…
…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை),
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர்
விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.
…

…

…
விஜயகாந்தை சந்தித்த பின்
செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்-
” நாங்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள்.
அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன்”…. என்றார்.
—————
புதிய நடிகர் திலகம்
தன் “முயற்சியில்” முழுவெற்றியும் பெற
வாழ்த்துவோம்….!!!
.
——————————————————————————–



கா.மை. சார்… ஸ்டாலினைக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள். அவர் ‘புதிய’ அல்ல. ‘பழைய’ நடிகர் திலகம் (சிவாஜிக்கு அப்புறம்). நீங்க அவருடைய நடிப்பை பல சமயங்களில் மதிக்கத் தவறிவிட்டீங்க.
நீங்கள், ‘நமக்கு நாமே’ பிரச்சாரத்தின்போது, ஷூ அணிந்த காலோடு, புதுப் பட்டுப் புடவை பளபளக்க வந்த விவசாயப் பெண்மணிகளோடு வயல்களின் நடுவே அவர்களின் கஷ்டங்களைக் கேட்டுக்கொண்டிருந்த காணொளி, புகைப்படம் பார்த்ததில்லையா?
வீட்டிலிருந்து கொண்டுபோன டிபன் கேரியரில் இருந்து உணவை, ஹோட்டலில் இலையில் தனக்குப் போட்டுக்கொண்டு, பொதுமக்களோடு பொதுமக்களாய் சாதாரண சாலையோர உணவகங்களின் உண்ட படங்களை மறந்துவிட்டீர்களா?
சரி..இதெல்லாம் போகட்டும்…. சட்டமன்றத்திலிருந்து வெளியே வரும்போது ஜம் என்று வந்துவிட்டு, உடனே காரில் ஏறி, பிறகு இறங்கும்போது சட்டை பட்டன்களைக் கழட்டிவிட்டு இறங்கி, சட்ட மன்றத்தில் என் சட்டையைக் கிழித்தார்கள் என்று போஸ் கொடுத்தாரே, தொலைக்காட்சியில் காணொளிகளியைக் காட்டினார்களே, அந்த நடிப்புக்கும் நீங்கள் மார்க் போடவில்லையா?
முதலில் குட்டியை விட்டு ஆழம் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு, நெடுநாள் நண்பர் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று (மட்டும்) நேரில் விசாரிக்கப் போனது மட்டும் உங்களுக்கு நடிப்பாகத் தெரிகிறதே… ஆச்சர்யம்தான்.
இதில் மிக வருத்தம் தருவது விஜயகாந்தின் உடல் நிலை தான். இப்போதைக்கு உடம்பை பார்த்துக் கொள்வது நல்லது.
எதிர் கட்சியாக இருக்கும்போது வந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார். இப்போது பிரச்சாரத்துக்கு போகமாட்டார் என்பதால் தே தி மு க வின் செல்வாக்கு கேள்விக்குறி.
மனைவியும் மச்சினரும் அவர் பெயரை encash பண்ணப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான்!
// மனைவியும் மச்சினரும் அவர் பெயரை encash பண்ணப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான்! //
அதே; அதே;