும் தலை முழுகி விட்டு தமிழ்நாட்டு நலன் கருதி மூன்றாவது தலைமை பற்றி விவாதித்திருக்கிறோமா?

    படித்த , அரசியலில் ஓரளவு விவரம் தெரிந்த நாமே பேசாத போது பாமரமக்கள் என்ன செய்வார்கள்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      உங்க பாயிண்ட் பற்றி யோசிக்கிறேன் ராஜா. அரசியல் கட்சிகளைக் குறை சொல்லும்போது நாம 80% மக்களைக் (வாக்களிப்போரில்) குறை சொல்ல மறந்துவிடுகிறோம். அந்த 80%, யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிப்பதில்லை. தங்கள் மனநிலைக்கு ஏற்றபடிதான் (அதாவது தாங்கள் விரும்பும் கட்சிக்குத்தான்) வாக்களிக்கின்றனர். ஆனால் மீதி 20% பேர், எது நல்லது என்று நினைத்து வாக்களிப்பதனால்தான் இருப்பதில் பெட்டர் என்ற அரசு நமக்கு அமைகிறது.

      இல்லையென்றால் விஜயகாந்த் வெற்றிபெற காரணமே இருந்திருக்காது அல்லவா?

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    Jksmraja

    // என்றைக்காவது இந்த இரண்டு சனியன்களையும் தலை முழுகி விட்டு தமிழ்நாட்டு நலன் கருதி மூன்றாவது தலைமை பற்றி விவாதித்திருக்கிறோமா? //

    அந்த 3-வது தலைமை எது என்று நீங்களே சொல்லுங்களேன்.
    விவாதிக்க ஆரம்பிக்கலாம்.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    எமது பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்ட Jksmraja அவர்களுக்கு …..
    அந்த சனியன் — இந்த சனியன் என்று எமக்கு எந்த பாகுபாடும் கிடையாது — குறிப்பிடவும் இல்லை … அப்படியிருக்க .. நீங்கலாக இரண்டு சனியன்களை பற்றி கூறியதுமில்லாமல் — மூன்றாவது ஒரு சனியனையும் உட்புகுத்தப் பார்ப்பது உங்களின் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் … எமது பெயரை குறிப்பிடாமலேயே தங்களின் கருத்தை பதிவிட்டு இருக்கலாம் …. !
    உங்களுடைய பார்வையில் தமிழ்நாட்டு மக்கள் அடிமை மனநிலை கொண்டவர்களாக இருக்கலாம் — வேறு சிலருக்கு இவர்கள் உயர்வாக தெரியலாம் .. அவரவர் கண்ணோட்டம் அப்படி … யாராக இருந்தாலும் இந்த அடிமை மனநிலைக்காரர்களிடம் தான் கையேந்தி வாக்கு பிச்சை கேட்டு வந்தார்கள் — வருகிறார்கள் — வருவார்கள் என்பது மட்டும் நிஜம் — அந்த மூன்றாவது தலைமையையும் சேர்த்து …. !!!

    • Rajendra's avatar Rajendra சொல்கிறார்:

      மூன்றாவது தலைமை யாராவதாகவும் இருந்துவிட்டு போகட்டும்

      விசிக வாக கூட இருக்கலாம்
      .
      ஆனால் தமிழ்நாட்டை பிடித்த பீடை திமுக , அதிமுக இரண்டும் அழிய வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.