…
…
“அஞ்சு சீட்” வாங்கிய டெல்லி அவதாரம் 40 சீட் பிரித்துக் கொடுத்த உள்ளூரை மிரட்டிய காட்சிகளை நேற்றிரவு வீடியோக்களில் காண முடிந்தது….
” காரியம் ஆகும் வரை காலைப்பிடி;
காரியம் முடிந்தால் கழுத்தைப்பிடி ” – தமிழில் இல்லாத பழமொழிகளா..?
ஆனால் – டெல்லிக்கு தெரிந்த பழமொழி உள்ளூருக்கு தெரியாதா என்ன…? எப்போது எதைப்பிடிக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு புரியாத விஷயமா என்ன…?
அஞ்சு சீட் டெல்லி அவதாரம்
40 சீட் உள்ளூருக்கு உத்திரவு போடுகிறது…
யார் ” ரியல் பாஸ் ” -என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.
” இனி இங்கு பிரச்சாரங்கள் எல்லாம் “அஞ்சு சீட்”
பெயரிலேயே தான் நடக்க வேண்டும்…
(நாற்பதும் தொலைய நல்ல வழி… 🙂 🙂 🙂 )
நாங்கள் சொல்லும் இடங்களுக்கு –
இணையும், துணையும் வர வேண்டும்.
மற்ற இடங்களில் “லோக்கல்” தலைகள் போதும்…!!!
( இதில் இன்னும் ஒரு குட்டி க்ளைமாக்ஸ் பாக்கி இருக்கிறது…!!! )
தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்….
இனி அடுத்த 3 மாதங்களுக்கு நிறைய “டெல்லி அவதாரங்களை”
காணும் பாக்கியமும் அமிழ்திலும் இனிய அவர்களது மொழியை
கேட்கும் பாக்கியமும் கிடைக்கும்…!!!
—————————————————
ஹிந்து ஆங்கில நாளிதழில் நேற்று வெளியான ஒரு கார்ட்டூன்……
சில கார்ட்டூங்களுக்கு விளக்கம் கொடுத்தால் ரசிக்காது…!!! 🙂 🙂
…

…
.
————————————————————————————————-



// ஓ.பன்னீர் செல்வத்திற்கு உத்தரவு போட்டாரா அமித்ஷா? வைரல் வீடியோ பின்னணி என்ன //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/a-video-amit-shah-ops-goes-viral-342139.html ….
உண்மையான வீடியோவா …இல்லை போலியானதா என்கிற ஆராய்ச்சி இருந்தாலும் — திருத்த முடியாத கட்சிகள் — நமுட்டு சிரிப்புடன் மக்கள் …!
அய்யா ..! இந்த செய்தி பற்றி // புல்வாமா தாக்குதலில் மோடியைச் சுற்றும் மர்மங்கள்! // https://minnambalam.com/k/2019/02/24/33
நான் அந்த சப்ஜெக்டை தொடாததற்கு –
சில காரணங்கள் உண்டு …
நண்பர்கள் இந்த மின்னம்பலம் செய்திக் கட்டுரையை
அவசியம் படிக்க வேண்டும்.