…
…

…
பழைய சம்பவங்களை படிப்பதில் உள்ள சுவாரஸ்யமே தனி…
அதுவும் ஏதோ ஒரு விதத்தில் நாம் சம்பந்தப்பட்ட
விஷயமாக இருந்தால், அது – அதி….சுவாரஸ்யம்.
எம்ஜிஆர் அவர்களின் – – நாடோடி மன்னன் படம்
ரிலீஸ் ஆன சமயத்தில் 1958 வாக்கில் –
எனக்கு 14-15 வயதிருக்கும்..
அப்போது சில மாதங்கள் நான் சென்னையில் “கொண்டித்தோப்பு” என்று சொல்லப்படுகிற இடத்தில் ( வால்டாக்ஸ் ரோடு அருகே ) இருந்த எங்கள் உறவினர் வீட்டில் இருக்க நேர்ந்தது…
அந்த வீட்டிற்கு 3-4 வீடுகள் தள்ளி, திமுகவை உருவாக்கிய
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராசன் அவர்களின்
இல்லம் இருந்தது. என்.வி.என். அவர்களின் மூத்த பிள்ளை தான்
என்.வி.என்.சோமு (பின்னாளில் மத்திய மந்திரியாக கூட இருந்தார்…).
2-வது மகன் என்.வி.என். பன்னீர்செல்வம் – கிட்டத்தட்ட என் வயது
தான் அவனு(ரு..? )க்கும்…!!! ( அப்பா திமுகவில் இருந்தாலும், பின்னாட்களில் அவர் எம்ஜியார் கட்சியில் சேர்ந்து, குடிசை மாற்று வாரியத்தின் தலைவராக கூட பணியாற்றினார்…!)
வெகு சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி
விட்டோம்…. அப்போது நாடோடி மன்னன் ரிலீஸ் ஆவதற்கு
ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக, எம்ஜியார், திமுகவின் முக்கிய
தலைவர்களுக்கு மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு என்று ஒரு விசேஷ காட்சி திரையிட ஏற்பாடு செய்திருந்தார்…
என்.வி.என். அவர்களுடன், அவர் மகன் பன்னீர்செல்வமும்
படத்தைப்பார்த்து விட்டு வந்து என்னிடம் ஆர்வத்தைத் தூண்டும்,
எக்கச்சக்கமான செய்திகள் சொன்னான்….
எனக்கு அடக்கவொண்ணாத ஆவல்…எப்படியாவது உடனே படத்தைப் பார்க்க வேண்டுமென்று…. ஆனால், தியேட்டர்களின் அருகிலேயே போக
முடியவில்லை… படத்திற்கு பயங்கரமான வரவேற்பு… எக்கச்சக்கமான
கூட்டம்.
அப்போதெல்லாம் ரிசர்வேஷன் சிஸ்டம் கிடையாது… முன் கூட்டியே
டிக்கெட் வாங்குவதோ இயலாத காரியம்……ஏகப்பட்ட தடவை டிக்கெட்
கிடைக்காமல் திரும்பி, சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மிண்ட்
கிருஷ்ணா தியேட்டரில் படத்தைப் பார்த்தேன் ….!
அவ்வளவு ஆவலைக் கிளப்பிய படத்தின்
தயாரிப்பு பின்னணியைப்பற்றிய சம்பவங்களை
இப்போது ஒரு பழைய புத்தகத்தில் பார்க்க நேர்ந்தது…
(திரு.ஆர்.எம்.வீ.அவர்களின் அனுபவங்களைப்பற்றி,
திரு.ராணிமைந்தன் எழுதிய புத்தகம்….)
மிகவும் சுவாரஸ்யமான அந்த சம்பவங்களைப்பற்றிய செய்திகளை –
சம்பந்தப்பட்டவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொண்டு –
இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
————————————–
…

…

…

…

…

…

.
( இடைவேளை … 🙂 🙂 🙂 )
.
————————————————————————————————–



எதிர்பார்த்தவாறே இன்றைய சுவாரஸ்யம்
அதி-சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது; 🙂
அய்யா … ! திரு ஆர்.எம். வீரப்பன் கூறுவது பற்றி (திரு.ஆர்.எம்.வீ.அவர்களின் அனுபவங்களைப்பற்றி,
திரு.ராணிமைந்தன் எழுதிய புத்தகம்….) இந்த புத்தகம் கூறுகிற செய்தி ஒருபக்கம் என்றால் —
நாடோடி மன்னன் பற்றி திரு எம்.ஜி.ஆர் . அவர்கள் தன் சொந்த கருத்தை ” யாருக்கு வெற்றி ” என்று தலைப்பிட்டு எழுதி ஒரு மலராகவே வெளி வந்துள்ளது — அதில் 25 தலைப்பிட்ட பகுதிகளாக இருக்கிறது — அவை :
நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர்.
யாருக்கு வெற்றி?
சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?…..
கதை தேர்வுக்கு காரணம்…
கண்ணதான் வசனத்துக்கு வெற்றி…
பாடல்களின் முக்கியத்துவம்
இனிய, உணர்ச்சிகரமான இசை
ஒப்பற்ற ஒளிப்பதிவு
சவாலை சமாளித்தார் மேனன்
ஜம்பம் இல்லாத ஜம்பு
நிர்வாகிகளாக ஜொலித்தவர்கள்
சோடனை, ஒப்பனை, அலங்காரம்
பானுமதியின் பெருந்தன்மை
திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம்
அசத்தினார் சரோஜாதேவி
முத்திரை பதித்த முத்துக்கள்
வீரப்பாவை சிரிக்கச் சொல்லவில்லை!
பிங்கலனாக பிரகாசித்த நம்பியார்
உறுதுணையாக இருந்த துணை நடிகர்கள்
சகாயமாக சாதித்த சந்திரபாபு
சண்டைக் காட்சிகளின் சிறப்பு
கதையை செதுக்கிய மூவர்
சுப்பிரமணியம் அவர்களின் பெருந்தன்மை
நாகி ரெட்டி, வாசனுக்கு நன்றி
விமர்சித்த பத்திரிகைகளுக்கு நன்றி
சொந்தமாக ஏன் தயாரித்தேன் … இதில் // கதையை செதுக்கிய மூவர் // என்பதில் ஆர்.எம் .வீரப்பன் பற்றி குறிப்பிட்டுள்ளார்
முழு படத்தின் அம்சங்களை அவரே ஆராய்ந்து பதிவிட்டதை படிக்க http://www.lakshmansruthi.com/cineprofiles/nadodi_mannan-index.asp சொடுக்கவும் — சுவாரஸ்யங்கள் நிறைய இருக்கிறது …!!!
நன்றி செல்வராஜன்,
நிறைய தகவல்களை தருகிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்